சிலருக்கு உடலில் ஒரு "கட்டு" ( கட்டுதல், கட்டப்பட்டதுபோன்ற உடல் ) இருப்பதாகப் பேச்சில் வழங்குகிறது. கட்டான அளவு, கட்டான உருவம் என்று சொல்வதுண்டு.
பிறந்து ஓர் அகவை கடந்த குழந்தைகளில் சில உடல் "கொழகொழ" என்று சற்றுப் பருமனாக இருப்பதுமுண்டு. சில இன்னும் மென்மை மாறாவிடினும் இந்தக் கொழகொழப்பு இல்லாமல் அல்லது குறைவாக இருப்பதுபோல் காணப்படுதலும் உண்டு. இதுபோலும் குழந்தைகட்குக் "கட்டு" இருப்பதாகக் கூறுவதுண்டு.
சிறிதாகவும் கட்டாகவும் இருக்கும் குழந்தையைச் சிக்கட்டான் குழந்தை என்பர்.
" ஒரு சிக்கட்டான் குழந்தையுடன் அவள் பூசைக்கு வந்திருந்தாள்" என்று கூறும்போது இந்தச் சொல் நினைவு கூர முன்னிற்கின்றது. இச்சொல் எப்படி வந்தது என்று பார்ப்போம்.
சிறு + கட்டு + ஆன்
= சிறுகட்டான்
= சிக்கட்டான்.
இந்தத் திரிபில் று எனற ஓர் எழுத்து மட்டும் கெட்டது அல்லது மறைந்தது.
சிறு > சி > சி+ கட்டான் = சிக்கட்டான் என்றாகும். இலக்கணத்தில் இது இடைக்குறை எனப்படும்.
சிறு என்பதன் மூலம் சில் என்பதே.
சில் > சிறு.
ஆகையால் சிறு என்பதிலிருந்து புறப்படாமல் சில் என்பதிலிருந்து தொடங்கலாம்.
சில் > சி. ( இது கடைக்குறை ).
சி + கட்டு + ஆன் = சிக்கட்டான்
என்று விளக்கினும் இதிலோர் கருதத் தக்க வேற்றுமை இல்லை என்பதறிக.
மீள்பார்வை பின்னர் நிகழும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக