இந்தச் சொல்லை வேறு சொற்களால் பொருளொப்புமை செய்தல் வேண்டுமானால் அதற்குச் சில சொற்களைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும்:
சுமத்தல், தரித்தல், தாங்குதல், எடுக்குதல், எடுத்துதல், ஏற்றுக்கொள்ளுதல், தூக்குதல், வேய்ந்துகொள்ளுதல், வாங்கிக்கொள்ளுதல், பற்றுதல், பொருந்துதல், தொடக்குதல், தெரிந்துகொள்ளுதல் என இவை எல்லாவற்றையும் அங்கீகரித்தல் என்பதற்கு இணையாக வல்லவர்கள் ஆளக்கூடும். போதுமான பயிற் சியில்லாதவர்க்கு இயலாமை ஏற்படலாம். ஒருபொருட்சொல் அகரவரிசைகளின் மூலம் இன்னும் பலசொற்கள் கிட்டலாம்.
இதற்கு மிக்க நேரான பொருளொருமை " அதற்கு இணையாக ஈர்கரித்துக்கொள்ளுதல்" என்ற சொற்றொடராக இருக்கக்கூடும்.
"அண் கு ஈர் கு அரித்துக்கொள்ளுதல்''
இதனை வாக்கியப்படுத்தினால் "அண்மிச் சேர்ந்து ஈர்ப்பில் இணைந்து அருகில் கொணர்தல்" என்பது பொருளொற்றுமையைச் சிலர்க்குத் தரக்கூடும். சிலருக்கு புரியாமலும் இருக்கலாம்.
இங்கு கரித்தல் என்ற சொற்பகவு ( அங்கீ - கரித்தல் ) : கரித்தல் என்ற முழுச்சொல் அன்று. கு அரு இ - த்தல் என்ற பகவுகளின் சேர்க்கையான பகுதிச்சொல்லே ஆகும். அரு இ> அரி> அரித்தல் என்பது அருகிற்கொணர்தல் என்று பொருள்படுவதே ஆகும். கு அரி> கரி என்பதை இதுபோன்ற சொற்புனைவுகளில் ஒரு துணைவினையாக ஏற்றுக்கொள்ளலாம். கரி என்பது ஒருவகைச் தமிழ்ச் சொற்புனைவுகளில் உண்டான ஒரு துணைவினை அமைப்பு ஆகும்.
இச்சொல்லில் அங்கு என்பது அண்மிச் சேர்ந்து என்ற பொருளாகும். அங்கு என்ற இடச்சுட்டினைத் தவிர்த்துள்ளோம், இடச்சுட்டுப் போல் தோன்றினும் இது இடச்சுட்டுடன் தொடங்கிய சொல் அன்று. அண் கு = அண்மிச் சேர்ந்து என்பதுதான்.
அண்குஈ என்பது அங்கீ என்றாகும். ஈர் ( ஈர்த்தல்) என்பதில் உள்ள ரகர ஒற்று மறையும். அண்கீ > அங்கீ.
இதில் மீண்டும் கு சேர்ந்துள்ளது.
பின் அரு இ என்பவும் சேர்ந்துள்ளன.
+கு+ அரு+ இ > கரி என்றாகும்.
இப்போது அங்கீகரி என்ற முழுவுருவும் கிடைத்துவிட்டது,
இப்போது எல்லாத் துண்டுகளையும் இணைக்க:
அண் கு ஈ( ர் ) கு அரு இ > அங்கீகரி என்றாகும்.
இப்போது இச்சொல்லை எவ்வாறு அமைத்தனர் என்பதை அறிந்து கொண்டோம்.
எது சரி என்பதைவிட, எது சொல்லமைப்பாளனின் மூளையில் வேலை செய்த பகவுகள் என்பதே முதன்மையாகும். இவை நீங்கள் அறிந்துகொண்டவற்றுடன் வேறுபடலாம்,
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக