இந்தச் சொற்கள் ஆய்வுக்குரியவை.
பரிவற்சனம் என்பதற்கு பொருள்கூறுகையில், அகரவரிசை ஆசிரியர் கதிர்வேற்பிள்ளை அவர்கள், 1. கொலை, 2 விகுதல் என்ற இருசொற்களைப் பதிவிட்டுள்ளார். விகுதல் என்பது அருகிவழங்கிய ஒரு சொல்வடிவம் என்று தெரிகிறது. விகுதல் என்ற சொல் சில அகரவரிசைகளில் பதிவுபெறவில்லை என்று தெரிகிறது.
விகுதல் என்ற வினைவடிவம்:
மிகுதல் > விகுதல் என்ற மகர - வகரத் திரிபாகவும்,
விழுதல் > விகுதல் என்ற வழித் திரிபாகவும்
வரும்.
எடுத்துக்காட்டு:
மிஞ்சு > விஞ்சு;
தொழுதி - தொகுதி. ( திரட்சிக் கருத்து).
மிகு> விகு> விகுதி ( மிகுதி - விகுதி).
தொகு> தொழு - திரிபு.
புழுதி என்பது பூதி என்றும் திரியும்.
பகுதி என்பது பாதி என்றும் மிகுதி என்பது மீதி என்றும் திரிவதால், விகிதம் என்பது வீதம் என்று திரிவது படியமைந்ததே ஆகும். அகலமாகப் பரவி நிற்கும் மரம் ஆலமரம் என்று பெயரிடப்பட்டதையும் நோக்குதல் வேண்டும்.
விழுக்காடு (விழு)
விகிதம் ( விகு< விழு)
இவற்றின் தொடர்பும் அறிந்துகொள்க.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக