திங்கள், 11 ஜூலை, 2022

இதர என்ற....

 "இதர  மாதருடன் நீ களிப்பதோ " என்று ஒரு கண்ணன் பாட்டிலே வரும்.

இதர என்பதும் தமிழ்தான்.

இதர என்றால் மற்ற என்பது.

இது அற என்பது இதனை  அறுத்துவிட, பிற அனைத்தையும் குறிக்கும்.

இது அற >  இதற > இதர.

இதில் றகரம் ரகரமாக மாறியதே திரிபு.

சொல்லாக்கத்தில் இது மாறும்.   அறு+ அம் + பம் >  அரம்பம்,  தலையிழந்து ரம்பம்.  இதனைத் தலை நீக்கி எழுதியோரும் உளர்.  றம்பம் என்று.  பின்னர் ரம்பம் ஆனது.  

ரகரம், றகரம் வேறுபாடின்றி வழங்கிய பல சொற்களைப் பாவாணர் பட்டியலிட்டுள்ளார்.அவர் நூலில் காண்க.

வேறு இலக்கண நூல்களிலும் தேடிப் பார்க்கலாம்.

இனி, இதுதவிர என்பது.

இ(து)த(வி)ர  > இதர என்றுமாகும்..   இருவேறு எழுத்துக்கள் குறைந்த ஒரு சொற்றொடரிலிருந்து திரிந்தமைந்த சொல் -  இதர.

இதுதவிர என்று "தத" என்று நாவில்தடை விளையும்படியாக ஏன் சொல்லி இடருற வேண்டும் என்று எளிமைப்படுத்தி ( simplified ) விட்டனர் எனினும்,  திரிபு என்பது ஓடிப்போய் விடாது.  நல்லபடியாகவே பயனுறும். வாழ்க

றகரம் என்பது இரு ரகரங்களின் கூட்டு எழுத்து.  ர - ரர > ற.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

கருத்துகள் இல்லை: