தீ + ஆகு+ அரி + அன்.
தீயுமிழ்ந்து பகன்முழுமையும் ஒளிதந்து மாலையில் மறைத லுடையது சூரியன்.
சூரியனில் தீயிருப்பதும் அது தொல்லைவிலிருந்தாலும் அருகில் இருப்பதுபோலவே நம்மைச் சுடுவதும், சிலவேளைகளில் அதன் வெப்ப அலையிற் பட்டு மனிதரும் பிறவும் உயிரிழப்பதும் இன்ன பிற அனைத்தும் நீங்கள் அறிந்தவைதாம்.
இதில் உள்ள தீ என்னும் சொல், தி என்று குறிலாகும். இவ்வாறு தினம் என்ற சொல்லிலும் வந்துள்ளது இதற்கு எடுத்துக்காட்டு: தீ > தி > தி + இன்+ அம்> தி+ ன்+ அம் > தினம். இங்கு வரும் இன் என்ற இடைநிலை, தன் முதல் எழுத்தை இழக்கும்.
ஆயினும் தீபம் என்ற சொல்லில் தீ+ பு + அம் என, குறுகாமல் வரும்.
தீ ஆகு என்பவை திவாகு என்று, குறுகினபின் வகர உடம்படு மெய் பெறும்.
அரி என்ற சொல்லில். அடிச்சொல் அர் என்பது. இவ்வாறு அர் என அடிச்சொல் ஏற்று, அன் விகுதி பெறும்.
தி ஆகு அர் அன் என்பவை இணைய, திவாகரன் என்ற சொல் உருவாகும்.
அர் > அரியமா > பெரிதாகிய அரி.
அர் > அருக்கன் ( அர்> அரு> அரு+ உக்கு+ அன்> அருக்கு+ அன்) > அருக்கன்.
உ- என்றால் முன். கு என்பது சேர்வு குறிக்கும் பழஞ்சொல். இப்போது உருபாகவும் தன் கடனாற்றுகிறது.
அர்> அரு> அரு+ உண்+ அன் > அருணன் என்பதில் உண் இடைநிலை வந்தது.
திவா என்ற சுருக்கச்சொல்லிலும் தி ( தினம்), வா- வருவோன் என்பது காண்க.
தீ என்பது தி என்று குறிலானது.
நபோமணி என்ற சொல்லிலும், நாள் என்பது, ந என்று குறுகிற்று. நாளெல்லாம் வானில் போகும் மணி, நபோமணி.
உங்களுக்கு நேரம் போக, சொற்களைச் சுருக்கி விளையாடிப் புதிய சொற்களைப் படைத்து ஒரு விளையாட்டு உண்டாக்கினால், இரத்த அழுத்தம் குறைந்து இன்பமாய் வாழலாம்.
விண்ணில் அச்சாகத் திகழ்பவன் சூரியன்.
வி > விண். அல்லது விண்> வி .
வி + அச்சு + ஆன் > விவச்சு ஆன் > விவச்சுவான். இதுவும் சூரியனுக்கு இன்னொரு பெயர்.
இங்குக் கூறிய நெறிமுறைகளைப் பின்பற்றி, சூரியனுக்கு ஐந்து பெயர் வைத்து தீபாவளியைக் கொண்டாடுங்கள்.
தீபாவளி வாழ்த்துக்கள்.
அறிக மகிழ்க
மெய்ப்பு இனி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக