இன்று கொப்பரை என்ற சொல்லைப் பார்ப்போம்.
நாம் இங்கு கொப்பரை என்று நோக்கப்போவது காய்ந்த தேங்காயின் உள்ளீடு ஆகும்.
தேங்காயின் மட்டை நார் முதலிய நீக்கப்பட்டால் அதன் கொழுவிய பகுதி உள்ளிருப்பதே.
அக்கொழுவிய பகுதி காய்ந்து இறுகியே கொப்பரை ஆகிறது.
கொழுவிய மெல்லீடு காய்ந்து சுருங்கிவிடும். கெட்டியாகும்.
கொழுப்பு+ அரு(வு) + ஐ.
அருவுதல் : உருவில் அல்லது அளவில் குறைதல்.
கொழுப்பரை > கொப்பரை என்பது இடைக்குறை.
இது விழுபுலம் என்பது விபுலம் என்றானது போல்வது ஆகும்.
கொப்பரை என்பது கொதி கொள்கலத்திற்கும் பெயராய் உள்ளது. ஆயின் இது கொதிப்பரை ( கொதித்து அருவுதல் கொள்வது ) என்பதன் இடைக்குறை ஆகும்.
இரு சொல்லமைப்புகள் ஓர் முடிபு கொள்ளுதலின் காரணம், அவற்றை வேறுபடுத்திய எழுத்துகள் இடைக்குறை ஆனமையே ஆகும். ஒன்றில் தி என்பதும் இன்னொன்றில் ழு என்பதும் மறைந்தன.
கொழுப்பு அருவுதலும் கொதிப்பினால் அருவுதலும் என இவ்விரண்டில் கொதித்து அருவுதல் கொள்கலத்தில் இடுபொருளே. பின்னது கொள்கலத்தைக் குறித்தல் ஆகுபெயராகும்.
தமிழில் இடைக்குறைச் சொற்கள் பல. அவற்றுள் சில ஈண்டு விளக்கப்பட்டன
மீள்பார்வை பின்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக