நிற்சையம் என்ற சொல் நினைவுக்கு வருகிறது. வேறு சில இங்கு விளக்கவேண்டுமென்று எண்ணும்போது ஓடிவந்த இச்சொல்லை அலசிவிட்டு அடுத்தமுறை எண்ணியவற்றுக்குச் செல்வோம்.
இதுபற்றிய ஓரிடுகை ஈண்டு இருந்ததாகவே நினைவு. அதைக் காண்டற்கியலவில்லை.
உலகில் சில நிற்பவை; சில மாறி மறைபவை. நிற்சையம் என்பது மாறாதது ஆகும். அதையே உறுதியானது என்று சொல்கிறோம்.
நில் + சை > நிற்சை; இதில் சை என்பது ஒரு தொழிற்பெயர் விகுதி. இதுபோலும் சை விகுதி பெற்ற இன்னொரு சொல் நேர்ச்சை என்பதாகும். பச்சை என்பதில் சை இறுதி இருந்தாலும் இதில் வரும் சை என்பது சை விகுதியன்று. பசு+ ஐ = பச்சை என்பதே. இங்கு சை என்பது முன் உள்ள சு என்பதனுடன் ஐ விகுதி கலந்து வருவதாம். சகர இரட்டிப்பு கற்க.
இனி நிற்சை என்பதில் அம் இறுதியைக் கொண்டு இணைக்க, அது நிற்சையம் ஆகிறது. இதிலிருந்து திரிந்த நிச்சயம் என்ற வடிவமே இன்று ள்ளது. நிற்சையம் என்ற சரியான வடிவம் மீட்டுருவாக்கத்திற் கிட்டியதே ஆகும்.
நிற்சையம் > நிற்சயம் ( இது ஐகாரக் குறுக்கம்).
நிற்சயம் > நிச்சயம். ( இது பேச்சுவடிவச் சொல் ).
இது தமிழன்றிப் பிறிதில்லை. ஆனால் அயலில் சென்று வழங்குதல் உடையது. இந்தோ ஐரோப்பியச் சொல் அன்று,
நில் என்பதும் விகுதிகளும் தமிழ். அயல் வழக்கு ஐயமூட்டக்கூடும். மலைவு தீர்தல் கடனே.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக