இந்த இருசொற் புனைவை இப்போது அறிவோம்.
ஆதி என்ற சொல் திருக்குறளில் முதல் பாட்டிலே வந்துவிடுகிறது. ஆதி என்பது ஒரு தமிழ்ச்சொல். அதனை வெளியாரியர் சொல் என்று இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப்புலவர் எவ்வாறு நம்பினர் என்று எண்ணிப்பார்க்கையில் விந்தையாக உள்ளது. அந்நாட்களிலே, புலவர்கள் சிலர் சற்றுத் தயக்கத்துடனே அது ஆதல் என்ற வினையிலிருந்து தி என்னும் விகுதி புணர்த்து எழுந்த சொல் என்று சுட்டிக்காட்டினர். இதற்கு முன்னரே இங்கு, சொல்லாக்கத்தில் அல்லது புனைவின்போது, சொல்லின் பகவுகள் ( உள்ளுறுப்புகள்) தமிழ் அடிச்சொற்களாய் இருந்தால், அஃது தமிழ்ச்சொல்தான் என்று எழுதியிருந்தேம்.1
( அஸ்தி , ஆஸ்தி என்ற என்ற சொற்கள் ஆதி என்பதனோடு தொடர்பு பட்டவைபோல் ஒலிப்பின் காரணமாகத் தோன்றினாலும், கருவில் அஸ்தி (எலும்பு) முந்தித் தோன்றியதாய் எண்ண ஆதாரமில்லை. விந்து என்னும் நீர்ப்பொருளிலிருந்தே தோற்றம் ஏற்படுகிறது. )
ஆதி என்னும் சொல் ஆதல் என்னும் வினையடியாய்த் தோன்றியது. இச்சொல்லுக்கும் இந்தோ ஐரோப்பியத்துக்கும் தொடர்பு கிட்டவில்லை.
பத்தியம் என்ற சொல்லில், பற்றி இயலுதல் என்பதே பொருள். கூடுமானவரை, சொல்லிலுள்ள அடிகளை வைத்தே சொல்லை விளக்கவேண்டும் என்பது எமது கொள்கையாகும். ஆகவே ஆதிபத்தியம் என்பது உண்மையில் ஆதி பற்று இயமே ஆகும். இச்சொல் தமிழுடன் மிகுந்த தொடர்பு உடையதே ஆகுமாறு உணர்க.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
---------------------------------------------------------------------------------------------------------
இருந்தேம் - இது இருந்தேன் என்பதன் தன்மைப் பன்மையாக இங்கு கையாளப்படுகிறது.
செனக்ஸ் என்ற இலத்தீன் சொல், பழைமை, பயின்ற முதுமையுடையது என்பது சொல்லப்படுகிறது. செந்தமிழ் என்ற சொல், இந்தச் சொல், தமிழ் என்பதனுடன் தொடர்பு பட்டபின் பழமை குறிக்கக்கூடும். சென்-, சென்றது என்பனவும் பழமை குறிக்கலாம். நீங்கள் எழுதி தெரிவிக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக