சனி, 22 பிப்ரவரி, 2025

மாமூலர் என்ற சொல்.



இஃது ஒரு முனிவரின் பெயராக அறியப்படுகிறது. ஓர் இடைப்பையனின் பெயராக இருந்து பின்னர் அது ஆள்மாற்றத்தினால் முனிவரின் பெயரானது என்பது இவரின் வரலாறாக ஆனதென்பர்.

மூலம் என்பது ஓர் நோயின் பெயருமாகும்.

இந்த நோயும் தொன்றுதொட்டு நாட்டில் இருந்ததுதான். இவ்வாறு. ஐயப்பட்ட நோயின் பெயரை மனிதருக்கு இடுவரா என்றால் ஐயத்துக்கு உரியதுதான். இதற்கு மூலம் வேறு மூலன் வேறு என்னலாம். ஐயப்பாட்டை விலக்க இது போதுமானது என்று கருதலாம். அல்லது மா என்ற பெருமைக் கருத்தைச் சேர்த்து முனிவருக்குப் பெயர் வந்ததனால் இடக்கு எந்துவுமில்லை ஆயிற்று என்றும் கருதியிருக்கலாம்.

இனி மாமூலர் என்ற பெயரைக் காண்போம்..

மா என்பது பெருமைக் கருத்து.

மூலர் என்ற சொல்லின் அடிச்சொல்  முல் என்பதுதான்.  முல் என்பது ஆதியில் உள்ளது என்று பொருள். இவ்வடி முல் > முன் என்றும் திரியும்.   முல் என்ற அடியே  மூல் என்றும் திரியும்.. இதிலிருந்தே மூலிகை என்ற சொல் வந்துள்ளது.   முல் > மூல் > மூல்+ இ + கை > மூலிகை என்பது  இச்சொல்லில் இ என்பது இடைநிலை என்றும்  கை என்பது விகுதி என்றும் கொள்ளற்குரியன. மூல் என்ற நெடில் முதலான அடியிலிருந்து   அன் என்ற ஆண்பால விகுதி இணைந்து  மூலன் என்ற சொல் வந்துள்ளது.  இதனுடன் மா என்ற அடைச்சொல் சேர்ந்து  மாமூலர் என்ற் சொல் அமைகிறது.   இதன் பொருள் பெருமை வாய்ந்த முற்கால முனிவர் என்பதுதான்.  இஃது ஓர் இயர்பெயரன்று. இது சிறப்புப்பெயர் என்றே சொல்லவேண்டும்.

இந்தச் சிறப்புப் பெயரிலுள்ள மூலம் > மூலன் என்பதிலிருந்து இடைப்பையனுக்கும் பெயர் கூறப்பட்டுள்ளது.  இதுவும் இயற்பெயர் அன்று. பெயர் அறியப்படாத ஒரு பையனுக்குக் கதைக்கென வைக்கப்பட்ட பெயர்தான் இடைப்பையனைக் குறிக்கும்  மூலன் என்ற பெயரும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர். 












கருத்துகள் இல்லை: