இலாபம் என்ற சொல்லில் இல், ஆதல் என்ற இரண்டு பகவுகள் உள்ளன.
இல் என்பது இன்மை. இன்மை புகுந்துவிட்டால் புதிய வரவு இல்லை என்று பொருள்.
அடுத்து ஆதல் என்ற சொல் வருகிறது. இச்சொல்லுக்கு திரிபுகள் ஏற்பட்டுள்ளன. ஆ + அம் > ஆவம். ஆ (என்பது ஆக்கம் ) என்னும் வினையடி. ஆவம் என்பது வகர பகரத் திரிபால் ஆபம் என்றாகிறது.
வரவின்மை ஆக்கம் ஆவதுதான் ( மாறுவதுதான் ) மேல்
ஆக்கம் ஆகிய இலாபம்.
இல்லாமை ஆக்கம் ஆனால் அது இலாபம்.
இல் என்பதற்கு இடம் என்றும் பொருள் உள்ளது. இடத்தில் ஆவது என்பது வருமென இருக்கும் இடத்தில் ஆக்கம் பெறுவது என்றும் கூறின் அதுவும் சரியாகும்.
profectus என்ற இலத்தீன் முன்னேற்றம் என்ற பொருள் உள்ளது. தமிழ் இலாபத்தில் ஆவது என்பது முன்னேற்றமே ஆகும்.
தமிழர் பண்பாட்டில் உள்ள கருத்துப்படி ஒரு கெடுதல் ஏற்படின் அதை நலம் நலம் என்ற சொற்களால் மறைத்துக் குறிக்கவேண்டும். நல்கூர்ந்தார் என்ற சொல்லுக்கு நனமை அடைந்தோர் என்பது சொற்பொருள் ஆனாலும், வறுமை என்பதுதான் புரிந்துகொள்ளவேண்டிய பொருள் ஆகும். வறுமையிலும் செம்மை என்பதே மந்திரம் ஆகும். வறுமையில் ஒழுக்கம் காக்கவேண்டும், அதுவே முதன்மை யாகும் என்றறிக. ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்பதே வள்ளுவனார் குறள். அதுதான் விழுப்பம் தருதலால்.
இல்லாதவிடத்து ஆக்கமே இலாபம் என்றும் கூறலாம்.
ஒருவனுக்குத் தொழில் தொடங்கிய காலத்திலிருந்தே அல்லது பரம்பரை பரம்பரையாக முதலை விட அதிகமாக வருமானம் வந்துகொண்டே இருந்தது என்று வைத்துக்கொள்வோம். அப்படி வருவது சிறப்புத்தான் என்றாலும் இதை அவன் மாமூலாகக் கருதுவான். அவனிடம் யாரும்போய் சிறப்புடன் செய்கிறீர்கள் என்றால், " புதியது ஒன்றுமில்லை, என்றும் உள்ளதுதான், எனினும் இறைவனின் கருணை" என்பான். அவனிருக்கும் வரவு உயரத்திலிருந்து இன்னும் மேல்போகவேண்டும். அப்போது மனம் மகிழும். எப்போதும் வருவதற்கு எப்போதும்போல் செலவுகள் பட்டியல் இருக்கும். வாங்கித் தின்போர் பட்டியலும் நிரந்தரம் ஆனதாகவே இருக்கும். ஆகவே இலாபம் என்று கருதுவது ஓர் ஒப்பு நிலையிலிருந்து மேலாக வரும் வருமானம். புதிதாக ஒன்றும் இல்லையானால் அதுவும் ஒரு இல்லாமைதான். புதியது செய்யப் புதுவருமானம் வேண்டும். இதை இலாபம் என்ற சொல்லில் உணரவேண்டும். Similarity to existing or earlier conditions is nothing new. A normal margin has already been established. The margin must move to show something new. இல் என்ற சொல்லில் இதை உட்கிடை என்க.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக