புதன், 26 பிப்ரவரி, 2025

சாரங்கபாணி என்னும் பெயர்

சாரங்க பாணி என்ற பெயரை சொல்லாய்வு முறையில் காண்போம்.

சாரங்கம் என்பது வில் என்று பொருள்படும் ஒரு சொல். இதில் சார் என்பது முன் சொல்லாய் உள்ளது.  சார் என்பது ம்   சேர் என்பதும் ஒரு பொருட் திரிபுகள்.  

வில்லிலிருந்து புறப்பட்டுக் குறிவைத்த இடத்திற்குச் சென்று சேர்வது அம்பு.  அமபு சார்ந்திருக்கும் வில்லிலிருந்து புறப்படுவதால்  சார் என்ற சொல் முன் வைக்கப்படுகிறது. விட்டபின் குறிவைத்த இடத்தை அது அணுகிச் செல்லும்.

இப்போது  சார்+ அண்+ கு வரை வந்துவிட்டோம்.    அண் கு என்றால் அணுகிச் சேர்வது என்று பொருள்.  கு என்பது சேர்வுக் குறிப்புச் சொல்.   அம் விகுதி இறுதியைக் குறிக்கிறது.  அம் அத்துடன் முடிவது கருத்து.  அல்லது வெறும் விகுதி எனினும் ஒத்துக்கொள்ளலாம்.

அதாவது அம்புக்கான வேலைக்கு அமைந்தது  வில் என்று பொருளாகிறது.

சார்ந்திருந்த அம்பினை அண்மிச் சேர்வித்து இயக்கும் கருவி என்று பொருள்.

அண்கு என்பது அங்கு என்று திரியும்.

எனவே சாரங்கம் என்பது தெளிவான தமிழ்ச் சொல்லாகிறது.

எல்லா ஆயுதங்களும் பண்ணப்படுபவை. அதாவது தேர்ந்தவர்களால் உருவாக்கப் படுவன.

பண்ணுதல் :  பண் > பாண் ஆகும்  சுடு  சூடாகிறது.அதுபோல் முதனிலைத் திரிபு.  மீண்டும் அம் விகுதி வந்து பாணம் ஆகிறது  பாணத்தை வைத்திருப்பவன் பாணி.  

ஆதலின் சாரங்கபாணி எனில் வில்லாளன் என்று பொருள்.

இது நல்ல தமிழ்ச்சொல்தான்.  

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

அடுத்து வருபவை:


வந்தனம் -  மார்ச்சு 9ல்  வெளிவரும்.

சித்தர் -  மார்ச்சு 4ல்  வெளிவரும்.


 


கருத்துகள் இல்லை: