தமிழில் ஆடுதல் என்ற சொல்லுக்குப் பல பொருளுண்டு. மனம்கூட ஆடுவதாகச் சொல்கிறார்கள். ஏதேனும் சிறப்புக்குரியதைக் காணின் மனம் ஆடுவதுண்டாம். "ஆடாத மனமும் உண்டோ" என்ற பாட்டில், காண்பதற்குரிய சிறப்பினைக் கண்டுவிடின், மனம் ஆடிவிடும் என்று சொல்வதாகக் கொள்ளவேண்டும். மேலும் கீழும் குதிப்பது மட்டுமின்றி, ஆடுதல் என்பது " இயங்குதல்" என்ற்பால பொருளும் உடைத்தாய் உள்ளதென்பது சொல்லாமலே விளங்கும். ."ஆடுகிற கோயிலுக்கு விளக்குப் பிடிக்கிறான்" என்ற பண்டைச் சொல்லாட்சியிலிருந்து, ஆடுதல் என்றால், பூசனையும் அர்ச்சனையும் உற்சவமும் ஆகியன நடைபெற்று, இயக்கத்திலிருக்கும் கோயில் என்று பொருளாதலைக் காணலாம்.
என்ன ஆட்டம் ஆடினான் என்ற வாக்கியத்தில் ஆட்டம் என்பதை நடனம் என்று மொழிஎயர்த்தால் பொருந்தவில்லை.
ஆடுதல், இது ஆலுதல் என்றும் திரிதல் உடையது.
ஆடி - இயக்கத்துக்குரிய மாதம். எனவே, கோயிற் பூசை முதலியவை மனித இயக்கத்தின் வெளிப்பாடுகளே.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக