பதி என்பது பலபொருளொரு சொல்.
இது அழுந்துதல், ஒடுங்குதல், கீழ்ப்படிதல். பணிதல்,பள்ளமாதல், ஊன்றுதல், ஆழ்தல், தங்குதல், நிலையாதல், எழுதல். என்று பல
பொருளுடைத்து.
பதி என்பது, உண்மையில் பெண் வீட்டில் சென்று பதிந்து வாழ்பவனைக்
குறிக்கிறது. அவனே கணவன்.( கண்போன்றவன்). புருடன் ( புருவம் போன்று கண்ணாகிய பெண்ணைக் காப்பவன்.)
கண் புருவம் என்பவை உடலிற் பதிந்து பயன் தரும் உறுப்புகள்.
பழங்காலத்தில் பெண்களே தலைமை தாங்கினர். பெண்வழிக் குடும்பங்களே
நடைபெற்றன. matrilineal. இன்றும் உலகில் சில மக்கள் கூட்டத்தினர், பெண்மைத் தலைமையே போற்றுகின்றனர்.
பெண் வீட்டிற் சென்று ஆண் பதிந்து (புகுந்து) நின்ற படியால் அவன்
பதியானான். சொத்துரிமை உடையவர்களும் பெண்களே யாவர்.
பதிதல் என்பதன் பொருளைப் பாருங்கள். அப்போது இது நன்கு தெளிவுறும்.
ஆணின் பெயர் அல்லது ஆணின் குடும்பப் பெயரைப் பிள்ளைகள்
தாங்கியதன் காரணம், பதிந்து நின்றவனை அடையாளம் தெரிவிக்கவே
ஆகும். பெண் நிலையாக வீடு நடாத்தியதால் அவள் பெயர் இடுதல்
வேண்டாமை உணரப்படும்.
கடவுள் சீனிவாசனும் ஸ்ரீ என்னும் பெண்ணில் வசித்தவனே ஆவான் .
மனிதன் ஆரம்பமானது பெண்ணுக்குள்ளே என்ற பட்டுக்கோட்டையின் பாட்டும் பொருள் பொதிந்தது ஆகும்.
பெண் அடிமை பிற்கால நிகழ்வு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக