புதன், 26 ஆகஸ்ட், 2020

அசித்தல் - அயில்தல் ( உண்ணுதல் ) தொடர்பு,

 பாயசம் என்'ற சொல்லில் அசம் என்ற இறுதி முன்

இடுகையில் விளக்கம் கண்டது. அசம் அசித்தல்

என்ற வினையினின்'று விளைந்ததென்றும் 

அறிவுறுத்தப்பெற்றது.


இன்று அசித்தல் என்ற சொல் தோன்றிய விதம்

காண்போம்.


அயில்தல் என்பது உண்ணுதல் என்று பொருள்தரும்

பண்டைத் தமிழ்ச் சொல்  அயில்தல் என்பது ஒரு

சுட்டடி வினைச்சொல்.


அயில்தல் என்பதில் அயில் அயி என்று 

கடைக்குறைந்தது.  கடைக்குறைதல் என்றால்

சொல்லின் கடைசி எழுத்து - கெடுதல் அல்லது

விழுதல்.    அவ்வாறு குறைந்து  அயி என்று

நின்ற இப்பழஞ் சொல்,   அசி என்று திரிபுற்று

தல் என்ற் தொழிற்பெயர் விகுதி ஏற்று,  

அசித்தல் ஆயிற்று. ஒரு வினைச்சொல், 

கடைக்குறைந்து, திரிந்து பின் தல் விகுதி

ஏற்று மறுபடியும் வினையாதலுக்கு  நீங்கள்

ஓர் உதாரணம் தேடுங்கள்.  ஒருமாதம்

எடுத்துக்கொள்ளுங்கள்.


கிட்டியவுடன் பின்னூட்டம் இடவும்.


அயில்தல் என்ற வினைக்கு வாக்கியங்கள்:

பால் அயிலுற்ற பின்னர் அவன் நன்கு 

உறங்கினான்.ஒரு பருக்கை பாக்கியின்றி

 சோறு முமுதும்  அயின்றுவிட்டான்.


அயில் >  அயி  ( இது கடைக்குறை).

அயி > அசி   ( இது ய- ச வகைத் திரிபு)

இன்னோர் எடுத்துக்காட்டு:  வாயில் > வாசல்.

யகரம் சகரம் ஆனதுடன், ஆங்கு இகரம் அகரம்

ஆகவும் ஆயிற்று.  யி - ச இது இருமடித் திரிபு.


அயி என்பதுடன் அம் சேர, அது  அசிம் என்று

வருதல் தமிழியல்பு அன்று.  இகரம் கெட்டே அம்

ஏறுமென்பதறிக.


அயிலுதல் -  அயில் என்ற வினை அமைந்த

விதத்தை வேறொரு  சமையத்தில் காண்போம்.


மெய்ப்பு பின்




கருத்துகள் இல்லை: