சனி, 7 ஏப்ரல், 2018

தமிழ் மன்னன் என்ன சாதி?



தமிழ் மன்னன்  என்ன  சாதி?
தமிழரசர்கள் எந்தச் சாதியைச் சேர்ந்தவர்கள் என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அரசனின் சாதி “அரசன்” என்பதுதான்.
பிராமணர் அல்லது பார்ப்பனர் தவிர,  பிற சாதிகளெல்லாம் குடிமக்கள் சாதிகளே ஆகும்.  குடிகளின் சாதிகள் அரசர்களை உட்படுத்த மாட்டா.
அமைச்சர்கள், தளபதிகள் என்று இருந்தவர்கள் அரசனின் உறவினர்களாக இருந்திருத்தல் கூடும். அல்லது தம் திறமையை வெளிப்படுத்தி அவ்வலுவலைப் பெற்றவர்களாய் இருந்திருத்தல் கூடும்.
அரசர்களுக்குள் சூரிய குலம், சந்திர குலம் என்பனபோல் பிரிவுகள் இருந்தனவென்று தெரிகிறது,  இவை குடிமக்களிடை இல்லாதவை.
வணிகர். வேளாளர், பிற தொழிலாளர்கள் -  அரச குலத்துக்கு வெளியில் உள்ளோர் ஆவர்.




ஆய்வுக் குறிப்புகள்:

சாதி என்பது தொல்காப்பியத்திலும் பதிவான சொல்.  " நீர்வாழ் சாதி" என்று
தண்ணீரில் வாழவனவற்றைக் குறிக்கும்.  சாதி -  இது சார்பானது, சார்ந்தது என்று பொருள்தரும்.  செட்டியார் சாதி என்றால் செட்டியார் சார்பினர்  என்று பொருள்.  அதாவது செட்டியாரைச் சார்ந்தவர்கள். இதுவே சரியான சொல் தரவு ஆகும்.  அமைச்சர்களுக்குத் தேவர் என்ற பட்டம் இருந்தது. அவருடைய உறவினர் அவரைச் சார்ந்தோர் என்பதே சரி.  ஓரிருவருக்கே பட்டம் வழங்கப்பட்டது. மற்றவர்கள் அவரைச் சார்ந்தவர்கள்.  சார்தி > சாதி.  ரகர
ஒற்று மறைவு.   கொள்வனை கொடுப்பனைகளால் பிற்காலத்தில் அது குலமானது.   ஜா-  பிறந்தது என்று பொருள்படுவதிலிருந்து ஜாதி என்ற ஒலி ஒற்றுமைச் சொல் homonym  படைக்கப்பட்டு சமத்கிருதத்தில் வழக்குக்கு வந்தது.  அது (ஜாதி) பிற்கால குமுக அமைப்புக்குப் பொருத்தமான சொல்லானது.  அதனால் சாதி (சார்தி) வேறு,  ஜாதி வேறு.
பிராமணர் என்போர் பிரமனை வணங்கினர்.  அவனை உணர்ந்த தகைமையால் "பிராம்மணர் " எனப்பட்டனர்.  அப்போது பிறப்பினால் சாதி இல்லை. ஜாதியுமில்லை. பின் நூலணிந்து பூசாரித் தொழிலில் ஈடுபட்டனர். இது அடையாளத்துக்காகவே தொடக்கத்தில் இடப்பட்டது. பின்  அகமணமுறை ஏற்பட்டபோது அது ஒரு குலமாக வளர்ந்து,  நூலணிதல் பிறப்பினைக் குறிக்கத் தொடங்கிற்று. அப்போது சாதி ஜாதியாகிவிட்டது.  பூசாரித் தொழிலை விட்டு வேறு தொழிலுக்குப் போனால் சாதி மாறுமென்ற நிலை ஒரு காலத்திலிருந்தது. இதற்கும் நூல்களில் ஆதாரமுண்டு.   ஒழுக்கம் தவறினால் சாதி இழக்கப்படும் என்ற விதி திருவள்ளுவர் காலத்தில் இருந்தது. இப்போது தொழில்மாறினாலும் ஒழுக்கம் கெடெய்தினாலும் சாதி அப்படியே இருக்கிறது.  இதற்கும் நூலாதாரம் உள்ளது.  இவை அமலற்ற விதிகள் ஆயின. (unenforced or unenforceable rules)   (obsolete)  குமுகாயம் பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு சட்ட திட்டங்களை கடந்து வந்துள்ளது என்று உணரவேண்டும். ( Rules have varied from time to time).


பண்டைக்கால அரசர்கள் பல மனைவிகளையும் வைப்பாட்டிகளையும் உடையவர்களாய் இருந்தனர். ( polygamous) . 500 அல்லது 600 என்று வைத்திருந்தவர்களும் உலகில் பல நாடுகளிலும் உண்டு. இதை இப்போது இணையமூலம் நீங்கள் எளிதில் அறிந்துகொள்ளலாம். முன்னர் அந்த வசதி இல்லை.  நூல்நிலையங்களே துணை நின்றன.


பன்மனையம் என்ற பொலிகமி  (polygamy ): அந்தக் காலக்கட்டத்துக்கு அதுவே சரி. பிற்காலத்தில் அது மாற்றம் அடைந்தது. கடவுளால் ஒன்றாக வைக்கப்பட்ட தம்பதியினரைப் பிரித்தலாகாது என்று ஏசுநாதர் கூறினார்.  ( What God hath put together, let no man put asunder ). அது கிறித்தவ நாடுகளில் அமல்செய்யப்பட்டது.  இருமனைவிகள் அல்லது அதற்கும் மேலென்பது குற்றமாகச் சட்டம் கருதியது.  இந்தச் சட்டத்தையும்  அதற்கான பண்பாட்டுப் பின்னணிகளையும் வைத்துக்கொண்டு இராசராச சோழனை எடைபோடுதல் கூடாது.  அவன் காலத்தில் குமுகம் community  அப்படி இல்லை. அவனும் அத்தகைய சட்டத்தைப் போடவில்லை. இந்தியாவிலும் பிற நாடுகளிலும் எந்த மன்னனும் போடவில்லை.  அது வெள்ளைக்காரன் அரசு மூலம் வந்த சட்டம்.

இராச இராசன் பல மனைவிகள் உள்ளவன்,  ஏனை எல்லா மன்னர்களும் குறு நில மன்னர்களும்  அதையே செய்தனர்,  குடிகளும் அப்படியே முடிந்த அளவு செய்தனர்.  ஓர் அரசனுக்கு எத்தனை பிள்ளைகள்; ஒரு குறுநில மன்னனுக்கு எத்தனை பிள்ளைகள்!  அவன் போருக்குப்போன இடங்களில் ஒவ்வொரு மன்னனுக்கும் எத்தனை பிள்ளைகள்........ஓர் அரசனுக்கு ஒரு பெண் வேண்டுமென்றால் அவள் எந்தச் சாதியாயினும் ஒப்பியே ஆகவேண்டும்.
ஒப்புவதென்ன! பலர் அதனாலேயே தம் வாழ்க்கையை வளமாக்கிக்கொண்டனர்.

கலிங்கத்துப்பரணியில் "கடை திறமினோ! கடை திறமினோ!" என்று பாடல் முடிகிறது. மன்னன் குலோத்துங்கனே  உன் அழகில் மயங்கி வந்துவிட்டான்! கதைவைத் திறவாய்!"  என்பதன்/றோ பாடலுக்குப் பொருள்.  இது ஒன்றும் பொய்யன்று. வெற்றி வீரனான மன்னன் எந்த வீட்டிலும் புகுந்து எந்தப் பெண்னோடும் இருப்பான்.  இந்தியாவில்,  சீனாவில், ஐரோப்பாவில்.... எங்கே இல்லை?  அட்டிலா -த - ஹன் செய்த அட்டகாசத்தில் ஒரு நாட்டின் வெள்ளை நிற மக்களெல்லாம் மஞ்சள் நிறமாக மாறிவிட்டனரே....  அந்த நாட்டின் பெயர் கூட " ஹன்-கேரி" என்றன்றோ ஆகிவிட்டது!   இன்னும் இன்னொரு நாட்டில் பழுப்பு மஞ்சள்  நிறத் தோலர்களெல்லாம்  கருவலாகிவிடவில்லை?  அரசன் மட்டுமா?  படைஞர்களும்தாம்  களிப்பில் ஈடுபட்டவர்கள் .  விவரிக்காது விடுவோம். ஒன்றிரண்டை அரசன் கொள்வான்.  மற்றவை படைவீரர்களுக்குப் பலி.

தமிழரிலும் அரசக் குருதி உடையோர் பலர் இருக்கலாம்.  பிற மாநிலங்களிலும் இருக்கலாம்.

மனித வளர்ச்சி வரலாற்றுக் காலங்களில் அண்ணன் தங்கைகள்கூட கல்யாணம் பண்ணி வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் இன்றுள்ள குமுகம் வேறு. அவர்களை ஏசுவது உணராமை ஆகும்.  ஆதாம் ஏவாளுக்குப் பிறந்த குழந்தைகள் எல்லாம் உடன்பிறப்புக்கள்தாமே. மணம்செய்ய வேறு யாரும் இல்லையே.... என்ன செய்வார்கள் பாவம்.

சாதி என்பதற்கு நேரான டச்சு போர்த்துக்கீசியச்  சொல் காஸ்டா என்பது, இது
1498ல் இருந்து  இந்திய சாதிகளைக் குறிக்க வழங்கிவருகிறது.  இதற்குரிய ஆங்கிலச்சொல் 1613ல் இருந்து வழங்குகிறது.

பின் திருத்தப்பெறும்.
மறுபார்வை செய்த நாள்:  3.4.2019



ஒன்றும் இரண்டும் அமைந்த விதம்.

ஒன் என்ற சொல்லை இதற்குமுன் ஆய்ந்துள்ளோம். ஒன் என்பது ஊ, உன் என்பவற்றிலிருந்து திரிந்து அமைந்த சொல்.  உ என்பது முன்னிலைச் சுட்டு என்பது உங்களுக்குத் தெரியும்.  உங்கள்முன் ஒரு பொருள் இருந்தால் அது அங்கு உள்ளது எங்கிறீர்கள் அன்றோ? உள்ளது என்பதில் உள்,  உள் என்பதில் உ எல்லாம் குறைவின்றி இருக்கின்றன. இவை எல்லாம் ஊ என்பதனுடன் தொடர்புற்றவை.  சீனமொழியிலும் ஊ என்றால் உள்ளது என்றுதான் பொருள். இப்போது:

ஊ > உ > உள்> உள்+ அ+ து :  உள்ளது.

அ என்பது அங்கு என்று பொருள்படும்  சேய்மைச் சுட்டு என்றாலும் இச்சொல்லில் அது தன் பொருளை இழந்து வெறும் இணைப்பொலியாய்ப் பயன்படுகிறது.  இது முற்காலத்தில் உள் உது என்று அதாவது உள்ளுது என்று இருந்திருக்கவேண்டும்.  உது என்பது அது என்று திரிந்திருக்கவேண்டும்.  திரியவே அ என்பது பொருளிழக்க து என்பதுமட்டும் ஒன்றன்பாலை உணர்த்த நின்றுள்ளது என்பது காணக்கிடக்கின்றது.

எல்லா மொழிகளிலும் திரிபே இல்லையென்றால் ஆய்வுகள் மிக்க எளிமையாய் இருந்திருக்கும்.  குழப்படியான உலகில் எதுவும் எளிதில் கிட்டுவதில்லை, அறிதருவதும் இல்லை.

மீண்டும் ஒன் என்ற வடிவத்துக்கு வருவோம்.

ஊ > உ > உன் > ஒன்.

முன்னிருப்பது; அதாவது ஒன்று என்ற எண்ணிக்கையில் உள்ள பொருள்.

இதில் து என்ற அஃறிணை விகுதி புணர்த்த, ஒன்+து = ஒன்று என்றாகிறது.

இனி, ஓரு, ஓர் என்பனவெல்லாம் உள்ளன. அவற்றையும் அறிந்துகொள்வோம். எம் வலையொளியில் நின்றுகொண்டிருங்கள். தக்க
தருணத்தில் அதையும் கண்டறியலாம்.

முன்னிருப்பது ஒன்று முன்னே இருக்க,  அதை அண்மிக்கொண்டிருக்கும் இங்குள்ள பொருளும் அதனுடன் போய்ச் சேர்ந்துவிட்டால் இரண்டு ஆகிவிடுகிறது.

இரு+அண்+து.

இங்கு இருந்தது ( இரு)  முன்னிருந்த பொருளை அண்மியது. (அண்).

து என்பது அஃறிணை விகுதி.

உண்மை இதுதான். அறியாதவனுக்கு இது ஒரு விளையாட்டுக்கதை போல் தோன்றும்.  மொழியில் புலவர்கள் ஏற்படாத காலத்தில் அமைந்த சொற்கள் இவை. மிக்க எளிமையுடன் அமைந்திருத்தலை
 நுண்மாண் நுழைபுலத்துடன் கண்டறியவேண்டும்.

இரு என்ற சொல்லில் இ என்ற சுட்டு தன்மை இடத்தை வெளிக்காட்டி நிற்பதை அறியவேண்டும்.

இருப்பது இ !   இ > இரு.  அல்லது இ> இர் > இரு.

இருந்தது முன்னிருப்பதை  அண்மிச்செல்ல இரு+ அண் +து = இரண்டு.

து என்ற ஒன்றன்பால் விகுதி இரண்டில் வந்தது வழுவமைதி.
அன்றி, இருந்தது அண்மிற்று ஒன்றை என்றும் விளக்கலாம். இழுக்கின்று.

அறிந்து மகிழ்க.


அடிக்குறிப்பு:

இரு என்பதற்குப் பெரிது என்பதும் பொருள்.  முன்னிருக்கும் ஒன்றுடன்
இங்கிருக்கும் ஒன்று இணைந்துவிடின் அப்பொருள் பெரிதாகிவிடும் என்பது காண்க.

ஆயிரம் சொல்லமைப்பு:  http://sivamaalaa.blogspot.com/2017/11/blog-post_62.html

வெள்ளி, 6 ஏப்ரல், 2018

மயானமும் மவுசும்



இருப்பதைக் கொண்டே இல்லாததை உருவாக்கவேண்டும். தெரிந்ததைக் கொண்டே தெரியாததையும்  தெரிந்துகொள்ளவேண்டும்.  இந்தவகையில் இன்று மயானம் என்ற சொல்லின் தோற்றத்தினை உணர்ந்துகொள்வோம்.

மாய்ந்தவர்களைப் புதைக்கும் அல்லது எரியூட்டும் இடமே மயானம் எனப்படுகிறது.  இது எந்த மொழிக்குரிய சொல் என்பதைவிட எப்படி அமைந்தது என்று கண்டுபிடித்தால் அதன் பொருளை நன்`கு தெரிந்தின்புறலாம்.

மயானம் என்ற சொல்லை இட்டம்போலப் பிரித்தால்:

மயா +ன் + அம்  என்று "பாதை தெரிகிறதன்றோ",  எனவே மயா என்பது என்ன என்று தேடுங்கள். இங்கு மயா என்பது மஜா என்பதன் திரிபுபோல் தோன்றலாம். ய-ஜ திரிபு.  யேசுதாஸ் > ஜேசுதாஸ் போல. மயாவுக்கும் மஜாவுக்கும் ஏதும் பொருள்தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை.

ஒட்டகம்,  பெண்குதிரை,  கழுதை முதலியவற்றுக்கு  சமஸ்கிருதத்தில்  மயா என்பர் என்று சமத்கிருதப் பண்டிதர் கூறுகிறார். இந்த விலங்குகள் எல்லாம் மயானத்தில் இல்லாதவை!  ஆகவே மூலம் அறிய இந்த வழியில் இயலாது. இந்தச் சிந்தனை மின்னல்போல் பளிச்சிட முடியாது.

மசான என்பதை (சொல்லின் பிற்பகுதியாக )  உள்ளடக்கிய  சொற்கள் சில உள.  மயானம் என்ற சொல்லுடன் பாதி ஒலியொற்றுமை உடைய சொற்கள் இவை. அவற்றைக் கொணர்ந்து தொடர்புறுத்திவிட்டு அக்கடா என்று கிடக்கலாம்  என்றாலும் மீண்டும் முயல்வோம்.

நாம் தமிழின்மூலம் இச்சொல்லை ஆய்வோம்.

மாய் என்றால் இறத்தல்,  மாய்ந்து போவது.

ஆன் என்பது இடைநிலை.  ஆன என்றும் பொருள்படும்.  ஆன என்னும் எச்சவினையாகவும் கொள்ளலாகும்.

அம் என்பது விகுதி.

மாய்+ஆன + அம் =  மாயானம் > மயானம் ( முதலெழுத்துக் குறுக்கம்).

நெடில் குறிலாகிச் சொல்லமைதல் தமிழில் பழங்காலம் தொட்டு உள்ளது. 

எடுத்துக்காட்டு:

காண்  >  கண்.  (காணும் உறுப்பு).

எத்துணை பழங்காலச் சொல். காண் என்பது.  அப்போதே இவ்வசதியைக் கையாண்டிருக்கிறார்களே......

வீழ் > விழுது.

இன்னும் வினையல்லாத சொற்களிலும் இப்படி வரும்.  

பாழ் > பழுது. 

நெடிலிற் றொடங்கிய  சொற்கள் குறிலில் முதலெழுத்துக்கொண்டதனை இதன்மூலம் அறிந்தீர்கள்.  எம் இடுகைகளை நோக்கின் நெடுகிலும் இதனை யாம் தெரிவித்துவந்திருப்பதனை அறியலாகும்.   பல மரபுதோய்ந்த மாற்றங்களில் இதுவும் ஒரு வகையினது ஆகும்.

இம்முறையால்,  மாயானம் என்பது மயானம் என்று குறுகிற்று. பாட்டில் அசைகள் குறுக்கும்வழி குறுக்குறுதல் போலுமே சொல்லமைப்பிலும் குறுக்கம்பெறும். சுருக்கமாக முடிப்பதைவிட்டு வாயைப்பிளந்து நீட்டிக்கொண்டிருத்தல் வேண்டாதது ஆகும்.


சொல்லானது பின் வேறுமொழிகட்கு ஏகுதலில் தடையேதுமில்லை. ஏகுமாயின் தமிழர்க்கும் பிறர்க்கும் உள்ள தொடர்புகளை இத்தகு சொற்கள் காட்டவல்லன.


மயானம் சொற்பிறப்பு இதுவே.  மாய்ந்தோர்க்கான இடமே மயானம்.  சொல் எளிதாக அமைக்கப்பட்டுள்ளது. நாடகத்தில் மாவினால் உசுப்பப்பட்ட    அழகு மாவுசு ஆகிப் பின் மவுசு ஆனதுபோலும் காண்க.





தமிழுடன் மொழிகள் பிற ஒப்பாய்வு

நாம் தமிழில் வாக்கியங்களை எழுதும்போது இரண்டிரண்டு சொற்களாகக் கவனித்து வரைய வேண்டுமென்பது இலக்கணியர் நமக்குக் கூறும் ஆலோசனை. இந்த ஆலோசனை எந்த இலக்கண நூலில் இருக்கிறது என்று நீங்கள் கேட்கவேண்டும். கேட்டால் அதற்குப் பதில் சொல்லவேண்டிய கட்டாயம் ஏதும் இல்லை என்பதுபோல் பலர் நடந்து கொண்டாலும் யாமதை முன்மையாகக் கொண்டு பதிலுரைப்போம் என்பது நீங்கள் அறிந்ததே.



நாம் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் சொல் நிலைமொழி என்றனர். மொழி என்பது இங்கு தமிழ் ஆங்கிலம் போன்ற மொழிகளைக் குறிக்கவில்லை     அது சொல்லைக் குறிக்கிறது.

ஆகவே எழுதிக்கொண்டிருப்பது : நிற்கும் சொல் நிலைச்சொல்; அல்லது முன்னோர் கூறியபடி நிலைமொழி. நிலைமொழிக்கு அடுத்து வருவது வருமொழி. அதாவது வருஞ்சொல். ஆகவே  இரண்டிரண்டு சொற்களாகக் கவனித்துச் சந்தி நோக்கி எழுதுதல் வேண்டுமென்பது மறைமுக விதியாகும்.

சீனமொழிபோல் நம் மொழியில் சொற்கள தனித்தனியாக நிற்பதில்லை. வ்வா பா என்று சீனத்தில் சொன்னால்  வாப்பா என்று எழுதவோ பேசவோ மாட்டார்கள். ப் என்ற மெய் இடையில் தோன்றாமலே பேசவேண்டும். உச்சரிப்பதில் அவர்களுக்கு மென்மைதழுவுதல் முக்கியம் ஆகும். தமிழிலோ பகர ஒற்றுத் தோன்றும்படியாகவே சொல்வது மரபு. இங்கனம் மொழிகள் மரபில் வேறுபடுகின்றன. மலாய் மொழியில் தாரி என்றால் நடனம். நடனம் செய் என்று சொல்லுதல்.

ஒரு முன்னொட்டு கூட்டப்படுகிறது. ம- என்பது அதுவாகும். -ம, தாரி என்பன சேர மனாரி என்று புணர்ந்து புதிய சொல் உருவாகிவிடும்,. ம+தாரி =மந்தாரி என்று வருவதில்லை. இதில் கவனிக்க வேண்டியது: தாரி என்ற சொல்லின் முதலெழுத்து  தா என்பது, நா என்று மாறிவிடுகிறது. சில மொழிகளில் த-வுக்கும் ந-வுக்கும் நெருங்கிய உறவிருப்பது இதிலிருந்து தெரிகிறது. இந்த  மாதிரியான புணர்ச்சி விதிகள் முன்னொட்டுகட்கும் அவற்றின் பின்வரவாம் முழுச்சொற்களுக்கும் இடையிலானவை ஆகும். முன்னொட்டுக்கள் அல்லாதன புணர்கையில் இயல்பாக ஒலிக்கும்.

எழுத்துக்கள் மாறமாட்டா. தோன்றவும் மாட்டா.

எனவே புணர்ச்சியின் மூலம் வரும் கடின ஒலிகளை மலாய் தவிர்த்துவிடுகிறது. ஆனால் சமத்கிருதத்தில் தமிழில் போல சந்தி இருப்பது தமிழின் வழியைப் பின்பற்றிய மொழி அது என்பதைத் தெளிவாக்குகிறது.

அதன் இலக்கணத்தை எழுதிய பாணனாகிய பாணினியும் தமிழ் ஈர்ப்பின் வயப்பட்டிருந்தான் என்பது மிகையன்று. இப்படிச் சந்தி இலக்கணத்தை  அமைத்ததன்வழி அவன் சமத்கிருதத்தைக் கடினப்படுத்தி, வடக்கிலிருந்தோருக்குத் தொல்லை விளைத்து, புத்தர் முதல் குரு நானக்கின்
பின்னோர் வரை அதனை அணைத்துக்கொள்ளாமல் அடுத்திருத்தி வைத்திருக்கும்படி செய்துவிட்டான் என்றே தோன்றுகிறது. முழுப்பளுவையும்

பாணனாம் பாணினிமேல் சுமத்துவது இரங்குதல் இன்மை எனக் கருதலாகாது. தமிழிற் பின்னாளில் சொற்கள் நீட்சி பெற்ற மாதிரியே சமத்கிருதத்திலும் மிக நீண்டன என்றறிதல் வேண்டும். தொடர்ந்து வேறோர் இடுகையில் நேரம் கனியும்போது
 
தொடருவோம்.
 
 
திருத்தங்கள் பின்.

சில திருத்தங்கள் செய்யப்பட்டன: 09102024  0648

மீள்பார்வை செய்ய எண்ணியுள்ளோம்.




வியாழன், 5 ஏப்ரல், 2018

காபியில் Acrylamide விடம் தோன்றுவது.

காபி எனப்படும் குளம்பிநீர் அருந்தினால் அதனால் புற்றுநோய்
ஏற்படலாம் என்பதுபோல சில செய்திகள் வந்துள்ளன.
இருந்தாலும் இவற்றைப் பொருட்படுத்தாமல் குளம்பிநீர்
அருந்திக் கொண்டிருங்கள் என்றும்கூட ஆலோசனை
வழங்கப்பட்டுள்ளது.

இதைப் படித்துப் பாருங்கள்:


By Steven Reinberg
HealthDay Reporter
TUESDAY, April 3, 2018 (HealthDay News) -- Science says you can get your coffee buzz without fear of cancer, so experts say you can forget that recent controversial California law.
Last Wednesday, a Los Angeles judge ruled that coffee shops such as Starbucks or Dunkin' Donuts must caution customers that coffee contains acrylamide -- a potential cancer-causing chemical that forms as a byproduct of roasting.
Acrylamide is also found in fried foods such as french fries, and in cigarette smoke.
Finding on behalf of the plaintiff, the Council for Education and Research on Toxics, Judge Elihu Berle said that coffee companies failed to prove that the amount of acrylamide in coffee was safe -- or that coffee has health benefits.
But Dr. Len Lichtenfeld, deputy chief medical officer of the American Cancer Society, said coffee lovers still have grounds to stick with the beverage.
The judge's decision may follow the law, Lichtenfeld said, but it stands in opposition to the science on the subject.

மேலும் வாசிக்க:

https://www.webmd.com/cancer/news/20180403/despite-californias-warning-signs-coffee-is-still-safe-experts-say?ecd=wnl_day_040518&ctr=wnl-day-040518_nsl-hdln_2&mb=xz%40HfhcaFThuuUQvzoNHJeHnVev1imbCT53fMLZ%2f4LQ%3d#1

காபி என்ற பெயர்வரக் காரணம் காபிக்கொட்டைகள் குதிரைக்
குளம்புகள் போலிருந்ததால்.
இதே காரணத்துக்காக "குளம்பி"  என்று தமிழிலும் பெயர்
வைக்கப்பட்டது.  இதை வைத்தவர் மொழிநூலறிஞர்
பாவாணர்.
இயற்கையாகவே காபிக்கொட்டையில் தொல்லை எதுவும்
இல்லை. அதை வறுக்கும்போது  Acrylamide ( அழிவறுக்கை)
தோன்றித் துயர்செய்கின்றதாம்.

புதன், 4 ஏப்ரல், 2018

The lost city of Petra in Jordan

கேடயம், கேட்டி



அம்பு நம்மை நோக்கி ஏவப்படுமானால் அது நமக்குக் கெடுதல்தான். அத்தகைய கெடுதலினின்று நாம் நம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது.  வெறும் கைகாளால் அம்பைத் தடுக்க இயலுமோ? அதைத் தடுக்க ஒரு இரும்பு முறமோ பலகைத் தடுப்போ ஒரு கூடையோ தேவைப்படலாம்.

இதற்காகவே செய்யப்பட்டதுதான் கேடயம்.

இந்தச் சொல்:
கேடு -   வருகின்ற அம்பைக் குறிக்கிறது.
  -      அங்கேயே நிறுத்துவது. ( படர்கைச் சுட்டு).
அம் -  விகுதி.

பொருள்: வருகின்ற கேட்டினை (அம்பை ) ங்கேயே நிறுத்தும் வட்டத் தடுப்புத் தகடு.

வண்டிமாட்டுக்குத் தார்ப்போடும் கம்பு  கேட்டிக்கம்பு எனப்படும்.  கேடு+இ  =  (கேடுபயப்பது.) கம்பு - தடி. தார்ப்போடுவதைக் கேடு என்ற சொல்லினின்று அமைத்தமையால், பண்டையர்  அத்தகைய செயல்களைக்
கடிந்தனர் என்று தெரிகிறது.

மதிலுள் ஒரு மேடையிலிருந்து கேடயங்களைப் பயன்படுத்துவர். இம்மேடை
பரிகை (பரிசை) என்றும் சொல்லப்படும்.

கேடயம் என்ற சொல் கேடகம் என்றும் திரியும்.

கேடயம் :  தடுதட்டம் எனினுமாம்.

மறுபார்வை செய்யப்பட்டது: 13.06.2020.


நஞ்சு

பண்டைத் தமிழ் மக்கள் சொற்களை மிக்க அருமையாக
அமைத்துள்ளனர். அமைத்தனர் என்பதைவிட ஒலிகள்
எழுப்புவதன் மூலம் கருத்தறிவிக்கப் பல வேளைகளில்
சொற்களைஇயல்பாக அமையவிட்டனர்  என்பதே
உண்மை.  புலவர் அல்லது மொழியறிஞர் அமைத்தவை
சிலவே.

அஃறிணை, ஒழிபு என்பவை போலும் சில புலவர்
அமைத்தன எனலாம். ஆனால் ஒழிவு, பொம்மை
என்பன போலும் பல மக்கள் அமைத்தவை.

பொய்யான உடல் என்று பொருள்படும் "பொய்ம்மெய்"
என்பது போலும் சில நாளடைவில் பயன்பாட்டினால்
தேய்வுற்றுப் "பொம்மை" என்று மறுதோற்றம் உற்றது.
இத்திரிபுகளால் சொற்களின் தொகை பல்கிற்று.
வேய்ந்தன் (முடி சூடிக்கொண்டவன்)  என்பது மாறி
வேந்தன் என்று புத்துருக் கண்டது.

கெட்டதையும் நல்லதாகவே கொள்ளும் பரந்த உள்ளம்
தமிழர்களுக்கிருந்தது. நச்சுப் பாம்பினை நல்ல பாம்பு
என்றனர். சிலர் இதுபோலும் உயிரிகளைத் தொழவும்
தொடங்கினர். அதிலிருந்தும் அருளாற்றல் வெளிப்
படுமாறு கண்டனர். தின்னவரும்புலி தன்னையும்
அன்னை பராசக்தியின் வடிவாய்க் கொண்டனர்.

தமிழ்மொழிச் சொற்களில் அவர்கள் பண்பாட்டின்
தோற்றம் கண்டு இன்புறலாம்.

நஞ்சினை நன் ( நல் ) என்றே தொடங்கினர்.  அதன்
தலை " நல் "  (  நன் )  ஆனது.  நஞ்சும் ஒரு நன்மையைச்
சுரக்கும்.   சு என்பதை விகுதியாய்ச் சேர்த்தனர். பொருளற்ற
விகுதியாகவும் கொள்ளலாம்; சுரத்தல் ( ஊறி வெளிவரல்)
குறிப்பாகவும் எடுத்து அமைதி காணலாம்.

நச்சுப்பாம்பு என்று சொல்ல நினைத்தாலும் அந்த நச்சு
என்ற சொல்லிலும் நன்மை தொனிக்க அமைத்த அரிய
பண்பாட்டுக் கூறு தமிழருடையதாகும்.

விடப்பாம்பை ஓர் ஓலைப் பெட்டிக்குள் அடைத்துக்
குற்றவாளி அதற்குள் கையைவிட பாம்பு அவன்
தேகத்தினுள் நஞ்சை விட அவன் உயிரை விட
இப் பல விடுதல்களால் அரசு அவன் உடலை
உறவினரிடம் விடலானது..   விட விட விட விட
நிகழ்ந்ததனால் அது விடமாகி,   பின் ஒருவாறு
மெருகூட்டப்பட்டு விஷம் என்று மறு தோற்றம்
கண்டது. இங்ஙனம் தந்த தண்டனை
நிறைவேறுவதும் சில வேளைகளில் நடந்தன.

இப்படியான சிந்தனை மெல்லழகே தமிழின்
உள்ளழகு ஆகும்.

இனிப் பாஷாணம் என்ற சொல் அமைப்பினை
யும் கண்டு தேனருந்தத் தவறாதீர்.

https://sivamaalaa.blogspot.sg/2012/07/blog-post_23.html

பின்னர் செப்பம் செய்யப்படும்

செவ்வாய், 3 ஏப்ரல், 2018

பூமிக்குத் தமிழில் உள்ள பெயர்கள்: ஒரு தொகுப்பு:-



பூமி பற்றிய சொற்கள்.

பூமிக்குத் தமிழில் உள்ள பெயர்கள்:  ஒரு தொகுப்பு:-


பூத்தல்:  தோன்றுதல்.

பூ+ ம் + இ  =  பூமி.

பல உயிர்களும் தாவரங்களும் ( நிலைத்திணை உயிரிகளும்)
தோன்றுமிடம்.   அல்லது  இறையருளால் தோன்றிய ஓர் இடம்
அல்லது கோள்.

தருதல் :  கொடுத்தல்.

தரு+ அணி > தார்+அணி =  தாரணி.

தரு என்பது தார் என்று திரியும்.  தரு> தார் ( தாராயோ என்ற
வினைமுற்றை நோக்கின் புரியும்.)


தாரணி > தரணி.  இது   முதனிலை குறுகிய சொல்.

தரணி >  தரு+ அணி > தர்+ அணி > தரணி.
இதில் உகரம் கெட்டது.


தருதல்:  தரை.

தரு+ஐ = தரை.

இது பல மொழிகளிலும் பரவிய தமிழ்ச்சொல். டெரா என்று

இலத்தீன் மொழிக்கும் சென்றது நம் பெருமைக்கு¡¢யதே.

தமிழ் பல மொழிகட்கும் சொல்வளம் தந்துள்ளது.

இடம்:

எதை எங்கு இடுகிறோமோ அது அங்கு இடம் கொள்கிறது.

இடு+அம் = இடம்.

இடு> இடை.

இடு >இடுக்கு.  (கு - விகுதி).


மேல் இருக்கும் இடம்:


மே+து + இன் + இ.

மேல் (தன்மேல்) உயிர்கள் தாவரங்கள் இவற்றை உடைய (து

 ) ஆகிய இடம்.

வினோதம் என்ற சொல்.

ஓதுதல் என்ற சொல் இப்போது பலருக்கும் பல
பொருளைத் தருவதாக இருக்கின்றது.  "அந்த
அறையில் என்ன நடக்கிறது என்றவர்க்கு
அங்கு என்னவோ ஓதிக்கொண்டிருக்கிறார்கள்
என்று பதில் வருகிறது. இது பாடம் படிப்பதைக்
குறிக்கவில்லை. சமய மந்திரம் ஓதுவதையே
சுட்டுகிறது. ஓதாமல் ஒரு  நாளும் இருக்க
வேண்டாம் என்றால் ஒரு நாளும் படிக்காமல்
இருக்க வேண்டாம் என்பதே பொருள் என்று
தமிழாசிரியன்மார் சொல்லிக்கொடுப்பர்.

யாரோ காற்றில் ஓதிவிட்டு அது வந்து
இவரைத் தாக்கிவிட்டது என்று பேசிக்
கொள்வதும் காதில் விழுகிறது.

உண்மையில் ஓது என்பது மிக்க எளிதாய்
அமைந்த  ஓர் ஒலிக்குறிப்புச் சொல். ஓ
என்பது ஒரு நெட்டொலி. அதை
எழுப்புவதையே முற்காலத்தில் ஓது
என்றார்கள். ஓ என்பது ஒலியைக்குறிக்க, து
என்பது வினையாக்க விகுதியாய்
வருகின்றது. இன்னோர் எடுத்துக்காட்டு:
விழுது என்பது. விழு என்ற வினையினின்றே
இதுவும் அமைந்தது.கை என்பது ஒரு சினைப்
பெயர். அதாவது உறுப்பின் பெயர்.
அதில் து விகுதி சேர்த்துக் கைது என்ற சொல்
 அமைந்தது. ஒரு குற்றவாளியைக் கையால்
 பிடித்து அடக்குவதைச் செயலளவில்
குறிக்குமென்றாலும் சட்டத்தில் இதற்கு
வரையறவுகள் இருத்தலை அறிஞர் சுட்டுவர்.
 நாம் விளக்குவது சொல் மட்டுமே.

சிறிய கொய்யாக் கனியையே பார்த்தவர்
இப்போது தலைப் பெரிதாய் ஒன்று காணின்,
 அதைப் புதுமை என்று சொல்வர். அதாவது
பெரிது என்று ஓதுவர்.  அல்லது வியன் என்று ஓதுவர்.
வியன் என்றால் பெரிது என்று பொருள்.

இச்சொல்லை " விரிநீர் வியனுலகு"
என்று குறளில் காணலாம்.

வியன் ஓது அம் > வினோதம்.
(பெரிது என்று ஓதுதல்),

பிற்காலத்தில் வழக்கில் பெரிதாயினும்
சிறிதாயினும்  புதுமையாய் வியக்க வைக்கும்
பொருளைக் குறித்தது இந்தச் சொல்.

ம்... விய வியத்தல் என்ற சொல்லிலேயே
வியன் இருக்கிறதே. காணவில்லை?

வினோதமென்பதில் ஒரு யகரமே
வெட்டுண்டது.


இதற்கு மற்றொரு முடிபும் கூறலாம்,  அது
இங்கே  சொடுக்கிக் காண்க.

http://sivamaalaa.blogspot.com/2016/06/blog-post_59.html

சில சொற்கள் இருவழிகளில் பிரித்துக்காணக்கூடியனவாய்
இருக்கும். இவற்றைப் பல்பிறப்பிகள் அல்லது இருபிறப்பிகள்
என்று பொருந்துமாறு குறித்தல் கூடும். சில புலவர்கள்
இவற்றைப் பாடல்களில் அமைத்து சில பொருள்கள் தோன்றப்
பாடுவர்.   சிலேடை : சிலவாக எடுத்துக்கொள்ள இடந்தருபவை,
சில+எடு+ஐ.  எடு என்பது முதனிலை திரிந்து ஏடு என்று
வந்துள்ளது.  இதுவே சிலேடையாம். சில்+ஏடு+ஐ எனினுமாம்.


மாற்றம் சிறிதே.  அறிந்து மகிழுங்கள்.




திங்கள், 2 ஏப்ரல், 2018

தென் கண்டத்துப் பாலை அழகு Australian deserts



மேற்குத் தென்`கண்டத்தில்
மிகுவிரி மணற்பரப்பும்
ஏற்கும் ஒளிவெள்ளத்து
எல்லோன் இறங்குமுகம்.

ஒட்டகத்து உயர்முதுகை
ஒட்டியே அமர்ந்து நகர்
வெட்டவெளிச் செலவினையே
வேண்டிவரு வோர்பலரே.

தாழ்வரு செடிகொடிகள்
தருங்கவின் கண்டுவிட்டீர்
வாழ்வருகி விட்டவரள்
வண்ணமிது கண்ணுறுவீர்.

மாலைவெயில் மஞ்சளிட்டு
மனம்கொஞ்சும் இராக்கூட்டும்
பாலையிலும் இயற்கைத்தாய்
பதுக்கிவைத்த பெருகெழிலே.


 அரும்பொருள்:

மேற்குத் தென் கண்டம்:  ஆஸ்திரேலியாவின்
மேற்குப் பகுதி.
ஒளி வெள்ளம் :  சூரிய ஒளி.
எல்லோன்: சூரியன்.

வெட்ட=  வெளிச்சமுள்ள
செலவு :  பயணம்
வேண்டி : விரும்பி

தாழ்வரு : தா(ழ்)வரங்களாகிய.
வாழ்வருகி : உயிர்கள் வாழாத.
வரள் வண்ணம்: வரண்டுபோன அழகு.

இரா: இரவு
கூட்டும்: சேர்க்கும்
பெருகெழில்: அதிக அழகு.
பாலை: பாலைவனம் 

கருத்து:  வரண்டுவிட்ட உயிர்கள் வாழாத பாலை
வனமும்கூட மாலை வெயில் சாயும் நேரம் ஒட்டகத்தில்
ஏறிச்செல்கையில் ஓர் மறைந்துகிடந்த ஒப்பற்ற அழகினையே
வெளிக்காட்டுகிறது.  இயற்கை அனைத்தும் எல்லாம்
அழகே.