முன்னர் நம் வலைத்தளத்தில் "கன்வோய்" என்ற ஆங்கிலச் சொல்லுக்கேற்ற தமிழ் மொழிபெயர்ப்பு பற்றிப் பேசப்பட்டது.
கன்வோய் என்பதில் பாதுகாப்பு பற்றிய கருத்து வழக்கினால் அல்லது பயன்பாட்டினால் வருகிறது. கன் (con ) - ஒன்றாக. வோய் என்பது பயணிப்பது என்ற பொருளதாம். இந்த அடிச்சொல், வோயேஜ் என்ற ஆங்கிலச் சொல்லின் தொடர்பை உள்ளடக்கிய சொல்.
கன்வோய் என்ற இற்றைநாள் வரையறவு ( definition), பாதுகாப்பையும் உட்கருத்தாகக் கொண்டது.
ஆகவே இதன் கருத்துகள் இவையாம்:
பாதுகாப்பு.
ஊர்தல் ( வண்டி அல்லது வாகனம் செல்லுதல்).
அணியாகச் செல்லுதல்.
இப்போது இதை மொழிபெயர்த்தால்:
"காவூர்தியணி" என்றாகும்.
இதுவே சரியானதாகும்.
ஊர்தியணி என்றுசுருக்கியும் சொல்லலாம்.
கா - காவல், பாதுகாப்பு.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக