வந்த திருடனோ தான்வேண்டும் எப்பொருளும்
எந்த இடுக்கிலும் தேடுவானே தேடியது
கிட்டும் வரைக்கும் அலசிக் குவித்துவிட்டுக்
கொட்டுமழை பார்ப்பதில் லை.
வந்த திருடன் - திருடும் பொருட்டு வீட்டுக்குள் நுழைந்த திருடன்.
இடுக்கிலும் - விரிந்த இடமுதல் இடுக்குகள் வரை எங்கும்.
அலசிக் குவித்துவிட்டு - கன்னா பின்னா என்று அங்குமிங்கும் எறியாமல்
அப்படியே போட்டுவிட்டுப் போய்விடுவான். உங்களுக்கு அடுக்கியா வைத்துவிட்டுப் போவான்?
அவன் வீட்டிலிருந்து ஓடும்போது பெருமழையாய் இருந்தாலும் நிற்கப்போவதில்லை. மீண்டும் வீட்டைத் தூய்மைப் படுத்த மூன்று நாட்கள் தேவைப்படலாம்.
[ நீங்கள் காணோம் என்று தேடிக்கொண்டிருந்த சில பொருட்கள் வெளிப்போந்து கிடக்கலாம். எடுத்துப் பத்திரமாக வைக்கவும் ]
திருடர்களும் பொய்யுரையாளர்களும் இவ்வுலகில் உள்ளனர்; அவர்களுடன்
சமாளித்துத்தான் வாழவேண்டியுள்ளது.
என்ன போயிற்று என்று கேட்கிறீர்களா? ஒன்றும் இம்முறை போகவில்லை. முன்பு என்னிடம் ஒரு தங்கச் சங்கிலி இருந்தது. அதை முன்பே ஒரு திருடன் ஜொகூர்பாரு நகரில் இழுத்துக்கொண்டு போய்விட்டான். ஆகையால் இவன் எதையும் அடையாமல் போகவேண்டியதாயிற்று. தோசை வாங்க வைத்திருந்த வெள்ளி ஐந்து போய்விட்டது. நல்ல காப்பி ஒன்று ( குளம்பிநீர்) குடித்து மகிழ்வுடன் இருக்கட்டும்.
எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்.
படம் - திருட்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக