சத்தியம் என்ற சொல், தமிழ்நாட்டின் சிற்றூர்களில் இன்றும் நன்றாகவே வழங்கி வருகிறது. இதன் தமிழ் மூலங்களை இன்று விளக்கிப் பதிவு செய்வோம்.
சத்தியம் என்பது உண்மையில் உண்மை பற்றிய மனத்திலிருந்து எழும் உறுதிபற்றிய எண்ணப்பான்மை ஆகும். மனத்தில் எழுவது ஆகையினால் அகம் இங்கு பங்குபெறுகிறது. அகத்தில் உண்மை நிலவுகிறது என்பதே நிகழ்வதாகும். இதுவே நடந்தது என்று மனம் நினைக்கின்றது. இதை அகத்தில் இயங்குகிறது என்று நாம் சொல்வோம். அகத்து ( அதாவது அகத்தில் ); இயங்குகிறது : இதற்குரிய சொல் சுருக்கிச் சொன்னால் '' இயம்'' என்பது ஆகும். இந்த இரண்டு சொற்களையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். சேர்த்துச் சொன்னால்: அகத்து இயம் > அகத்தியம். அகத்தியம் என்று ஓர் இலக்கண நூல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அது இன்று முழுமையாகக் கிடைக்கவில்லை என்று சொல்கிறார்கள். அந்த நூலுக்கும் இப்பெயர் இருப்பது, ஒரு உயர்வான செய்தியே ஆகும். அது இருக்கட்டும்.
அகத்தியம் என்ற சொல், அத்தியம் என்று இடைக்குறைந்து. இதில் உள்ள ககரம் மறையும். இனி, அகரம் சகரமாகும் ஆதலால், அத்தியம் என்பது சத்தியம் ஆகும். அமணர் என்ற சொல் சமணர் என்று ஆனது போலுமே இது. ஆடு> ஆடி> சாடி என்று சகர வருக்கத்தில் சொல் அமைந்தது போலுமே இதுவும். இது போன்ற திரிபுகளை பல் இடங்களில் எடுத்துக்காட்டியுள்ளோம்.
இதுவே சத்தியம் என்ற சொல்லின் பிறப்பு ஆகும். அகத்தியம் என்ற நூலின் பெயரே சத்தியம் என்று திரிந்துள்ளது என்று கூறினாம் இதற்கு முரண் ஆகாது என்பது உணர்க. அகக்களத்தி> சகக்களத்தி> சக்களத்தி என்ற சொல்லையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
இது பின் தமிழ்நாட்டுச் சிற்றூர்களில் வழங்கி, சமஸ்கிருதத்தில் உண்மை குறிக்கும் சொல்லாக மாறியிருப்பது, தமிழருக்குப் பெருமை சேர்க்கும் வரலாறு ஆகும்.
அண்முதல்: அண்( மூலச்சொல்)> சண்> சம்> சந்தை என்பதும் காண்க. பொருள்களை வாங்கப் பலர் அண்மிச் செல்வது சந்தை ஆகும்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக