செவ்வாய், 22 அக்டோபர், 2024

அன்> சன்> சனி-- ஜன்னி என்பவற்றில் சொல்பொருள் வலிமை

 இன்று ஜன்னி என்ற சொல்லை ஆராய்வோம்.  வெடுவெடுவென்று உடல் விறைத்து, நடுநடு வென நடுங்கி கால்கை உதறி உடலம் உறைந்து காய்ச்சல் வருவது தான் ஜன்னி என்பர்.  ஜன் என்பதன் அடிச்சொல்லாக ஜனி-த்தல் என்ற சொல்லை ஆசிரியர் சிலர் கூறுவர். ஜன்னி என்றால் நிமோனியா என்ற ஆங்கிலச் சொல்லால் குறிப்புறும் பிணி என்றும் கூறப்படுகிறது.

நுரையீரலின் ஒரு பகுதியிலோ இருபகுதிகளிலுமோ இருக்கும் காற்றுச்  சிற்பைகளில் ( sacs)  நீர் அல்லது சீழ் ஏற்பட்டு மூச்சு விடுதலைக் கடினமாக்கிச் . சளி அல்லது சீழால் இடைமறித்து , காய்ச்சல், குளிர்நடுக்கம்,  இருமல் , இழுப்பு, திணறல் முதலியன உண்டாக்கித் தொல்லைப்படுத்தும் நோய்தான் நிமோனியா என்னும் ஜன்னி என்று கூறப்படுகிறது.  சிலர் இத்தகைய நோயால் இறந்தோரைச் சனிபிறந்து இறந்தனர் என்று கூறுவதால்   சனி என்பதும் சன்னி என்பதும் மேலும் ஜன்னி என்பதும் குறிப்பில் ஒன்றையே கொண்டுள்ளன என்று தெளிகிறது. சனி பிறந்து என்று குறிப்பதால் இது உடலில் நோய் நுண்மிகளால் உண்டாவது அல்லது உண்டாக்கப் படுவது என்றுஅறிகிறோம். "உடன்பிறந்தே கொல்லும் வியாதி" என்றனள் நம் ஒளவைப் பாட்டி.  பிறப்பது என்ற வழக்கினால் ஜனித்தல் என்னும் தோன்றுதல் குறிப்பினால்,  பிறத்தல் மற்றும் ஜனித்தல் பொருளொற்றுமை உடைய கருத்தொருமைச் சொற்கள் என்று தெரிகிறது, நோய் நுட்பங்கள் எனல் நமக்குச் சொல்நுட்பங்களினோடு ஒப்பிடக் கருத்தியலில் முன்மை பெறா என்பன இங்கு உண்மையாகும்.  எந்தச் சொல் எந்த நோயைக் குறிக்கிறதென்பதே முதன்மை. நோயின் அறிகுறிகள் அதற்கடுத்த கவனத்தையே பெறுவதாகும்.,

இனி நோயின் பெயரால் தமிழர் அல்லது இந்தியர் அல்லது  ஏனையோர் நோயின் தன்மையை உணர்ந்து பெயர் வைத்தனரா என்று பார்ப்போம்.  சனி என்ற சொல்,  அன் > சன் > ஜன் ஆகிய அடிகளிலிருந்து வருவதாகும்.  அன் என்பது அண் என்பதன் திரிபு என்பதை முன்னரே உணர்த்தியுள்ளோம்.  இதை வேறு யாரும் கண்டுபிடித்துள்ளனரா என்று அறிய இயலவில்லை. வெளியீடுகளில் அறிய இயலவில்லை.  மற்றவன் ஆராய்ச்சி வெளியீட்டைத் தேடிக்கொண்டிருப்பது எம் வேலை அன்று. இவை யாம் ஆய்ந்துணர்ந்தவை. எப்படி என்பது இங்கு வெளியிடவில்லை. அன் என்பது அடுத்துச் செல்லுதல் பொருட்டாதலின்  இந்த நோய் நோயாளியை உடலின் புறத்ததாய்த் தாக்குகிறது  என்று தமிழர்கள் அறிந்திருந்தனர் என்பது தெளிவாகிறது. நோயாளியை நோய் அண்மிச்சென்று தாக்குகிறது.  நுண்மிகள் நோய்தர அடுத்தே (அண்மிநின்றே) தாக்குகின்றன.  ஆகவே தமிழர்களின் பேரறிவை இது நன்கு எடுத்துக்காட்டுகிறது. இது சொல்லில் உள்ள பொருளென்பதை யாம் இங்கு  வெளியிடுவோமாயினோம். பிறர் கூறுவதில் வேற்றுமை காணின் இவண் பின்னூட்டம் செய்க.

அன் > சன் > சனி.   நோயாளியை அடுத்துச்சென்று உடலின் உள்ளில் இருந்தாவது வெளியிலிருந்தாவது தாக்கும் ஒரு நோய் என்றுதான் வரையறை செய்யவேண்டும்,  இது சொற்பொருள் வரையறவு ஆகும், சொற்பொருள் வரையறவு என்றால் நோயினுக்குப் பெயரிடுங்கால் கொண்ட வரையறவு. நோயின் ஆய்வு பெயர்வைத்த பின்னும் தொடரும். தொடர்கையில் புதியனவும் புலப்படும். அவை பெயரில் அடங்காத் தன்மைத்தாய் விரிந்துறுமென் றறிக.

ஆகவே நுண்மிகள் நோயைப் பிறப்பிக்கின்றன.

சனி பிறந்தது என்ற மக்கள் வருணனை சரியானதாகும்.

ஆகவே  சனி> ஜனி> ஜன்னி என்பதில் ஜன் என்ற பிறப்புக் குறிபொருளும் சரியானதே  ஆகும்.

ஜன் என்பது பிறப்பும்  குழந்தை என்பது தாயை அடுத்து வரலும் ஆதலினது முரணுடையதன்று எனலும் பெறப்படும்.

தமிழிலும் சமஸ்கிருதத்திலும் பொருளொருமை தெளிவாக உள்ளது. நுண்மிகள் அல்லது கிருமிகள் நோயைப் பிறப்பிக்கின்றன. அதாவது உண்டாக்கின என்பதே உண்மை.

வியாதி என்ற சொல் விய (ஆகு)தி என்று பிரிந்து விரிவாகுவது என்று பொருள்படும்.  கோவிட்டுக்கு முன்பாகவே வியன்பட்ட நோய் வந்து பலர் இறந்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் வியாதி என்ற சொல் வரக் காரணம் இல்லை. இச்சொல் பற்றி இங்குக் காண்க: https://sivamaalaa.blogspot.com/2019/06/blog-post_22.html

இதுவுமது: https://sivamaalaa.blogspot.com/2017/08/blog-post_14.html  ( வியாதி. வியாபாரம்)

கரம் மூலம் https://sivamaalaa.blogspot.com/2020/12/blog-post_12.html

இக்கருத்துகள் இந்திய மொழி வளர்ச்சியில் காணப்படுபவை ஆகும்,

சமஸ்கிருதம் ஒட்டிச் செல்லுகின்றது,


அறிக மகிழ்க'

மெய்ப்பு பின்



கருத்துகள் இல்லை: