சனி, 22 அக்டோபர், 2022

சமுகம்

 சமுகம் என்ற சொல்,  அதன் அமைபு பற்றி , இருவேறு வகைகளில் விளக்கப்பட்ட சொல் ஆகும். நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளாத பிற அமைபுகளும் எடுத்துக்காட்டப்படுதல் உண்டு. ( அமைபு என்ற சொல்லுக்குத் தானே அமைதல் என்று பொருள் கொள்ளவேண்டும்.   " தமிழ் அமைபு"  என்றால் தமிழ் தான் அமைந்த விதம் என்று பொருள். அமைப்பு என்பது வேறு சொல்,  வினைப்பகுதி ஒன்றாயினும்.)


சம் என்பது தம் என்பதன் திரிபு.  தனிச்சிறப்புகள் பல உள்ள சனி என்ற கோளின் பெயரும் இவ்வாறே தனி என்பதனின்று திரிந்ததே. கோள் அல்லது கிரகங்களிலே சனி மட்டுமே ஈசுவரப் பட்டம் பெற்றதென்று கூறப்படுதல் காண்க. இதற்கு இறைமைப் பண்புகள் உள என்று இதன் பொருள்.


சமுகம் என்பதே சொல்.  சமூகம் அன்று என்று ஆசிரியர்கள் சொல்வர்.


மனிதர்கள் பெரும்பாலும் தாம் பிறந்து வளர்ந்த  கூட்டத்தைத் தாம் விரும்பிச் சேர்ந்திருப்பர்.  சிறு கூட்டமாயினும் பல கூட்டங்கள் கொண்ட மாநிலம் ஆயினும்  ஒரு நாடாயினும் தம் கூட்டத்தையே தாம் உகப்பது மனித இயல்பு.  விலங்குகள் இயல்பும் இஃதே ஆகும். தம் + உகம் > சம் + உகம் > சமுகம்  ஆயிற்று.  இஃது ஒரு தமிழ்த் திரிபுச் சொல்.  இது தமிழ்ப் பேச்சு வழக்கிலிருந்து வேறு மொழிகட்கும் சென்றேறிய சொல்.


தமிழே மூலமொழி.


அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்னர்.


கருத்துகள் இல்லை: