வியாழன், 19 செப்டம்பர், 2019

சூரியகாந்திப் பூ.

சூரியன்  ஒளிவீசும் பக்கமாகத் திரும்பிக்கொள்ளும் பூவே சூரிய காந்திப்பூ. இதற்குப் பெயர் அமைந்த விதம்:

இப்பெயரில் சூரியன் என்பதற்கு விளக்கம் தேவையில்லை. வேண்டுவோர் வாசிக்க:

https://sivamaalaa.blogspot.com/2018/07/blog-post_29.html


காந்தி  எனற்பாலது  காண்+தி என்பதன்  திரிபு.

சூரியனைக் காணத் திரும்பும் மலர்.

காண்தி   >  காந்தி.

இவ்வாறு  வருவது  காண்டி என வருதல் வழக்கம் எனினும்,  இது மெலிக்கும்வழி மெலித்தல் என்னும் கவிதை  நெறியைப் பின்பற்றிக் காந்தி என்றானது.  காண்டி என்பது வல்லெழுத்துப் பயில்கிறது.

காந்துதல் என்பது  சூடேற்றுதல்.  காந்து >  காந்தி  எனினுமாகும்.






புதன், 18 செப்டம்பர், 2019

அல்லியும் தாமரையும்

இந்த இரு மலர்கள் பற்றிச் சிந்திப்போம்.

தாமரை என்பது  தாழ  (கீழே)  உள்ளதை மருவி நிற்கும் மலர் என்று பொருள்படும்.

தாழ இருப்பது தண்ணீர்.

இதன் அமைப்பு:

தாழ் + மரு + ஐ   >  தா + மரு + ஐ =   தாமரை.

இதுபோல் ழகர ஒற்று இழந்த வேறு சில:

தாவணி   (  தா +  அணி )     தாழ் > தா.   கடைக்குறை.
தாக்கோல்.  1


இனி  அல்லி என்பது தண்ணீரை விட்டுவிட்ட சொல்.  அல் என்பது இரவு.
இரவில் மலர்வது  என்ற பொருளில் "அல்லி"  எனப்பட்டது.2



அடிக்குறிப்புகள்:


1.  நாதாங்கி.  -  கதவும் கதவுச் சட்டமும்  ஆகிய முழு அமைப்பில் ஒன்றிலிருந்து  நாக்கைப் போல்  ஓரத்தில் நீட்டப்பெற்று மற்றொன்றில் சென்று பற்றி அமர்வது. நாவும் அதன் தாங்கியும்.

2 இரவி என்ற சொல்லும் இரவு  இருள் என்ற கருத்துக்களை  அடிப்படையாகக் கொண்டு எழுந்த சொல்லே.  இர் =  இருள்.  இரவு. என்பவற்றின் அடிச்சொல்.  அவித்தலாவது  விலக்குதல்.  இது  சூரியனைக் குறித்தது.

செவ்வாய், 17 செப்டம்பர், 2019

வார்த்தை

எந்தச் சொல்லாய்வாளனும் இந்தச் சொல் இந்த அடிச்சொல்லிலிருந்துதான் வந்தது எனலாம்.  இதற்கு மாறுபாடாகப் பிற நிபுணர்களால் வெளியிடப் படும் கருத்துகளையும் சற்றே கவனித்துக்கொள்ள வேண்டும்.   அதுவே முறை. யாம் பிறவட்டுக் கருத்துகளை  விளக்குவதில்லை எனிலும் அவற்றையும் அறிந்த பின்னரே ஈண்டு வரைகிறோம்.

நிபுணர் -   ( நிற்பு + உணர் ).   >> நிற்புணர் >   நிபுணர்.

நிபுணர் என்பது  றகர ஒற்று மறைந்த ஒரு கூட்டுச்சொல்.

நிபுணராவார் நிலை  (  நிற்பு  :  நில் + பு) )  உணர் - உணர்ந்தவர்.

இதுபோல் அமைந்த இன்னொரு  சொல்:  விபுலம்.

விழு புலம் >   விபுலம்.

இங்கு ழுகரம் மறைவு.  இது மிக உயர்ந்த இடம்  அல்லது தன்மையைக் குறிப்பது.

எ-டு:  விபுலாநந்த அடிகள்.

எல்லாத் திரிபுகளையும் நீங்கிடச் செய்யின் இவ்வாறு காண்க.

விழு புல ஆ(க) நன் து  (அ)  அடிகள்.

ஆ எனற்பாலது  ஆதல்/  ஆக்கம் குறிக்கும் ஒரு முன்னொட்டு.

காயம்  = வானம். ( தொல்காப்பியச் சொல்)

காயம்  >  காயம்.

நல் >  நன்.  (  லகர  0னகரத்  திரிபு.  இறுதி ஒற்று )

நன் + து  >   நந்து.    (  நல் + து = நன்று  என்பது செந்தமிழ் வடிவம்).

ஆ + நந்து + அம்  =  னந்தம். அல்லது  ஆநந்தம்.

சொற்கள் வார்த்து எடுக்கப்படுகின்றன என்ற கருத்தும்  ஒப்புதற் குரியதே.

வினைச்சொல்:  வார்த்தல்.

வார்+ தை ( விகுதி)  >  வார்த்தை.

இலக்கணத்தாலும் இலக்கியத்தாலும்  வழக்காறுகளாலும் வார்த்து எடுக்கப்படுவது.

மற்றொரு முடிபு:

வாய் >  வாய்த்தை > வார்த்தை.  (திரிபு).


எனவே இருபிறப்பி என்று முடிக்க.

வாய்  >  வார்

இதில்:

வாய்  (  நீட்சிக் கருத்து )    எ-டு:  வாய்க்கால்,  கால்வாய்.
வார்  இதுவுமது.  (  நீட்சி).  தோல்வார்,  இடைவார்.

நுண்மாண் நுழைபுலத்தால்  அறிக.

புலன் :  அறிதலுமாம்.    எ-டு:  நுழைபுலம்,  நுழைபுலன்.

மீண்டும் காண்போம்.


மேலும் வாசிக்க:

https://sivamaalaa.blogspot.com/2018/03/aoo-aoaauu-vaarthai.html