புதன், 12 ஆகஸ்ட், 2020

கேடகம் - சேடகம் (கேடயம்)

  இங்கு நாம் வெளியிட்டுள்ள இடுகைகள்  பெரும்பாலும்

ஒவ்வொன்றாகச் சிந்தித்து எழுதப்பட்டவை. இது

சிந்தித்தல் என்ற சொல்லுக்கு இங்கு கூறியுள்ள 

பொருளுக்குப் பொருத்தமானவை. ஒவ்வோர் இடுகையும்

சிறிதாய் இருப்பதுபோலவே சிந்தனையும் சிறிது சிறிதாய்

வெளிப்பட்டவைதாம். இவற்றை ஒரு நூலாய் 

வெளியிடுவதாயின் முறையாக வரிசைப்படுத்தி 

இயைத்துத் தொகுத்து வெளியிடுதல் வேண்டும். இது

நிற்க, இப்போது கேடயம் என்ற சொல்லைப் பார்ப்போம்.


இச்சொல் ஓர் இடுகையில் விளக்கப்பட்டது. அதனையும்

வாசித்துக் கொள்ளுங்கள்: சொடுக்குக:

https://sivamaalaa.blogspot.com/2018/04/blog-post_54.html


மேற்கண்ட இடுகைக்கு முன்னும் இது விளக்கப்பட்ட

துண்டு.  அஃது இவ்வலைப்பூவில் இப்போது இல்லை.


கேடயம், கேடகம் என்ற வடிவங்களில் இருக்கும் 

இச்சொல்,  உள்வரும்  அம்பினைக் கெடுத்தல் 

அல்லது தடுத்தல் என்ற பொருள் உள்ளதுதான்.

கோட்டை மதில்களின்மேல் சுற்றுச் சுவருடன்

அமைக்கப்பட்ட "கூடுகளுக்குள்" வீரர்கள் 

இருந்துகொள்வதால், அம்புகளிலிருந்து இவர்கள்

தங்களைக் காப்பற்றிக்கொள்வர். அகம்நோக்கி

வரும் அம்புகள் சுவரினால் கெடுக்கப்படும் , 

அதாவது  தடுப்புறும்.  அகம்வருவது கெடுக்கப்

பட்டது. இது ஒரு முறைமாற்றுப் புனைவு. இவ்வாறு

அமைந்த சொற்கள் பல உள்ளன. எடுத்துக்காட்டுக்கு

ஒன்று:   வாயில் என்ற சொல். இல்லத்தின் வாய்

என்பதைத்தான் வாயில் > வாசல் என்று புனைந்துள்

ளனர்.  அதாவது முறைமாற்றியுள்ளனர்.


இனிக் கேடகம் என்ற கேடயம், வேறு வடிவங்களையும்

அடைதல் உண்டு. ககரம் சகரமாகவும் (ககர வருக்கம்

ஏற்புடைய சகர வருக்கமாகவும் )  திரியுமாதலால்,

இவ்விதிக்கொப்ப இது சேடகம் என்றும் திரியும்.

இது கேதாரகெளளம்  என்பதில் சேதாரம் எனற்பாலது

கேதாரம்* என்று திரிந்தாற்போலுமே ஆகும். மேலும்

சேரலம் என்பது கேரளம் என்று இயல்வதும் காண்க.


. பழைய இடுகைகள் சில இவற்றை விளக்கியுள்ளன.அறிக


மெய்ப்பு: பின்னர்.



கருத்துகள் இல்லை: