வெள்ளி, 15 ஜூலை, 2022

ஏகாரத்துக்கு இகரம் வருதல். சொல் வித்தியாசம்.

 சில சொற்களில் திரியும்போது நெடிலுக்குக் குறிலாய் வந்து திரியும்.  எ-டு:

பூ  >   பு  :     பூ(வு)  >  புஷ்பம்.

பூத்தல் என்பது வினைச்சொல். திரிதலில் பலவேறு விதம் என்றாலும்,  வினையிலிருந்து திரிதலையே சிறப்பாய்க் கொள்வர்.  எ-டு: 

தோண்டுதல்:  தோண்டு> தொண்டை.  ( விகுதி:  ஐ).

ஐ விகுதி வந்த சொற்கள் பிற:  கல் > கலை;  கொல் > கொலை.

தோண்டு என்ற வினை.  தொண்டை என்றாவதற்கு நெடில் முதல் குறில் முதலானது.

பூ என்பது பூப்பு என்றாகி,  அம் விகுதி பெற்று பூப்பம் என்று  ஆகி  புப்பம் என்று  குறுகி,  புஷ்பம் என்று தமிழிலில் இல்லாத ஒலியை அணிந்துகொண்டது.  வல்லொலி தவிர்த்து மெலிந்தது. இவ்வாறாவது தமிழின மொழிகளில் பெருவரவு. தமிழிலும் உண்டு:  உயர் >  ( உயர்த்தி )>  ( உசத்தி)  >  ஒஸ்தி.  உகரம் ஒகரமாதல்.

சில சொற்கள்,  திரிந்தவுடன் இடைவடிவங்கள் மறையும்.  உயர்த்தி என்ற சொல் மறைந்தது. புப்பம் மறைந்தது.     உசத்தி என்பது ஒசத்தி என்று பேச்சில் வருகிறது.  வந்தபின் ஒஸ்தி தோன்றுகிறது.

வேறு என்பது வினையன்று.  வினையல்லாத ஏனையவும்  விகுதிபெற்று இன்னொரு சொல்லாகும்.

வேறு + மை >  வேற்றுமை.

வேறு  >  வேற்று > (விற்று) > (வித்து)

இடைவடிவங்கள் முன்னரே வேறு பொருளுடன் சொற்களாக மொழியில் பயன்பாட்டில் இருந்தால், அவ்வடிவங்கள் மேலும் திரிந்து இறுதிபெறும். இன்னோசை இல்லாதவிடத்து மேலும் திரிந்து செவிக்கினிமை பெற்றுச் சொல்லாகும்.

வித்து>  வித்தி+ ஆ + அம் >   வித்தியாயம்.>  வித்தியாசம்.  

ய - ச என்பன மொழிகடந்த ஆக்கமுடையன. Non language specific.

ஆ -  ஆகி என்றும்

அம் -  அமைவது என்றும்

பொருள்கூற வசதி இங்குள்ளது.  சில சொற்களில் இடைநிலையும் விகுதியும் பொருளற்ற வெற்றாக இருக்கலாம்.

இந்த உதாரணத்தில் ஏகாரத் தலை இகரமாயது காண்க.

க, க, க என்பது ஓர் ஒலி.

இந்த ஒலி காக்கை செய்யும்.

கொ கொ கொ என்பது ஒலி. கோழி செய்யும்.

க+ து >  கத்து (து வினையாக்க விகுதி ) >  கத்துதல்  ( தல் தொழிற்பெயர் விகுதி).

கத்து என்பதில்  த்  புணர்வொலி.

கத் என்பதை அடியாக எடுத்துக்கொண்டால் இன்னொரு வடிவம் கைவருகின்றது.

கத் > கித் > கீத்   (கீதம்).  அம் விகுதி இல்லாமல்.  இது அயல் பாணியாய் உள்ளது.

கீ+ து + அம் > கீதம்..

கீத் + ஆ > கீதா,    ( ஆ - ஆதல் வினை).

ஒலி வெளிவர உதவி ஒலியும் ஆகும்.

ஒலியே முதன்மை. அதுவே நாத பிரம்மம்.  ஐம்புலன்களில் ஒன்று.

காக்கை கத்துதல் ஐந்து மூலப் புலன்களில் ஒன்றன் வெளிப்பாடு.

புழுக்கள் ஒலி செய்வன அல்ல;  அல்லது அவை செய்யும் ஒலியை உணர

நம் செவிக்கு ஆற்றல் இல்லை. 

பகவன் ஒலி மூலம் நமக்கு உணர்த்தியவை கீதை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.




கருத்துகள் இல்லை: