அஸ்திரம் என்ற சொல்லை முன்னமே விளக்கியுள்ளோம். அது இவண் உள்ளது. ( இவண் - இங்கு). ஆதலால் எழுதவில்லை. ஆனால் இச்சொல் அண்மைச் செய்திகளில் இடம்பெற்றிருந்தது. தொடர்பினதான இடுகையை இங்குக் காண்க: https://sivamaalaa.blogspot.com/2020/08/blog-post_20.html
ஆகவே பிராந்தியம் என்ற சொல்லை இன்று தெரிந்துகொள்வோம். இதையும் சுருக்கமாகச் சொல்வோம்.
[ஒரு அரசன் என்று சொன்னால் அது இலக்கணம் பிழைத்த செயல் என்பர். பிழைத்தலாவது பிழை ஆகுதல். அரசன் ஒருவன் என்றுதான் சொல்லவேண்டும் என்று வித்துவர் சொல்வர். அது உண்மைதான் என்றாலும் இந்த மிக்கப் பழமையான இலக்கணத்தைப் பின்பற்றவில்லை. இப்புலவர்கள் ஒரு என்பது அஃறிணை வடிவம், அரசன் என்ற உயர்திணை வடிவினோடு இணக்குறாது என்பர். ( There is no accord ). இத்துணை ஆழ்தமிழ் இதுகாலை வழக்கில் குன்றிவிட்டது. நிற்க.]
அரசன் ஒருவன் ஒரு நாட்டின் பெரிய மையப்பகுதியை ஆண்டுகொண்டிருக்கும் போது அவன்றன் ஆளுகைக்கு உட்படாமல் எல்லையை ஒட்டியபடி இருக்கும் நிலப்பகுதிகள் சிவற்றை ஆளுநன் ஒருவனிடம் விட்டு ஆட்சி செய்துகொண்டிருப்பான். அப்பகுதியிலிருந்து பண்டங்களும் பணமும் வருசூல் செய்யப்பட்டு அவனுக்கு வந்துகொண்டிருக்கும். அந்த ஆளுநன் கப்பம் கட்டுகிறாரன் என்றும் சொல்லலாம். கப்புவது தொகை என்றால் அது "விழுங்குதொகை " என்று சுருக்கமாச் சொல்லாம். வாயில்வைத்து மென்று தொண்டைக்குள் கடத்துவதும் கப்புதல். "அவல் பொரி கப்பிய கரிமுகன் அடிபேணி" என்பது காண்க. குறுநில ஆளுநனிடம் கடத்தித் தன்பெட்டிக்குள் வைப்பதும் கப்புவதுதான். ( "கடப்பு" ச் செய்வதுதான்). பொருள் தொடர்புகளையும் தமிழையும் அறிக.) கடப்பு > கப்புதல் ( வினையாகும் சொல்) > கப்பம். கவர்தல் > கவர்ப்பு > ( இடைக்குறைந்து) : கப்பு> (வினையாக்கம்) > கப்புதல் எனினுமாம். இச்சொல் இந்தோஐரோப்பிய மொழிக்குள் புகுந்துள்ளது தெரிகிறது.
இப்படிக் கப்பமோ திறையோ வரியோ கட்டியோ கட்டாமலே அடுத்துள்ள பகுதி "பிராந்தியம்".
பிற > பிர. பிறத்தல் என்பது தாயிலிருந்து பிரிதல்தான். இது பிரி > பிரு என்றும் திரிவது, ( பிரிந்து நிற்கும் முற்றாத கிழங்கு: பிருகு).
அண் : அடுத்து அமைந்துள்ள. ஆம் என்று வேறுபட்டும் விளக்கலாம்.
தி + அம் - இவை விகுதிகள்.
1. பிற ஆம் தி அம்; 2 பிற அண் தி அம்.
ஆகப் பிராந்தியம் ஆயிற்று. அண் தி - அண்டி என்ற வர வேண்டியதில்லை.
இதன்மூலம் பிராந்தியம் என்பதன் பிறப்புணர்க.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக