வெள்ளி, 7 அக்டோபர், 2022

பிரிந்தோர் சேர்ந்துவிட்டால்....

 தொன்மக் கதைகளில் ஓர் அரக்கன் வருவான்.  மிகப் பெரிய ஆற்றலுடையோன் ஒருவன் அந்த அரக்கனை இரு கூறாக்கிவிடுவான்.  அப்புறம் இரு கூறான அரக்கன் இரண்டு பக்கமும் வந்து இருகூறிணையாய்த் தோன்றித் தாக்குவார்கள்.  இத்தகைய கதைகள் என்ன கூறுகின்றனவோ, அவை இன்றும் நடந்துகொண்டுதாம் உள்ளன.  ஒரு நாட்டை இரண்டாகப் பிரித்துவிட்டாலும் பின்பு இரண்டும் இணைந்துகொண்டு பிரித்தவனை வந்து தாக்குவதும் நடைபெறக்  கூடியதுதான்.  பிரிந்தவர்கள் சேர்ந்துவிடாமல் இருக்கவும் ஓர் அரசதந்திரம் இருக்கவேண்டும்.  அது தொலைநோக்குடன் செயல்படுத்தப் படவேண்டும்.  முன் காலத்தில் அது சற்று எளிதாக இருந்திருக்கக் கூடும். ஆனால் இன்றைய மக்களாட்சி நாடுகளில் பல்வேறு அரசியல் கட்சிகள் ஆட்சிக் கட்டிலில் அமர்வதால்,  நாம் எதிர்பார்க்கும் ஒற்றைத் தொலைநோக்கு அவ்வளவு எளிதில் வந்துவிடாது.  அதனால் பிரித்தவன் அடித்து நொறுக்கப்படுவதும் நடைபெறக்கூடும்.  உலக அரசியல்களைக் கவனித்து இதனை உணரவேண்டும்.


இருகூ றானோர் இணைந்தொன்  றாய்வந்தும்

ஒருசேர நின்றுபோர் நடத்தலும் கூடுவதே;

பிரிவூர நின்றோர் பிரிந்தவா றிருந்துவிட

அறிவார்ந்  தவைசெயல் அரசுதந்  திரமாமே.


இரு கூறு --  இரண்டு துண்டுகள்

ஒருசேர - ஒற்றுமைப் பட்டு

கூடுவதே - சாத்தியமே

பிரிவூர -  பிரிவு ஊர -  பிரிந்து நின்றிடும் வண்ணம்

அறிவார்ந்தவை ---  அறிவோடும் கூடிய உபாயங்கள்.

அறிவார்ந்தவை  =  ராசதந்திரங்கள்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.



கருத்துகள் இல்லை: