இதர என்ற
சொல்லை இன்று கண்டு மகிழ்வோம்.
பதறுமனத்துடன்
யானிருக்கவோ
இதர மாதருடன்
நீ களிக்கவோ
என்ற
வாக்கியத்தில் இதர என்ற சொல்
வந்திருப்பதைக் காணலாம்.
இதர என்பது
இங்கு மற்ற என்னும் பொருளில்
வந்திருப்பதைக் காணலாம்.
இதர என்ற
சொல்லின் அமைப்பு:
இது+
அற = இதர.
இதில்
கவனத்தில் கொள்ள வேண்டியவை:
இங்கு
தகரம் இரட்டிக்கவில்லை.
அதாவது: இதர
என்பது இத்தர என்று வரவில்லை.
இது + உடன்
என்று இத்துடன் என்று
இரட்டித்ததுபோல் இரட்டிக்கவில்லை.
இச்சொல்லில்
வந்த றகரம் ரகரமாக மாறியுள்ளது.
பல சொற்களில் இவ்வாறு
மாற்றம் நிகழ்ந்திருப்பதைக்
காணலாம். எடுத்துக்காட்டு:
தம் +
திறம் = தந்திரம்.
இதில் திறம் என்பது
திரமானது.
இங்கு
திறம் என்பது தனிச்சொல்லாக
இல்லாமல் ஒரு சொல்லின் விகுதியாக
வருங்கால் அல்லது ஒரு
கூட்டுச்சொல்லின் இறுதியாகவருங்கால்
இவ்வாறு நிகழ்தல் காணலாம்.
இதர என்பது ஒரு
கூட்டுச்சொல்லின் அல்லது
சொற்றொடரின் திரிபு.
மன் +
திறம் = மந்திரம்.
(மன்னுதல்: நிலைபெறுதல்
நன்மைகளை
நிலைபெறுவித்தல்
நோக்கமாகச் சொல்லப்படுவது
மன்னும் திறத்ததான மந்திரம்.
)
இதர என்றால்
இது அற, எனில் மற்ற
என்பதாம். அறிந்து
மகிழ்க.
தட்டச்சுப்
பிழைத் திருத்தம் பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக