இன்று இதனைத் தெரிந்துகொள்வோம். ஆனால் யாம் தலைப்புக்குள் அடங்கி எழுதப்போவதில்லை.
தமிழ்ப் பையன்கள் ஒரு நடைப்பயிற்சிக்கு செல்லவேண்டி யிருந்தது. ஆனால் அவர்களில் ஒருவன் இன்னும் உறங்கிக்கொண்டிருந்தான். ஒருவர் சொன்னர்: அந்தப் பையனை "ஒழுப்பி " விடு என்று! இதன் காரணமாக மிகுந்த சிரிப்பொலி எழுந்துவிட்டது. எகரம் ஒகரமாகத் திரியுமா என்பது திரிபுகளைக் கற்போர் அறிந்துகொள்ளவேண்டியதாகும். அந்தப் பையனைக் கேட்டபோது, அவனுடைய சிற்றூரில் அப்படித்தான் சொல்வார்களாம்.
இவ்வாறு நாமறியாத திரிபுகளும் உலகில் தமிழிலும் ஏனை மொழிகளிலும் இருக்கும். எந்தக் கேள்விக்கும் யானே அறிந்தவன் என்று பதிலிறுத்துவிட இயலாது,
சீனக் கிளைமொழிகளில் எண்ணிறந்த திரிபுகள் உள்ளன. இந்தோனேசியக் கிளைமொழிகளிலும் பற்பல. இந்தோ திரிபுகளின் அட்டவணை நூலென்றை நூலகத்தில் கண்டு சிலமணி நேரம் அதில் யாம் ஆழ்ந்துவிட்டோம்.
நாவு எப்படியும் திரும்பும். திரும்பாதது பேச்சில் பல்மட்டும் தானோ?
பகவனின் கீதைதான் பகவத் கீதை. இங்கு பகவன் என்பது பகவத் என்று வந்து சிறப்பாகவே உள்ளது,
பகவனதுகீதை.
இதில் அன் விகுதி குன்றி,
பகவது கீதை > ( இதில் உகரம் குன்றி ) > பகவத் கீதை,
இதற்குத் தமிழின் மூலம் சந்தியைச் சொல்லாமல் சமஸ்கிருதம் மூலம் சொல்லலாம்.
பகவத் என்பது வேறுமொழி என்று சொல்கையில், தமிழ் இலக்கணத்துக்கு அங்கு வேலை இல்லை.
இன்னொரு சொற்றொடர்: அதுலன் முதலி.
அதுலனது முதலி, அதுலது முதலி, அதுலத் முதலி. இங்கு அன் கெட்டு, உகரமும் கெட்டது.
அதுலன் என்றால் இறைவன்.
இனி எகரம் அகரமாய்த் திரியுமா என்று பார்ப்போம்.
கெல்லுதல் என்ற வினைச்சொல் கல்லுதல் என்று திரியும். கெ>க = எ> அ.
இனி இவற்றைக் கவனிக்கவும்:
கத்து > கது > காது, ( ஒலி கேட்கும் உறுப்பு)
கத்து> கது > கது+ ஐ > கதை. ( ஒரு புனைசொலவு)
கது> கதம். ( சங்கதம்: இணைப்பாகச் சொல்லப்படுவது, சமஸ்கிருதம்).
கது > கதி ( சங்கதி) சேர்த்துச் சொல்வது.
கது > கதறு ( ஒலியெழுப்பல்).
கத்து > கது > கதை > காதை ( கதைப்பகுதி)
காது> காதிப். (அல்காதிப் - அரபுச் சொல்லறிஞர் )
காது> கடைக்குறைந்து: விகுதி பெற்று காப்பு> காப்பியம்
சொல்லப்படும் நிகழ்வு அல்லது ஒலித்தொடர்.
எனப் பல திரிபுகள் காண்க.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக