புதன், 31 ஆகஸ்ட், 2022

மடம், மடுத்தல் வினைச்சொல்.

கேட்டல் என்பதற்கு இரு பொருள்: 1  வினாவுதல் (கேள்வி கேட்டல்),  செவி மடுத்தல் (  சொன்னது அல்லது ஒலி காதுக்கு எட்டுதல் ).

மடுப்பு  ( மடு-த்தல் வினையினின்றும் அமைந்த சொல்),  மடிப்பு என்றும் பொருள்படும். இது யாழ்ப்பாண வழக்கு  ஆகும்.  ஆகவே, மடி-த்தல்,  மடு-த்தல் என்பவற்றிடை மயக்கம் எனலாம்.

மடு என்பது பள்ளமான இடம் என்றும் பொருள் படும்:  " மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு"  என்ற வழக்கில் இது காணலாம்.

மடு - நீர்நிலை என்பதுமாம்.

மடுத்தல் - உண்ணுதல். நிறைத்தல்,  சேர்த்தல்,  ஊடுசெல்லுதல், பரவுதல் என்பனவும் இச்சொல்லால் தெரிவிக்கலாம்.    செவிமடுத்தல் என்பது செவியிற் சென்று அடைதல் என்று பொருள்கொள்ளவேண்டும்.

இங்கு இச்சொல்லின் எல்லாப் பொருள்களையும் முற்ற விளக்கவில்லை. சில விடப்பட்டன.  மடம் என்னும் சொல்விளக்கமே இவ்விடுகையின் நோக்கம் ஆகும்.

மடங்கள் உண்டாக்கப்பட்ட போது,  அவை  நல்ல கருத்துக்களை மக்களிடம் கொண்டுசேர்க்கவும்  மக்களும் தங்களை மடத்திடை கொண்டுசேர்த்து பெறற்குரிய செய்திகள் முதலியன பெற்றுக்கொள்ளவும்  ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. மேட்டு நீர் பள்ளத்தில் ஓடிச் சேர்தல் போலும்  ஓர் விழைநிகழ்வு கருதியே அவை அமைந்தன. மடுத்தல் உண்ணலும் ஆதலின் அங்கு உணவு உண்ணுதலும் நடைபெற்றது.  செவி மடுத்தற்கும் செய்தி கிட்டிற்று. இவ்வாறு பல வகைகளில் மடுத்தல் நடைபெற்றது என்பதுணர்க.

மடு + அம் -   மடம் ஆயிற்று.

மொழிவரலாற்றில் அகர வருக்கச் சொற்கள் வளர்ச்சி பெற்று உயிர்மெய் முதலாய் ஆயின,  ஆதலின்  அடு> மடு என்பதுணர்க.

இந்த அணுக்கம், செவிமடுத்தல் என்பதில் இன்னும் உள்ளது.  செவியை அடுத்த செய்தியே செவி மடுத்த செய்தியும் ஆகும்.

எமக்கு அப்புலவரிடத்தே ஒரு மடுவுண்டாகிவிட்டது என்றால்,  நீர் பள்ளத்தினுள் செல்லுமாறுபோல,  ஓர் ஈர்ப்பு உண்டாயிற்று என்பது பொருள்.  மனம் இடுகின்ற இடத்தில்தான் மடு.  இடு> இடு+அம் > இட்டம்,  இடு> ஈடு ( முதனிலைத் திரிபுச்சொல்.  ஈடு> ஈடுபடு > ஈடுபாடு. இவ்வாறு உணர்க.

ஆதிசங்கரரின் கருத்துப் பரவல், தமிழ்நாட்டிலிருந்தே நடைபெற்றது. மடம் அமைத்தலும் இங்கிருந்தே நடைபெற்றமையால், மடம் என்னும் சொல்லும் அவ்வாறே விரிந்து பிற இடங்களிலும் பயன்பாடு கண்டது.  மடம் - மட் ஆனது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

கோயில் ( தமிழ்), கொய்ல் ( மலாய்). தமிழ்ச்சொல்.

 கோயில், கோவில் என்பன தமிழில் வழங்கும் சொற்கள்.  கொய்ல் என்பது நம் சைவ வைணவத் தொழுகை இடங்களுக்கு மலாய் மொழியில் வழங்கும் பெயர். 

கோ என்றால் அரசன்.  இல்     என்பது   இடம், வீடு என்றெல்லாம் பொருள்தரும் சொல்.  முன் காலத்தில் அரசர்களே கோயில்களைக் கட்டினார்கள்.  அதனால் இவ்விடங்கட்குக் கோயில் என்று பெயர்  உண்டாயிற்று.

முன் காலத்தில் மலாய் மக்களும் இந்துக்களாகவே இருந்தனர்..  ஆகையால் அவர்களுக்கு இந்தச் சொல் சொந்தமில்லை என்று உடனே சொல்லிவிட முடியாது.   ஆய்வு செய்யவேண்டியது கடன்.  ,ஆனால் கோ, இல் என்ற சொற்கள் அவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.  போலினிசிய நாகரிகமும் நீண்ட காலம் தொடர்ந்துவரும் நாகரிகம்தான்.   

 போலினிசிய மொழிக்குடும்பத்தில்   (Keiki ) கெய்க்கி என்ற சொல் இளவரசனைக் குறிக்கிறது. இது ஒலியில்  கோ (அரசன் ) என்பதற்கு நெருக்கமான சொல் என்று கொண்டாலும்,   "கோ"  என்பதற்குச் சற்று தொலைவிலிருப்பது என்றே கூறவேண்டும்..  அரசி என்பதற்கு மோ ஈ என்பர்.

இந்தோனீசிய மொழியிலும் மலாய் மொழியிலும்  ராஜா என்பதே அரசனைக் குறிக்கும்.   ராஜா என்றும்  ர>>>ஜா என்று ரகரத்தை இழுத்தும்  (இந்தோனீசிய மொழியிலும் )  சொல்லப்படும்.  போலினிசியத்தில் கோ என்பதைக் கண்டுபிடிக்க இயலவில்லை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

              

திங்கள், 29 ஆகஸ்ட், 2022

நீரைச் சேமிக்கும் வழிகள்

 சொட்டுச்சொட்  டென்றுகுழாய் வடிக்கும் நீரை

பட்டுப்போல்  பாத்திரத்தில் சேர்த்து வைப்பாய்!

கொட்டுமழை நீரெனினும்  அதிலே கொஞ்சம்

குடிதழைக்கக் குடிநீரை ஆக்கிக் கொள்வாய்

மட்டகலத்  துயர்செறியும் உலகின் மக்கள்

மறைவாக வடிக்கின்ற கண்ணீர் ஏனோ/

குட்டைகுளம் வயமுள்ள துளிகள் வற்றிக்

குடிநீரோ இல்லாமற்  போயிற்  றென்றே.


முட்டையென விழிபிதுங்கி மக்கள் நின்றார்

மூலைமுடுக் கெங்கிலுமே  ஓலம் ஓலம்.

கட்டையாகி விடுமோஇவ்  வழகு மேனி,

கத்தும்குரல்  இவ்வாறே காதில் கேட்கும்,

வட்டவட்ட மாய்ச்சுழலும் வாட்டம் வேண்டாம்,

வந்திடுவீர் நீர்ச்சேமிப் பறிந்து வாழ்வோம்,

சொட்டனைத்தும் சேமிப்பீர் சோரும் சோகம்

சூழலிலாச் சொகுசியன்ற உலகைக் காண்போம்.


நீர் தேக்கும் வழிகாண்பீர்

மெய்ப்பு பின்னர்.

  

பிரான்ஸ் சுற்றுலா

 நம்  வலைத்தள அன்பர்கள் திருவாளர்கள் ரூபன் சாருகா இருவரும் ஒரு திருமணத்திற்காக பிரான்ஸ் நாட்டுக்குச்  சென்றிருந்தனர்.  அத்திருமணம் ஒரு மாதாகோயிலில் நடைபெற்றது. பிரான்சிலும் பல சுற்றுலாத் தலங்கள் உள்ளன.சுற்றுலாவிலும் உலக நோக்கும் புவியியல் அறிவும் வளரும் வாய்ப்பு உள்ளன. இந்தப் படங்களில் நம் அன்பர்களைக் காணலாம்.







வெண்பா

பற்றில்லார் இவ்வுலகில் என்றால் படுத்துறங்கி
எற்றுக்கென் றீர்ப்பிலார் ; நன்றேநாம்  ----- சுற்றுலாச்
சென்றிடங்கள் கண்டு மகிழ்தல்;   செலவினால்
வென்றிட வேண்டும்  அறிவு.

செலவு -  பயணம் செல்லுதல்
சுற்றுலா - பயணம்.
பற்று -  உலக  மேல் உள்ள பற்று.
எற்றுக்கு - எதற்கு
ஈர்ப்பு  -  உலகின்மேல் உள்ள ஆசையினால் உந்தப்படுதல்.

மகிழ்வீர்.
மெய்ப்பு : பின்பு.




காலை வணக்கமும் தொடர்தரு வாழ்த்தும்

 காலையின் மலர்வில்  கனிந்துறு  கலைகள்

ஓலையில்   மலர்ந்த உன்னதம் போல, 

செந்தமிழ் மலர்ந்த  சீரழ காகும்  ----

உங்கள் குடிமைப் பண்பே,

தங்குக நெடிதே,  தழைக்கவே இனிதே.


இது திருப்பம் தரும் திங்கட் கிழமை

இனிய காலை வணக்கம் என்று சொல்லிய அன்பருக்கு.



வியாழன், 25 ஆகஸ்ட், 2022

திரைகடல் ஓடியும்.

 திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.


திரை என்பதற்கும் திரவியம் என்பதற்கும் ஓர் உறவு உள்ளது.  திரை என்பது நீரின் திரட்சி.  அடிப்படைக் கருத்து இங்கு திரட்சிதான். திரவியம் -  திரட்சி.


திர  ( அடிச்சொல் ).  திர+ ஐ >  திரை.  ஐ என்பது தொழிற்பெயர் விகுதி.


திரை  கட:   திரையைக் கடந்து செல்க.  கட என்பது வினைச்சொல். ஏவல் வினை.

அல்  ஓடியும் :  இரவு வந்துவிடும்.  அப்போதும்   ஓடிக்கொண்டிரு.

திரவியம் தேடு.    ( இரவிலும் )  வேலைசெய்து   தேடிக்கொண்டிரு.  போய்ச் சேர்ந்த தேசத்தில்.


கட +  அல் > கடல்,  இச்சொல்லில்  ஓர் அகரம் கெட்டது.

கடத்தற்கு அரியது கடல்.

அல் விகுதி என்றாலும்,   அல்லாதது  ( கடத்தற்கு அல்லாதது ) என்றாலும்

பொருள் தந்துகொண்டிருக்கிறது.


இது மகிழ்வு தரும் பொருண்மை.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

அன்பருக்குக் கவிதை

 எம் தொலைப்பேசிக்கும்  அன்பர் சிலர் சில கவிகளை எழுதி அனுப்புகின்றனர். இவற்றை வாசிப்பது  ( வாயிப்பது! )  ஆனந்தமே.

அவர்கள் கவிதைகளை அவர்களைக் கேட்காமல் யாம் வெளியிடலாகாது.

செவ்வாய்க்கிழமை பிரதோஷ வணக்கம் என்றார் அன்பர் ஒருவர்.

அவருக்கு யாம் எழுதியது:

புதன் கிழமை

 

புதன் தரும்  புதுமை,  சிவம்  தரும்  அருளுடன்

கலந்து காலை, மாலைஎப்  பொழுதும்

நிலவு பே  ரன்புடன் உலவிடும் வணக்கம்!

வாழ்கநீர்  வளமுடன்  வாழ்க வாழ்கவே

 

என்பது.


மகிழ்ச்சி  கவிதை!

மனம்நிறை கவிதை.

உணர்ச்சி கவிதை.

ஊன் கிளர்  கவிதை.


திரவியம் திரட்டப்படுவது.

 திரவியம் என்ற தமிழ்ச்சொல்லை இன்று சுருக்கமாக அறிந்துகொள்ளுவோம்.

இதனைத தமிழ் என்று மெய்ப்பித்தலும் வேண்டின்,  திரள் -  திரளுதல் என்ற வினைச்சொல்லிலிருந்து புறப்படுங்கள்.  தொடர்பும் உறவும் சொற்களுக்கிடையிலும் வெளிப்படும்படி அறிவித்தலே உண்மையான கற்றலாகும். 

திரளுதல்:

திரள் >  திரள் + வு >  திரள்வு.    (திரளுதல் ).

ஒரு -வு விகுதி சேர்க்க அகராதி ஒன்றும் தேவையில்லை.

இனி,   இ + அம் என்ற இருவிகுதிகளைச் சேர்க்கவேண்டும்.

திரள்+வு+  இ+ அம் >  திரள்வியம்.

இப்போது,  ள் என்பதைக் கெடுத்து ( எடுத்து)  விடுங்கள்.

திரவியம் ஆகிவிடும்.  இறுதி விகுதி தவிர இடைவந்த விகுதி போன்றவற்றை இடைநிலைகள் என்றலும் கூடும்.  இவை எல்லாம் பலவேறு வகைகளில் குறிக்கும் திறன்களே. பெயர்களே இல்லாவிட்டால்  அது இது என்றன்றோ குறிக்கவேண்டிவரும்.  அது இலக்கணத்தை இன்னும் கடினமாக்கி எது என்று கேட்கும் நிலையை உண்டாக்கிவிடும்.  அதனால்தான் பெயர்கள் கொடுக்கிறோம்.  வீதிகளுக்கெல்லாம் பெயரில்லை என்றால் போய்ச்சேர்வது கடினம்!!  இடைநிலைகள் என்பது சரி.  விகுதிகள் என்றாலும் மோசமில்லை.   

திரட்டப்படும் விலையுள்ளது  அல்லது மதிப்புமிக்கதுதான் திரவியம்.

சொல்லமைப்புப் பொருள் அவ்வளவே.  மழைக்காலத்தில் பஞ்சு நீரை உறிஞ்சிக் கொண்டமை போல,  வழக்கில் சொற்கள் பிற பல பொருட்பருமனை அடைந்து விளையாடல்களைச் செய்யும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர். 

திங்கள், 22 ஆகஸ்ட், 2022

சுயம்பு தம்பு (தம்புசாமி, தம்பையா)

 சிவபெருமானை அகண்ட சுயம்பு  என்று விளக்கியுள்ளனர்.  அவர் அம்பிகையின் ஒரு பாகன்* என்றும் சொல்வர்.

முருகனுக்கும் சிவனுக்கும் ஒரு வேற்றுமை யில்லை என்றும்  சிவனே முருகன் என்றும்  அருணகிரிநாதர்   தம் பாடல்களில்  கூறுகிறார்.  ஒரு பெரும்புலவர் சிவனைப் பாடுவேன்  ஆனால்  முருகனைப் பாடமாட்டேன் என்று மிகுந்த பிடிவாதத்துடன் இருந்தாராம்.  அப்புலவரைத் தடுத்தாட்கொண்டு,  தன் உருவைக் காட்டி,  அவரை ஆண்டருளினாராம் முருகப்பெருமான். இருவரும் ஒருவரே என்று உணராதிருந்த புலவர் அவர்.

இயற்கையின் கண்ணுறும் அழகெல்லாம் முருகனே.  முருகு எனில் அழகு.

இனிச் சுயம்பு என்ற சொல்லைக் காண்போம்.

சொந்தமாகவே தோன்றி  இருத்தலை உடையதுதான்  சுயம்பு.

சொம் என்பது அடிச்சொல்.

சொம்+ தம் >  சொந்தம்.  இங்கு தம் என்ற இறுதி வருதல் காண்க.

தம் என்பதை முன் விளக்கியுள்ளோம்.

இனியும் சிறிது சொல்வோம்.

சொ >  சொம்.

சொ + (அ )ம் >  சொம்.     சொ + அம் >  சொயம்.>  சுயம்.   யகர உடம்படுமெய்.

முதலாவது அமைப்பில்,  அகரம் தொகுந்தது.   இரண்டாவதில் யகர உடம்படுமெய் தோன்றியது.   உடம்படுமெய் அற்ற அமைப்பும்  அஃது தோன்றிய அமைப்புமே இரண்டுக்கும் உள்ள வேற்றுமை.

சொ +  து >  சொத்து.

சொம் + து > சொத்து.  இதில் மகரம் தொக்கது.

சொம்+  து + அம் >  சொம்+ தம் > சொந்தம்.

சொந்தமாகத் தோன்றுதல் என்ற வழக்கை நோக்குக.

தானே முகிழ்த்தல்: முகிழ் > மூர் > மூர்த்தி.   தி விகுதி.

சுய =  சுவ.

சுயவம்பு >  சுயம்பு.    அம் =  அழகு.  அம்+ஐ > அம்மை,  அழகு.  சுய+ அம்+ பு.

சுவயம்பு > சுயம்பு.

 சொயம்பு > சுயம்பு.

இன்னா ஓசை விலக்கியே சொல்லாக்கம் முழுமை அடையும். இது ஏன் என்று புரியவில்லை என்றால் பின்னூட்டம் செய்து கேளுங்கள்.


இனி, தம் என்பதும் தாமே தோன்றியது என்று அமைந்து,  சுயம்பு என்றே பொருள்தரும்.

தம் + பூ .  (தாமே பூத்தல்,  பூத்தலுக்கு உள்ள பொருள்களில் தோன்றுதல் என்பதும் ஒன்று.)   பூ > பூமி.

தம்பூ >  தம்பு.   (தானே தோன்றியது).   பூ என்பதை நீட்டினும் குறுக்கினும் ஒன்றுதான்.

சுயம்பு தான் தம்பு.

தம்பு என்பதும் சிவநாமமே.  தம்பையா, தம்புச்சாமி என்பனவும் அதே.


அறிக மகிழ்க.

மீள்பார்வை பின்னர்.

எழுத்துப் பிறழ்ச்சிகள் காணின் பின்னூட்டம் செய்து உதவவும்.



சனி, 20 ஆகஸ்ட், 2022

சீந்தில் எனப்படும் பெரும்புகழ் மருந்துக் கொடி

 சீந்தில் என்பது ஒரு கொடியின் பெயர்.  இது சிந்துக்கொடி எனவும் குறிக்கப்பெறுகிறது. இதற்குப் பிறபெயர்கள் சீந்தி,  சிலாந்தி, சிவேதை,  சின்னம்,சின்னாருகம், சீலம், சீவசஞ்சீவி, பரிவை, பறிவை, பாதாளமூலம், பொற்சீந்தில், நற்சீந்தில், பொற்றாவல்லி, பொன்றாவல்லி, மதி ஆம்பல் (மதுவாம்பல்)  , மதுச்சிரம், மதுபருணிகை, வச்சாதனி  ( வைத்தால் தனி), வசீகரம்,  வயமது, வபாமது, வள்ளிக்கண்டம், விசலி, அமரை, அழுதை,  அனந்தை,  ஆகாசக்கருடன், ஆகாசவல்லி, ஆகாசி  முதலிய பலவாம்.

மது என்பது ம(யங்குவ)து என்பதன் எழுத்துச்சுருக்கச் சொல். இதை முன்னர் எழுதியுள்ளோம்.

நோய்தீர்க்கும் மரஞ்செடி கொடிகள் எவை என்று கண்டறிந்து நலமாக வாழ்வது எப்படி என்பதில் முன்னோர் பெரிதும் கவனம் கொண்டிருந்ததையே இப்பெயர்கள் உணர்த்துகின்றன.  இந்த அறிதொகுப்பில் பல இப்போது இல்லை என்பது இங்கு வருந்துவதற்குரியது ஆகும்.  இப்பெயர்களில் சில, வகைப்பெயர்களாயும் சில உயர்வகை குறிக்கும் பெயர்களாயும் இருக்கின்றன.

சீந்தி என்பது ஜீவந்தி என்றும் மாறிற்று.  இது மெல்லிய வேர்களை மண்ணில் பரவச்செய்து வளர்வது ஆகும்.  சீந்தில் என்பது சீந்தி( )  என்றானது கடைக்குறை. சீவந்தி என்பது ஜீவந்தி  என்றானது மெருகூட்டல்.  ( சீனாவிலிருந்து வந்தது சீனி என்ற இனிப்புத்தூள்.  அதுபின் ஜீனி என்றும் திரிந்தது காண்க).

சில் என்ற அடிச்சொல்  சின் என்று திரியும்.   கல் என்பது கன் என்று மாறியது போலாம்.  கன்> கனம்.  ( கல்லின் தன்மை, கனமாய் இருப்பது).

சின் > சின்னம் ( சீந்தில்).

சின் + து + இல் >  சீன்+து+இல் > சீந்தில்.      இதில்  னகர மெய்யீறு,  ந்  என்று திரியும்.  முதன் நீண்டு சீ என்றாகும்.    இன்னொரு சொல் இவ்வாறு திரிந்தது:  முன் > முந்தி.  சில் > சின் > சிந்து ( சிறு பா).

முது என்பதில் தோன்றிய மூதாதை என்ற சொல்,  முன் எழுத்து நீண்டு அமைந்ததும் அறிக.  மு> மூ.  மூத்தல், மூப்பு என்ற சொற்களும் நீண்டன. நீண்டது குறுகும்; குறுக்கம் நீளும்.  பேதமில்லை.

சில் > சின்.  சில் என்ற அடிச்சொல்,  சில என்ற பொருளும்  சிறியது என்ற பொருளும்   (  இருபொருள்)  உடையது.

புணர்ச்சியில்:,  சில் + நாள் >  சின்னாள்  ( சிலநாட்கள் ).

சின் > சின்னப்பன்.  (பெயர்).

சில் > சில்+ ஆம் + தி >  சிலாந்தி.  ( சீந்தில்).

ஒப்பீடு:
சில்> சில் + அம் + தி >  சிலந்தி.  ( பொருள்:  சிறிய  பூச்சி,  எட்டுக்கால்பூச்சி).  அம் என்பது சொல்லாக்க இடைநிலை.

சிறு + வேர் + தை >  சிவேதை.  ( இடைக்குறை). ( தை விகுதி).

சின்ன + அரு( மை ) +  (அ)கம் >  சின்னருகம்.  சின்ன அரு என்பது சின்னரு என்றது புணர்ச்சி.  பிற இயல்பான ஒட்டுக்கள்.

பரிவை என்ற சொல்,  இது பரவலாகப் பயன்பாடு கண்டதைக் குறிக்கும். நோயாளிக்குப் பரிவு காட்டுவது என்ற மனப்பதிவுச் சொல்லாகவும் இருக்கின்றது..  இருபொருளால் வருகிறது.   பர்  (பர, பரி)  அடிச்சொல்.

பரிவை என்பது பறிவை என்றும்  திரிந்தது. பறித்து வருவது எனினும் ஆகும்.

பிற சொற்கள் பின்னர். இதை முடித்திடவேண்டும்.

Gulancha Tinospora  என்பது இதன் தாவரவியல் (  நிலைத்திணையியல்  ) பெயர். இன்னொரு வகை குலான்சா காவோர்டிஃபோலியா  (caordifolia)  எனப்படும் என்று தெரிகிறது.  தகலோக் மொழியில்   Makabuhay  என்று பெயர் வழங்குகிறது.  இதன் வேர், இலை, கொடி, பழம் முதலிய பகுதிகளும் பயன்படுகின்றன.  Tinospora Crispa என்ற பெயரும் உள்ளது.

முதியவர்களுக்கு வரும் உடம்புவலி, மஞ்சட் காமாலை  முதலியவை மட்டுமின்றி இது ஒரு பன்னோய் நீக்கி என்றும் கருதப்படுகிறது.

இதிலிருந்து செய்யப்படும் சர்க்கரை போன்ற தூள் " சீந்திற்சர்க்கரை"  , "சீந்திலுப்பு"  என்றும் குறிக்கப்பெறும்.  சூக்குமம், சோமவல்லி, தந்திரகம், தூறுபுட்பம், நிறைதருதூறு, பஞ்சகமம், பகன்றை,    என்ற பெயர்களும் உள்ளன.,  தூறு என்பது செடியின் தூறு அல்லது கீழ்ப்பாகம்.

தொடர்புடைய பிற பூண்டுப் பெயர்கள்:   சிவதை. பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி (குறிஞ்சிப்பாட்டு. 88). (பிங்கலந்தை.) ; நறையால் முதலியவாம். சில மேல் குறிக்கவும் பட்டுள்ளன.

பனித்துறைப் பகன்றை  (சங்கச்செய்யுள் தொடர்)  என்பதனால்,  நீர்நிலைகள் உள்ள இடங்களில் இது செழித்து வளரும் என்று தெரிகிறது. ஆம்பல் என்று முடியும் பெயரும் கருதுக.  

பூண்டு என்பது ஒற்றை குறிக்குங்கால் "பூண்டுப்பல்" என்றும் குறிக்கப்படுவதால்,  ஆம் பல்  என்பது ஒற்றைச் சீந்தில் பூண்டு என்றும் குறித்தல் உரியது.  ஆம் பல் >  ஆகும் பல்.  இதிலிருந்து பொருள் திரிபினால், "ஆம்பல்" என்று திரிதலும் உடைத்தாம்.

சங்கச் சான்றோர் நன்கறிந்த கொடி சீந்தில்.  இத்தனைப் பெயர்கள் சீந்திலைக் குறிப்பனவாய் இருத்தலால், இது விரிந்த பயன்பாடு உடைய கொடி என்பது தெளிவு.

இதை வேற்றின மக்களும் பயன்படுத்தியுள்ளனர்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

Note:

Whilst reading this, if you wrongly enter the "compose mode" ( without authority), please do not disturb the text with your mouse  or otherwise. Please exit without causing changes to the text.   Some changes were made by unknown persons.  Thank you for your compliance.

To trespasser:  text not test.  Pl do not change it.



செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

சுனிதா என்ற பெயர்.

 சுனிதா  என்னும் பெயர் எவ்வாறு புனைவுற்றது என்பதைத் தமிழ் மூலம் அறிந்துகொள்வோம்.

சுனை என்ற சொல், நீரினூற்றைக் குறிக்கும்.  மலையூற்று என்றும் கூறலாம். தரையிலிருந்து நீர்வரவுள்ள இடமே சுனை. புல்தரை,  மரங்கள், நிழல் இவற்றுடன் நீருமிருந்தால் மனிதன் ஓய்வு பெற்றுத் தன்னை உயிர்ப்பித்துக் கொள்ள அஃதே தகுந்த இடமாகும்.



தண்ணீருக்குத் தவிப்பவன், இத்தகைய இடத்தைத்  தேடி அலைவான்..  தக்க தருணத்தில் தண்ணீர் தந்து காப்பாற்றுபவள் தாய்.  

இதில் சுனை,  தாய் என்ற இரு சொற்கள் உள்ளன.

தாய் என்பது தா என்று இங்கு வருகிறது.

குலம் செழிக்க ஒரு குழந்தை தருவாள் தாய்.   தா - தருதல். தா+ ஆய் >  தாய். (தாவாய் அன்று).

தம் ஆய் > தாய் என்போரும் உளர்.

மேலும் நீர் தந்து  உயிர்காக்கும் தாய் என்று பொருள்தருவது சுனிதா என்பது.

சுனைதல் என்பது குழைதல் என்றும் பொருள்தருவதால்,  அன்புடைமை என்பதும்  ஆகும்.

கல்லில்வரும் நீரும் சுனைவு என்ப

சுனைதா >  சுனிதா   திரிபு.

சுன் என்பது அடி.  சுல் > சுன் > சுனை.  சுல் என்பது ஆதியடிச்சொல்.  மூலம் என்ப.   செய்சுனை என்பது குளம் என்றும் பொருள்தரும்.  சுன்+ஐ என்பதில் ஐ வீழ்ந்து,  சுன்> சுனி> சுனிதா ஆகும்.

சுனி என்பதில் இகரம் இடைநிலை.  இ - இங்கு எனினுமாம்.

நீர் ததும்புவன சுனை(கள்)  என்னும் பரிபாடல் வரி.

வாக்கியமாக்குவதானால், சுனையாகிய இது என் தாய் என்றபடி.

சுனை இது என் தாய்.

வேறுமொழிகளில் அவர்கள் அறிந்த அடிச்சொல்கொண்டு பொருள்கூறுவர்.

சுனை என்பதில் ஐ விகுதி.   அடிச்சொல் சுல் என்பது சுற்றுதல் குறிக்கும்.  நீர் வளைந்தோடி வருவது. இது போதும் இன்று.  சுல்> சுன்> சுனை;  கல் > கன் > கனம். ஒரு சொல் ஐ விகுதி பெற்றது.  இன்னொன்று அம் பெற்றது. மொழிவரலாற்றில் தொடக்ககாலத்தில் விகுதி இல்லை அல்லது குறைவு.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.


பூசைப் பொருட்கள்

 இந்தப் பூசை அமைப்பாளர்கள்,  ஒரு கடையில் பூவாங்கியதை காட்டும் விலைச் சீட்டினைத் தான் முன் ஓர் இடுகையில் கண்டோம்.    வாங்கிய எல்லாப் பூக்களும் ஒரே சீட்டுக்குள் அடங்கிவிடுவதில்லை.  எமக்குக் கிடைத்தது ஒன்றுதான். அதை வெளியிட்டோம்.   2015 ஆண்டில் இவ்வளவு என்றால்  இன்றைய விலைப்படி எவ்வளவு ஆகுமென்பதை யூகம் செய்து அறிந்துகொள்ளவேண்டும்.  அன்று $50  தண்டப்பெற்றது என்றால் இன்று தலைக்கு $250  போட்டால்தான் "கட்டுப்படி" ஆகும் என்பதை உணர்க.  பூசை முடிந்து கோவில் செலவுகள் எல்லாம் முடிந்தபின்,  கோவில் அலுவலர்கள்  ( பூசாரி,  உதவியாளர்கள், மேளம், தாளம், நாதசுரம்  எல்லாவற்றையும் செய்தவர்கள்  முதலானோருக்கு  "தட்சிணை"  ( தக்கிணை, தக்க இணை)  வழங்கப்படும்,  இது சுமங்கலிப் பெண்காளால் ).   வேட்டி துண்டு முதலியவையும் வெற்றிலை பாக்கு முதலியவையும் இக்கொடையினுள் வரும். இதைப் பின் விளக்குவோம்.


இப்போது சுமங்கலிப் பெண்கள் வாங்கிய பொருள்களில் படங்களைக் காண்போம்.  



பூசை தொடங்குமுன்









பொருட்களுக்குக் காவலாய்ச் சிலர் இருப்பர்.  ( பாதுகாவல்)

அறிக மகிழ்க.

பெய்ப்பு  பின்பு.



ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

சுமங்கலிப் பூசைக் காட்சிகள்

 இன்று துர்க்கையம்மனுக்கு  சுமங்கலிப் பூசை செய்யப்பட்டது.  கோவிட் கட்டுப்பாட்டினால் ,  ஒரு சிறு குழுவினரே கலந்து சிறப்பிக்கும் அனுமதி பெற்றனர். இதை விரிவு படுத்த முடியவில்லை.

அப்போது அம்மன் அலங்காரம் சிறப்புப் பெற்று விளங்கியதைக் கீழ்காணும் படங்களில் கண்டு களிக்கலாம்.

 சின்ன அம்மனுக்கும் பெரிய அம்மனுக்கும் அலங்காரம் வெகு சிறப்பாக அமைந்துள்ளது காணலாம்.








இது பூசையின் தொடக்கத்தைக் காட்டுகிறது.





வியாழன், 11 ஆகஸ்ட், 2022

துர்க்கை அம்மன் அலங்காரம் செலவுகள்.

 துர்க்கையம்மன் தேவியின்பால் உண்மை  அன்பு

தூய ஆடை  ஆய்மலரால் அழகு  செய்தல்,

அர்க்கமுறும் நாடுகளை அளாவு மக்கள்

அருஞ்சிங்கை வந்துவாழ்வோர் தம்மினோடு,

பொற்கமல மனம்பொருந்திப்  பூசை செய்து

பொங்கலிட்டு அனைவருக்கும் புசிக்கச் சாதம்

கற்கவணப் பாக்கள்பல கனிந்து பாடல்

காலமெலாம் இவைசெய்தார் வனஜா அம்மை.


பூசையொன்று கோவிலிலே நடக்கும் அம்மன்

பூண்டிருக்கும் மாலைகளும் பூக்கள் தாமும்

கூசுகவின் ஒளிவீச மகிழ்வார்  அம்மை.

கொடுக்கு(ம்)தொகை மிஞ்சிடினும் கவலை கொள்ளார்!

நேசமுடன் கீழிருக்கும் சீட்டு  தன்னை

நீங்களின்று காணுங்கள் கிடைத்த ஒன்று

பாசமுள்ள அன்னையருள் பயின்ற மக்கள்

பாரினிலே அனைவரும்பல்  லாண்டு வாழ்க.





இவை  (bill etc)  பழைய பதிவுகள். இவற்றை வீசவேண்டிய நேரம் இதுவாகும்.


அரும்பொருள்:

ஆய்மலர் -   ஆய்ந்தெடுத்த, (தேர்ந்தெடுத்த)  மலர்கள்.

அர்க்கமுறும் ---  பூமியைக் குறுக்காகத் தொடும்  ( நாடுகள்).

அருஞ்சிங்கை  ---  அருமையான சிங்கப்பூர்

பொற்கமலம் -  செந்தாமரை.

சாதம் ( இங்கு) பிரசாதம்,  இறையுணா.

கற்கவண -   கற்க  வண்ண -  கற்க இனிய

வனஜா -  பூசை செய்த  அமைப்பாளர்.

கூசுகவின்  -  ஒளிமிக்க அழகு.

பாடல் -  பாடிச் சமர்ப்பித்தல்.


திங்கள், 8 ஆகஸ்ட், 2022

சிங்கப்பூருக்குத் தேசிய தின வாழ்த்து.

 தம் தேசிய தினத்தைக் கொண்டாடும் சிங்கப்பூருக்கு நம் வலைத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள் உரியனவாகுக.


சீர்பல மேவுதிகழ் சிங்கை பெற்றுயர்க

பார்புகழ் யாவினையும்; பல்வளம் முற்றியல்க!

ஓர்பிறழ் கூடலின்றி உலகில் ஆர்த்தெழுந்தே

யார்புகழ் பாடிடினும் சிங்கையே  ஏத்திடுக.


பிறந்தநாள் கொண்டாடும் பெருவளம் சிங்கைமேவ,

சிறந்திடு எந்நாளும் அறந்திகழ் பங்கினாலே!

பறந்திடு செவ்வானில்; பணிசெயல் பொங்கிவர,

கறந்திடு பாலோங்கிக்  கனிவளம் தங்கிடவே.


பல்லாண்டு வாழ்க.

ஒற்றுமையுடன் சிங்கை.

சா, ஜா - இறத்தலும் பிறத்தலும் தொடர்பு.

 இந்து மதத்தின் கொள்கைப்படி,  இறந்தவன் மீண்டும் பிறக்கிறான்,  பிறந்தவனே மீண்டும் இறக்கிறான். இதன் தன்மை அறிந்த இறைக்கொள்கை அறிஞர்  சிலர், இரண்டும் அணுக்கத் தொடர்பு உடையவை என்றனர். கண்ணால் கண்டது மட்டுமே நம்புதற்குரியது என்பவர் இவ்விரண்டிற்கும் தொடர்பு இல்லை என்று சொல்வதைத் தவிர, வேறொன்றும் கூறுதற்கில்லை.  ஏனெனில் அவருக்குக் காட்சியே மாட்சியாகிவிடுகிறது. அதனின் மிக்கதொன்றில்லை.

ஐம்புலன் கடந்த ஆய்வில் வெளிப்படுவனவாக உணரப்படுபவை பலவாகும்.அவற்றுள்  ஒன்றை விடுத்து  இன்னொன்றை நம்புதலானது, தெரிவுசெய்தலாகிவிடும்.  மனிதர்கள் அதையும் செய்கிறார்கள்.

இதிலிருந்து, சாதலும் பிறத்தலும் தொடர்பு உடையன என்ற கருத்து பலவிடங்களில் வேரூன்றி நின்றதால், பிறத்தல் என்று பொருள்படும் "ஜா" என்ற சங்கதச்சொல்,  சா  என்பதனுடன் தாயும் பிள்ளையும் போன்ற தொடர்பினது என்று உணர்க.  சா என்பதிலிருந்து ஜா அமைந்தது.  இரண்டிற்கும் இக்கொள்கை அளவில் ஆனதொரு வேற்றுமை இல்லை.

மட்டை எந்தக் குட்டையில் கிடக்கிறதோ,  அந்தக் குட்டையில் உள்ளவற்றைத் தன் தோய்வில் அந்த மட்டை கொண்டிலங்கவே வேண்டுமென்பது விதியாகும்.  மீறல் என்பது அந்த மட்டைக்குக் கிட்டும் வசதி அன்று. (இல்லை).

இறந்தவனே பிறக்கிறான்.  பிறந்தவனே இறக்கிறான்.  உண்மையாயின், துயரம் கொள்ளற்குக் காரணம் யாதுமில்லை. இரண்டும் ஒன்றுதான். "உறங்குதல் போலும் சாக்காடு, உறங்கி விழிப்பதுபோலும் பிறப்பு"  என்றார் தெய்வப்புலவரென்ற தேவர். இதற்கு இருபொருள் உள. ஒன்று மேற்பரப்பிலும் இன்னொன்று ஆழ்புதைவிலும் கிடைக்கின்றன. அறிந்து மகிழற்பாலதிதுவாம்.

ஜாதி என்ற சொல்லுக்கு  முன்னோடி சாதி  ஆகும்.  இது சார்தி >  சாதி ஆகும். சார்பினது என்று பொருள். சார்ந்தது என்று கூறுவதும் பொருத்தமே.  "நீர்வாழ் சாதி" என்ற தொல்காப்பியத் தொடர் காண்க. சாதி என்ற நீர்வாழ்வன குறிக்கும் சொல்லானது, பின்னர் அல்லாதனவாகிய மனித இனத்துக்கும் பயன்பட்டது.  அதற்கேற்ப,  சா என்ற இன்னொரு சொல்லின் இறப்புக் கருத்தினின்று பிறத்தற் கருத்து உருவெடுத்து, மொழியானது வளர்ச்சிகண்டது என்பதறிக. சார்(தல்), சாய்(தல்), சா(தல்)  என்பவற்றுள் சொற்கருத்துகள் வளர்ச்சி கண்டன என்பதை அறிந்துகொள்ளுதல் கடினமன்று.  ர் என்ற மெய்யெழுத்து மறைந்திடும் சொல்லைத் தேடி அலையவேண்டியதில்லை.  வாரான், வருவான் என்ற சொற்களில் உள்ள ர்,  ஏன்  வா என்ற வினைப்பகுதியில் இல்லை என்று தன்னைத்தான் அறிஞனொருவன் கேட்டுக்கொள்வது அறிவுடைமை ஆகும்.  பழைய இடுகைகளில் இவற்றை விளக்கியுள்ளேம். எம் பழைய இடுகைகளைப் பலர் வைத்துள்ளனர். எப்படித் தெரியுமென்றால், யாம் வேறுவிதமாக விளக்கும்போது, அவர்கள் எமக்கு எழுதி,  நீர் இது கூறினீர், விளக்குக என்பதனால் எமக்கு மிக்க மகிழ்ச்சி ஆகிவிடுகிறது. அவர்கள் காட்டும் சில இப்போது இணையத்தில் மறைந்துவிட்டமையும் உண்டு. அவர்களுக்கு நன்றி.

தொடர்ந்து கவனிக்கவும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்.

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

Flow ( by Mu. Saran. Australia)..



 


பக்திப் பொதுநலப் பூசை


[  வரும் சுமங்கலிப் பூசையில் அன்பர்கட்கு அளிக்கவும் அம்மனுக்கு அணிவிக்கவும் வாங்கி வைத்த பொருட்கள்,  இவ்வன்புப் பூசை அலுவலாளர்களால் கோவிலுக்கு எடுத்துச்செல்லப்பட்டன .

இவர்களைப் பாராட்டும்  முகமாக  இந்தக் கவிதை வெளிவருகிறது, 

படங்களுடன்]   


 தந்நலம் அற்ற சேவை ----  உள்ளம்

தாம்தம     வென்கின்ற எண்ணங்கள் இல்லா,

பொன்னலம் மக்கள்நலம்----  என்று

புவிதனில் போற்றுநர் மேவிய பூசை.


(சுமங்கலிப் பூசை என்றால் என்ன என்பதற்கு இது விடை.)


பூசையிற் பங்குகொண்டோர்  ---- தமக்குப்

பொற்கைகளால் அன்னை  அற்பளிப்புத் தர,

ஆசையைக் கொண்ட அன்பர் ----  இங்கே

ஆயத்த மாயினர் ஏயநல் அன்பினால்.


(பூசையில் கலந்துகொள்வோர்  அன்னையின் அருளை  அவள்தன் பரிசாக

வேண்டுவர் )



சுமங்கலிப் பூசைபொன்   னேபோல்  சுணங்கா

நலங்கள் பலவால் இலங்க ----  வலங்கொண்டு

நன்றே நடைபெற்று  நாடெங்கும் போற்றவே

மன்றே வணங்கிடு மாண்பு.

( இது நம் வேண்டுதல் )










தந்நலம் (  இது தன்னலம் என்பதன் பன்மை)

தாம் தம:    தாம் என்பது  தான் என்பதன் பன்மை.

தம என்பது தமது என்பதன் பன்மை.

தாம் தம என்பது தாளம்போலும் வருதல் காண்க.

மக்கள்நலம் புணர்ச்சியில் மக்கணலம் என்று வரும்.

அற்பளிப்பு  -  அன்பளிப்பு. அம்மை தரும் அன்பு,   அருள்.

அசை ( வி)  > முதல் நீண்டு ஆசை என்று பெயர்ச்சொல் ஆகும்.

விரும்பிய ஒன்றன்மேல் மனம் அசைவதுதான் ( சலனம்)  ஆசை.

தமிழென்பது உணர்க.

ஏய - இயைய, இசைந்த.

சுணங்கா  -  வருதலில் தடையில்லா(த).

இந்தவரியில் நல-, பல-, இல-, வல என்று போட்டுள்ளோம். 

சுவைக்க.

நன்றே என்னும் அடியில் மூன்று மோனைகள்.  


அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.

சில எழுத்துப்பிழைகள் சரிசெய்யப்பட்டன    6.08.22




மெய்ப்பு  பின்னர்

புதன், 3 ஆகஸ்ட், 2022

சாதாரணம் பற்றிய சிந்தனை.

 ஒரு வீட்டில் சாவு எப்போதுமே நடந்துகொண்டிருப்பதன்று.   சாவு என்பது. எப்போதாவது நடப்பதென்பதனால் அது அரிது என்று சொல்லலாம். ஆனால் உலக முழுவதையும் ஒருசேர நோக்கினால்,  சாவு நடந்துகொண்டே இருக்கிறது. மதுரையில் நாலுபேர், மானாமதுரையில் ஐந்துபேர் என்று கணக்கெடுத்தால், நியூ யார்க்கிலிருந்து பெய்ஜிங் வரை அது  நடவாத இடமில்லை. சாகாத குடும்பத்தில் கடுகு வாங்கிக்கொண்டு வா என்று புத்தர் அனுப்பியதுபோல, எல்லாக் குடும்பத்திலும் எப்போதாவது  எமன் விருந்தாளியாக வந்துவிட்டுப் போயிருப்பான். எமன் தான் எப்போதும் நம்முடன் இருப்பவனாயிற்றே. அதனாலேயே நாம் அவனை " எம்மவன். எம்மவன்" என்று பயப்பற்றுடன் குறிப்பிடுவோம். அவன் வந்துபோகிறவன் அல்லன். நம்முடன் உள்ளிருந்து என்றோ வெளிப்படுபவன். அவனை விருந்தாளி என்றது வெறும்பேச்சுக்காகவே.

சாவைத் தரும் நிலை, சா தாரணம்.  ( சா-  சாவதைத்;  தரு -  தருநிலையை,  அணம்-  அணவி நிற்றல் என்று,  இச்சொல் தமிழாவதைக் கண்டுகொள்க.ஒரு சொல்லை ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் உள்ளுறைவுகளைப் பிரித்தாலும் அதே பொருள் புலப்படும்படியாக அமைப்பது சிறப்புக்குரியது. இச்சொற்களைப் பொதுச்சொற்கள் என்று குறித்தனர் அறிஞர் சிலர். 

சாவைத் தரும் நிகழ்வுகளும் உலகிற் பல. தண்ணீர்த் தொட்டியில் விழுந்தாலும் இறக்கிறான்,  படுத்துத் தூங்கும் போதும் இறக்கிறான். சோறு விக்கிக்கொண்டும் இறக்கிறான். காரணங்கள் பற்பல.  இறப்புதான் இயல்புநிலை.

சாதாரணம் என்பது இயல்பான நிலை என்ற பொருளை அடைந்தது, " பெறுபொருள்" ஆகும்.    உறுபொருள் சாவைத் தருநிலை என்பதுதான்.  இன்னும் சில விளக்கங்களும் உள்ளன.  வந்துழிக் காண்க. சாவைக் கண்டு கலங்கிய நிலை வந்து,  உடம்பைப் பாடம்பண்ணிய நிலை மாறிப்  பின் இயல்பு என்ற நிலையையும் உணர்வையும் பெற மனிதக்குலம், காலம் எடுத்துக்கொண்டதென்பதை உணர்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின். 

 

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

கால்நடைகள் பொருள்.

 விலங்குகள் எனப்படும் உயிரினங்கட்கு,  இந்தப் பெயர் வரக் காரணம்,  இவை மனிதர்கள் என்போரிலிருந்து வேறுபட எண்ணப்பட்டமைதான்.  விலகு -  விலங்கு என்று சொல் அமைந்தது.  இவை விலக்கி எண்ணப்பட்டவை. இதைப்போல் அமைந்த இன்னொரு சொல்:

ஒழுகு  ( வினைச்சொல், ஏவல்வினை)  ,   > ஒழுங்கு.

இதுபோலவே:

விலகு  >  விலங்கு.

இனியும் ஒரு சொல் வேண்டின்:

வினைச்சொல்:   அணுகு,  அணை.  ( ~ (த்)தல் )

ஆண்மகனை வல்லந்தமாக அணுகி, அணைத்து ஆட்கொள்ளும் ஒரு பேய்.

அண் ( அணுகு, அணை)   >  அணுகு >  அணங்கு  அல்லது:

அண்> அண்+ அம் + கு >  அணங்கு.

இச்சொல்லின் அடிப்படைக் கருத்து  அடுத்துவரல் :  அண்முதல்,  அணுகுதல், அணைத்தல்.

இண் என்ற அடிச்சொல்லிலிருந்து இணங்கு வந்தமை அறிக.

அண் என்ற படர்க்கை அடிச்சொல்லும் இண் என்ற சேய்மை அடிச்சொல்லும் ஒப்பிடுக.

விலங்கு என்பது ஊர்வனவற்றையும் குறிக்கும்.

ஆனால், கால்நடை என்பது நடப்பனவற்றை மட்டுமே குறிக்கும்.   மாடு,  மனிதனை இழுத்துச் செல்லுதல் மட்டுமின்றி,  சாமான்களையும்  முதுகிலோ வண்டியிலோ கொண்டுசெல்லும் வேலையையும் செய்கிறது.  ஆனால் மாடு, அது தனக்கு இத்தகைய வசதியைக் கேட்பதில்லை, யாரும் அதற்குக் கொடுப்பதும் இல்லை. சில இடங்களில் அறுப்புக் கொட்டகைக்குக் கொண்டு செல்லும்போது மட்டும் அது  தொலைவாக இருந்தால் பளுவுந்தில் வைத்துக் கொண்டுபோவார்கள்.  விரைவில் அதன் உயிரை எடுப்பதற்குதான்.  மனிதனுக்குச் செல்வத்தை வாரி வழங்கினாலும் மாட்டுக்கு மற்றும் ஆட்டுக்கு வாகன வசதியில்லை.  ஆகவே கால்நடை என்பது சிற்றூரார் அதற்கிட்ட சிந்தனை பெயர் என்று சொல்லவேண்டும்

கால் +  நட + ஐ >  கால்நடை.

மனிதனோடு ஒப்பிடுகையில் தன் வாழ்நாள்  முழும்மைக்கும் நடைப்பயணமே செய்யும்  --- இறுதியில் தன் உயிரையும் ஈந்துவிடும் விலங்குக்கு அது பெயராக வருவதால் அஃது ஆகுபெயர்.  வினைப்பெயர் வடிவிலிருந்து ஓர் உயிருள்ள பொருளைக் குறித்தது காண்க.

கால்நடை என்பது தமிழ்,  ஒரு பேச்சுவழக்குச் சொல். ஆடு, மாடுகளைக் குறிக்கும். புலி, சிங்கம், கரடி முதலியவையும் காலால் நடப்பன , (ஓடுவன) என்ற போதும்,  இச்சொல் விரித்துப் பொருள்கொள்ளப்படாமையால், இதைக் காரண இடுகுறிப் பெயர் என்ப. நாற்காலி என்பது நாலுகால் உள்ள குதிரை யானைகளைக் குறித்தல் இன்மை காண்க.

இவ்வாறு கண்டுகொள்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின்னர்.






`


திங்கள், 1 ஆகஸ்ட், 2022

யாதவர்கள் மற்றும் முடியாதவர்கள்.

 யாதவர் என்னும் சொல், முல்லை நில மக்களைக் குறிக்கும். வேறு தொழில்கள் எவற்றையும் மேவாத நிலையில்,  பெரும்பாலும் கால்நடைகளை இவர்கள் வளர்த்து,  அவற்றின் பால் தயிர் முதலியவற்றை விற்று  ஓகோவென்று வாழ்ந்தனர்.  இவர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த நிலையில்,  மாடு என்ற சொல்லுக்கே  செல்வம் என்ற பொருள் ஏற்படலாயிற்று.

மேலே சொல்லப்பட்டவை தமிழ் ஆர்வலர்கள் யாவரும் நன்கறிந்தவையே.

யாம் சொல்லவிழைந்தது பின்வரும் இரட்டுறலே ஆகும்:

முடியாதவர்  -  இது எதுவும் செய்ய இயலாமல் ஒருவேளை உடற்குறையும் உள்ளவர்  என்னும் பொருள்.

முடி+ யாதவர்:  அதாவது மன்னனாய் முடிசூட்டிக்கொண்டவர்(கள்).  மணிமுடி தரித்தவர்கள்.  ஆனால் யாதவ குலத்தினர் என்பதுதான்.

முடியுடைமை என்பது கண்ணபிரானால் மெய்ப்பிக்கப்பட்டது.  மாடு என்னும் விலங்கு, என்றும் மனிதருடன் சேர்ந்திருந்து,  பால் முதலியன மனிதர்க்குத் தந்து, அவர்தம் வாழ்வினை மேம்படுத்தியது. அதன் வாழ்விடமும் மனிதர்தம் வீட்டின் அருகிலே இருக்கும். மடுத்தல் - சேர்ந்திருத்தல். மடு என்ற வினைச்சொல், முதனிலை "ம" நீண்டு, மாடு என்று தொழிற்பெயராகும்.  அதாவது ஒரு வினைச்சொல்லிலிருந்து பிறந்த பெயர்ச்சொல்.  இஃது படு என்ற வினையினின்று பாடு என்ற வினைப்பெயர் அமைந்தது போலாகும். மா என்பது பெரிது என்ற பொருளையும்,  அம்மா என்ற சொல்லின் இறுதியையும் குறிக்கும்.  அதன் ஒலியும் அம்மா, மா என்றே வருகிறது.  இது பல் பொருத்தம் உடையது ஆகும்.  மா என்பது மனிதனிலிருந்து விலகி நிற்றலை உடையதாயினும்  மடு> மாடு எனச் சேர்ந்திருத்தலையும் உடையது. செல்வமும் ஆகும் என்பது உணர்க.  தான் புல்லை மட்டும் உண்டாலும் மனிதனுக்குச் செல்வமனைத்தும் தந்தது மாடு.  இஃது அளப்பரிய ஈகையாகும்

யாதவர் பற்றி மேலும் அறிய:  https://sivamaalaa.blogspot.com/2019/11/blog-post_23.html


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.ச்

செவ்வாய் சீர்தரும்.....

 தீஞ்சுவை மேவும் திங்கட் கிழமை 

தென்றலினிமை தந்திட வந்தபின்,

சீர்பல மேவும் செவ்வாய்க் கிழமை

பார்புகழ்ந்   திடவே பக்கலில் வந்தது,

வருக வருகவே வண்புகழ்ச் செவ்வாய்!

பெருகி ஓடுக பேரியற்  றமிழே!

சொல்லா விரைவுடன் எல்லா நலமும்

உள்ளார் குடும்பத்தில் உறைந்து மகிழ்தர

யாவரும் சிறந்திடக் காவலம் மிளிர்ந்திடும்.

மேவரும் கனிச்சுவை நாவலர் இசைக்க.

வாழ்க அன்பர்கள் வாழ்க வையமே.


பக்கல் -  பக்கத்தில்

வண்புகழ் -  வளமான புகழ், பெரும் புகழ்.

பேரியற்றமிழ்  -- பெருமைக்குரிய இயற்றமிழ்

சொல்லா விரைவு  -- உணர்ந்து சொல்லுமுன் வரும் விரைவு.

மகிழ்தர -  மகிழ்ச்சி தர

கா வலம் -  காக்கும் வலிமை

மேவரும் -   வருவதற்கு அரிய.  எப்போதும் கிடைக்காத

நாவலர் இசைக்க -  பெரும்புலவர்கள் பாட.