சட்டாம்பிள்ளை.
தமிழறிஞர்கள், இச்சொல்லை ஒரு மரூஉ என்று கருதுவர். அதாவது சட்ட நம்பிப் பிள்ளை என்பதே மருவி சட்டாம்பிள்ளை என்று வந்தது என்பர்.
சட்டநம்பி(ப்பி)ள்ளை > சட்டாம்பிள்ளை. முதலில் இரு பிகரங்களில்
ஒன்று மறைந்து, பின் சட்டநம் என்பது சட்டாம் என்று திரிந்தது. தம்பி என்பது தம்பின் என்பதன் கடைக்குறை; இதேபோல் நம்பி என்பது நம்பின் என்பதன் கடைக்குறை.
சட்டம் + பிள்ளை = சட்டாம்பிள்ளை; இதில் டகரம் நீண்டது ( திரிதல் ) என்பதும் ஆம் . குளத்தங்கரை என்பதைக் குளத்தாங்கரை என்று நீட்டினாற் போலும் ,
இத்தகு திரிபுகளால் தமிழ் புதிய சொல்லுருவங்களைப் பெற்றதுடன் வளமும் அடைந்தது என்று கூறவேண்டும். மொழிகள் திரிந்தமைவுகளே எனல் அறிக.
எந்தச் சொல்லும் திரியாமல் இருக்குமாயின் சொற்கள் பல்கியிருத்தல் இயலாமை காண்க. தோன்றல் திரிதல் கெடுதலும் குறைப்படுதல்களும் இவ் வளம் உய்த்தன.
நம்பி என்பதன் பெண்பால் வடிவு நங்கை என்பது. இச் சொற்களில் போதரும்
நம், தம் என்பன தம் அடி நாட் பொருளை நாளடைவில் இழந்தன. போலும்.
சட்டம் என்பது ஈண்டு ஒழுங்கு குறித்தது. இதன் மற்ற பொருள்களை முன் இடுகைகளில் குறித்துள்ளோம். அவை :
http://sivamaalaa.blogspot.com/2016/09/blog-post_85.html
http://sivamaalaa.blogspot.com/2016/09/blog-post_28.html

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக