.திறவிடம் என்றால் திறப்பான அல்லது கடலைக் காணக்கூடிய இடம். இச்சொல்லுக்கு வேறு பொருள் இருப்பின் அவற்றை நாம் இங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளவில்லை. பிராமணர்கள் கடலைக் கடத்தலாகாது என்பது பண்டை இருந்த ஒரு விதி ஆகும். இந்தப் பொருள் கட + அல் > கடல் என்பதிலே உள்ளது. கடல் என்ற சொல் அமைந்த காலத்தில் இந்த விதி பிராமணர்களுக்கு இருந்து, பிறருக்கும் ஒரு கடைப்பிடியாக இருந்ததா என்பதை இப்போது கூறுதற்கில்லை. கடலிலே தம் வாழ்க்கையை முழுதும் செலவிட்ட மீனவர்கள் போன்றோர் பண்டைக் கால முதலே தமிழருள் இருந்தனராதலால், இவ்விதி எல்லாரும் பற்றி ஒழுகியது என்று கூறவியலாது. இதனை நாம் இங்கு மேற்கொண்டு ஆராயவில்லை.
திறவிடம் என்ற சொல் பல்வேறு வழிகளில் பொருள் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. முந்திய காலத்தில் இது பயன் பட்ட ஏடுகளைக் காட்டினாலும் இது பயன்பாட்டில் இருந்த ஏடுகள் இவை என்பதைக் காட்டுமே அன்றிச் சொற் பொருளை விளக்க மாட்டா.
திரை என்பது கடலைக் குறிக்கலாம் ஆதலால் இச்சொல்லும் திரவிடம் என்ற சொல்லமைய அடியாய் இருந்திருக்கக் கூடும். ஐகாரம் இறுதியில் வந்து அகரமாகித் திர என, இடம் என்ற சொல்லுடன் கூடி, திர + இடம் > திரவிடம் என்ற சொல் அமைந்திருத்தலும் கூடும்.
தமிழும் இனமொழிகளும் இந்தியாவெங்கும் வழக்கில் இருந்தன என்பதும் வரலாறான காரணத்தால் , தமிழ்ச்சொல்லடியாய் ஒரு சொல் சமஸ்கிருதத்துக்கு அமைதலும் இயல்பானதே. சமஸ்கிருதம் வெளிநாட்டு மொழி என்ற கருத்தை எல்லா வரலாற்றாசிரியர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. ரோமிலா தாப்பார் நூல்களை எடுத்துக்காட்டுவோம்.
சமஸ்கிருதம் பாணர் மொழி என்பது என் கருத்தாகும். இது எவ்வாறாயினும் சமஸ்கிருதத்தில் தமிழ் அடிச்சொற்கள் பல உள்ளன. வேதங்களிலும் எண்ணூறு முதல் ஆயிரம் தமிழ்ச்சொற்கள் உள்ளன என்பது ஆய்வாளர்களுக்கு ஒப்ப முடிந்த கூற்றாகும்.
ஆகவே திராவிடம் என்ற சொல்லுக்கு அடி எம்மொழியிலிருந்தும் காணப்படுதலில் ஒரு வியப்பு இல்லை.
முன்னாளில் எங்கும் பாணர்களே பரவி வாழ்ந்தனர். அவர்கள் பாதுகாப்பாக வாழ்ந்த இட.ம் பண்சார் காவிடம் [ pancha gauda ] என்று உயர்த்திக் கூறப்பட்டது. இது "பஞ்ச கவுடா" ஆனது. பாணர் என்போர் பாடியவர்கள்.
பாதுகாப்பில்லாத தென் திசை பண்சார் திறாவிட(ம் ) [ puncha dravida] ஆயிற்று.
(முற்கால) மொழி வரலாற்றுக் காலத்தில் தமிழில் ரகர றகர வேறுபாடின்றியும் பல சொற்கள் வழங்கின ஆகவே திற திர என்பவை வேறுபடக் கருதற்குரியவை அல்ல . சமஸ்கிருதத்தில் ற ர வேறுபாடு இல்லை.
பஞ்ச கவுடா, பஞ்ச திராவிட
பஞ்ச என்பது பின்னாளில் ஐந்து என்ற பொருளுடையதாயிற்று.
இவை பிராமணர்களுக்குள் உண்டான ஒரு வகைப் பிரிவினைப் பெயர்கள்.
பிரிவினை அல்லது "புத்தகம்"(புது அகம்) புகுதல்: இதனால் உண்டானதே திறவிடம் > திராவிடம் என்பது. இவர்கள் திராவிடப் பிராமணர் ஆயினர்.
பிராமணர் என்போர் பாடகர்கள். வேதங்கள் பாடல்களே. நாகரிகம் பாண நாகரிகமே.
பிராமணரைக் குறித்த "திராவிட" என்ற சொல் (அடைமொழி ) மற்றவர்களை எவ்வாறு தழுவிற்று என்பது ஒரு வியப்பு என்றே சொல்லவேண்டும்.
அக்ரஹாரங்கள் தென்திசையில் இவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்தன.
திராவிடம் என்பது மற்ற மக்களை எப்படிச் சென்று தழுவிற்று என்பது வியப்புக் குரியதே ஆகும்.
ஒருசொல் சம்ஸ்கிருத மொழிக்காகப் படைக்கப்பட்ட தானால் அது எந்த அடிச்சொல்லால் அமைந்திருந்தாலும் அது சமஸ்கிருதம் என்றே சொல்லப்படும். அதாவது வழக்கால் அல்லது பயன்பாட்டினால் அது அம்மொழிக்குரியது.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்.
சில திருத்தங்கள்: 30102024 0253
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக