சாரணர் என்பது நன்கு அமைந்த நற்றமிழ்ச் சொல்.
சார்தல் என்பதனடிப் பிறந்த இச்சொல், இவர்கள் ஒரு இயக்கத்தையோ, தலைவனையோ, ஒரு கூட்டத்தையோ சார்ந்திருப்போர் என்பதைத் தெளியக்காட்டுகிறது.
அணர் என்பது, பொருந்தி நிற்போர் என்பதைத் தெரிவிக்கிறது.
அண் + அர் = அணர்
அண் > அணவுதல்,
அண் >அண்டுதல்.
அண் > அண்முதல்
முதலிய சொற்களின் பொருளைக் காண்க.
சார்ந்து அணவுவோர், சார்ந்து அண்டி வினைசெய்வோர் என்பது
பொருளாம்.
மணிமேகலையில் "நக்க சாரணர் நயமிலர் " என்ற தொடர், கள்ளும் மனித ஊனும் உண்ணும் தீவு மக்களுக்கு வழங்கப்பட்டது.
நகுதல் பல பொருளொரு சொல். சிரித்தல், ஒளிவீசுதல், மிக்க
மகிழ்வுடன் பாவச் செயல்களில் ஈடுபடுதலையும் குறிக்கும்.
நகு > நக்க. (பெயரெச்சம்) தகு > தக்க என்பதுபோல .
நக்குதல் ( நாவால் நக்குதல் என்பது வேறு)
நகுதல் பல பொருளொரு சொல். சிரித்தல், ஒளிவீசுதல், மிக்க
மகிழ்வுடன் பாவச் செயல்களில் ஈடுபடுதலையும் குறிக்கும்.
நகு > நக்க. (பெயரெச்சம்) தகு > தக்க என்பதுபோல .
நக்குதல் ( நாவால் நக்குதல் என்பது வேறு)
பள்ளிகளில் சாரணர் இயக்கம் scouts movement உள்ளது. நீங்கள் அறிந்தது இதுவாகும்.
நல்ல தமிழ்ச் சொல் இதுவாம்.
அணம் விகுதி பெற்ற சொற்கள் , விகுதியின் அமைப்பும் பொருளும்::-
https://sivamaalaa.blogspot.sg/2015/09/suffix-anam.html
மற்றும் : https://sivamaalaa.blogspot.sg/2016/02/blog-post_52.html வாரணம் .
அணம் விகுதி பெற்ற சொற்கள் , விகுதியின் அமைப்பும் பொருளும்::-
https://sivamaalaa.blogspot.sg/2015/09/suffix-anam.html
மற்றும் : https://sivamaalaa.blogspot.sg/2016/02/blog-post_52.html வாரணம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக