சந்திர னென்ற சொல்லில் திறன் > திரன் என்னும் பகவு உள்ளது. திரம் என்பது ஒரு விகுதி என்பதை முன்னர் விளக்கியுள்ளோம். சிலசொற்களில் விகுதி வெறும் சொல்லாக்கத்திற்கே பயன்படுகிறது. அதற்குச் சிறப்பான அல்லது எந்தப் பொருளும் இருப்பதில்லை. இதற்கான விளக்கத்தைச் சில முன் இடுகைகளில் பதிவிட்டுள்ளேம். (ஏம் - ஒருவினைமுற்று விகுதி). வேறு சில சொற்களில் விகுதிக்குப் பொருத்தமுள்ள பொருளிருப்பதாகக் காட்டமுடியும். இவற்றைச் சொல்லாய்வின் மூலம் அறிந்துகொள்ளமுடியும்.
சந்திரன் என்பது ஒரு சமஸ்கிருதச் சொல்லென்போர், அதற்கு வேறு வேரும் வேர்ப்பொருளும் கூறுவதுண்டு. நம் கொள்கைப்படி, சமஸ்கிருதம் இந்தோ ஆரியத்திலிருந்து நாம் பெற்றதன்று. இந்தோ ஆரியம் என்பதே ஒரு வெறும் புனைவுதான். அது இந்திய மக்களால் வளர்க்கப்பட்டுச் செழிப்பானதாக ஆக்கப்பட்டு இலக்கிய வளமும் உறுத்தப்பட்ட ஒருமொழி ஆகும். அதிலிருந்து மேலைநாட்டினர் பல சொற்களைக் கடன் கொண்டனர். கொண்டு தம் மொழிகளை வளப்படுத்திக் கொண்டனர். தமிழ்க் குடிகளுள் பாணர் என்போர் ஒரு தொழிற்பிரிவினராய் இருந்தனர். இராமகாதை என்பதே பிராமணர் அல்லாத ஒரு புலவரால்தான் பாடப்பட்டது. அவர்தான் வால்மிகி முனிவர்.
இராமர் கதையில் பிராமண சூழ்ச்சி என்று ஒன்றுமில்லை.
ஆர் இயம் என்றால் நிறைவான இசைக்குழு என்பதுதான் பொருள். இயம் - இயக்கப்படுவதான், ஓர் இசைஞர் குழு.
தவறாகப் பொருத்தி உரைக்கப்பட்டதால் இன்று ஆரிய என்ற சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் உள்ள நிலை ஏற்பட்டுவிட்டது.
இனிச் சந்திரன் என்ற சொல்லைப் பார்ப்போம்.
சந்திரன் பூமிக்கு அருகில் உள்ள ஒரு கோள் ஆகும். இந்தப் பொருள் சந்திரன் என்ற சொல்லிலே காணலாம்.
அண்> சண் என்று திரிவது, அமணர்- சமணர் என்பதுபோல அகர சகரப் போலி. சண்+ திரன் > சந்திரன். ண்+தி என்பது ந்தி என்று திரியும். இதை முன் இடுகைகளில் காட்டியுள்ளேம். இது பாண்+ சாலி > பாஞ்சாலி என்று திரிந்தது போலுமே ஆகும். திரௌபதை என்ற அரசி பாணர் வகுப்பைச் சேர்ந்தவள். பாணர்களும் அரசாண்டு உள்ளனர். வள்ளுவன் அரசனாய் இருந்த பெரியோன் என்பது இற்றை ஆய்வுகளால் தெரியவந்துள்ளது.
திரௌபதை என்ற சொல்லும் பல்பிறப்பி ஆகும். இங்கு இது திரு - உயர்வான, அவ்வை< அவ் = அம்மை, பதி - நற்குணங்கள் பொதிந்தவள் என்று பொருள்தாரும். இதற்கே வேறு விதமாகவும் பொருள்காணக் கூடும். எதுவும் தவறு அன்று, பல்பகுப்பு வசதியுள்ள சொல்லால் இப்பெயர் ஆக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.
சந்திரனுக்குத் திரும்புவோம். பூமிக்கு அருகில் உள்ளது சந்திரன் என்பது முன்னரே தமிழரும் ஏனை இந்தியரும் அறிந்திருந்தனர் என்பது தெளிவாகிறது. அது அண் ( அண்மை) மையில் உள்ள கிரகம் என்பது அறிவியற் கருத்து என்றாலும் அதையும் இந்தியர் அறிந்த அறிவுடையவர்களாய் இருந்தனர் என்பது இவ்வாய்வினால் தெரிகிறது.
சந்திரன் என்பது அன் விகுதியும் பெற்றுத் தொன்றுதொட்டுத் தமிழில் வழங்குவதால் அது ஏற்புடைய சொல்லே. அது தமிழென்றாலும் சமஸ்கிருதம் என்றாலும் ஒரு மாறுபாடும் இல்லை.
சம் கதம் > சம+ ஸ் + கிருதம் என்பது, சம ஒலி உடைய மொழி . ஒரு சீனனோ வேற்று மொழியினனோ செவிமடுத்தால் அவனுக்கு அதன் ஓசை தமிழ் போன்ற தாகவே இருக்கும். சுனில்குமார் சாட்டர்ஜி சமஸ்கிருத மொழி தென் மொழிகளின் ஒலியமைப்பு உடையது என்று கூறினார். இலக்கணம் எழுதிய பாணினி ஒரு பாணப் புலவன். பிராமணன் அல்லன்.பிரம்மத்தை உணர்ந்தவன் பிராமணன் என்பதால் பாணினியைப் பிராமணன் என்பதில் தவறு ஒன்றுமில்லை. சங்கதம் என்றாலும் சமஸ்கிருதம் என்றுதான் பொருள்.
இவ்வாய்வின் மூலம், சந்திரன் பூமிக்கு அருகில் இருக்கும் கோள் என்பதை இந்தியர் அறிந்தவர்கள் என்பது புலப்படுகிறது.
தண் திரள் என்பதும், தண் திர> சண் திர> சந்திர என்றாகி, சந்திரன் ஆகும்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக