கவிராயர் என்ற சொல் இப்போது மக்களிடையே வழக்கிலில்லை.
இன்றைய வழக்கு அல்லது சொற்பயன்பாடு, கவியரசர் என்பதுதான். பாவேந்தரென்றும் கூறுவர். கவி, பா என்பன ஒருபொருட் சொற்கள்.
கம்பர் என்னும் கவிஞர்: இவர் இராமாயணத்தைத் தமிழில் பாடினார். வால்மிகி என்பவர்தாம் இராமயணத்தைப் பூசைமொழியில் ( சமஸ்கிருதத்தில்) பாடினார். இவர் வால்மிகியை " நாவினார்" என்றார்.
தேவ பாடையின் இக்கதை செய்தவர்
மூவ ரானவர் தம்முளும் முந்திய
நாவினார்"
என்றார். நாவினார் என்பதற்கு உண்மையில் நாவலர் என்று பொருள்கொள்ளவேண்டும். வெறுமனே "நாவை உடையவர்" என்று மட்டும் கூறுதல் முட்டாள்தனமாகும். திறனுடன் பாடும் நாவை உடையவர்" என்றால் சரியாக இருக்கும். வல்ல நாவினார் என்பதும் நாவலர் என்பதும் ஒன்றே.
பாடல் வல்ல நாவினாரைத் தாம் நாம் கவியரசர் என் கின்றோம்.
ஓர் இருநூறு ஆண்டுகளின் முன்னர் வாழ்ந்த தமிழ்ப்பெருங்கவிகள் கவிராயர் எனப்பட்டனர். இது கவியரசர் என்பதே.
அரசர் என்ற சொல் அரையர் என்றும் வரும். அரையர் என்பது திரிபு அல்லது போலி.
அரையர் - இது ராயர் என்று பேச்சில் திரிந்து வழங்கும்.
இந்தத் திரிபுச் சொல் சமஸ்கிருதத்திலும் வழங்கிற்று.
பலருக்கு ரை என்பது வருவதில்லை. ராய், ராயர் என்றுதான் வரும். யகரத்துக்குப் பதில் வகரமும் வரும். அவ்வாறு வரும்போது ராவ் என்று மெய்யெழுத்தாக முடியும்.
சில நிலப்பகுதிகளில் இந்த ராவ்களை 'ராவ் அது" என்று பணிவுடன் சொன்னார்கள். ராவ் அது ( அவர் ராவ் அல்லது அரசர் அல்லது அதிகாரி) என்பது ராவ் அது > ராவது > ராவத் என்று ஆனது. ராவது என்பதில் ராவத் உ என்று உ இறுதியில் ஒலிக்கிறது, ஆனால் து என்று சேர்ந்து ஒலிக்கிறது.
ராய் அல்லது ராவ் என்பது இலத்தீன் மொழியில் ரெக்ஸ் என்று திரியும். ரெக்ஸ் என்போன் அரசன். பெண்பால் ரெஜினா.
இதை யாம் பிறர் எழுதிய நூல்களில் பார்க்கவில்லை. நூலை யார் வேண்டுமானாலும் பதிப்பித்து வெளியிடலாம். ஆனால் பகர்ப்பு அல்லது காப்பி செய்யக்கூடாது, அனுமதி இல்லாமல்.
கவிராயர் என்பது கவி+ ராய் + அர். இதிலும் ராய் இருக்கிறது.
திரிபுகளை உணருமுன் இறந்துவிட்டவர்கள் பலர். கோவிட்டில் பலர் இறந்தனர். பாவம்.
இலக்கணம் உணர்ந்தோர் அறிக.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக