மூலம் என்ற சொல்லுக்குக் கிழங்கு என்ற பொருள் இருக்கிறது. இந்தச் சொல்லில் ''கந்த'' என்ற சொல்லைச் சேர்க்காமலே இந்தப் பொருள் கிடைக்கிறது.
கந்தம் என்ற சொல்லுக்கும் கிழங்கு என்ற பொருள் இருக்கின்றது. கந்த மூலம் என்ற இரண்டையும் சேர்த்தால் அதற்குக் கிழங்கு கிழங்கு என்று இரண்டுமுறை சொன்னதுபோலும் பொருள் வருகிறது. அப்படி வருவது கூறியது கூறலாகிவிடும். கந்தம் என்ற சொல்லுக்கு வாசனை என்ற பொருளும் இருப்பதால் '' கந்தமூலம்'' என்ற இருபெயரொட்டுச் சொல்லுக்கு வாசனைக் கிழங்கு என்று பொருள் கூறலாம் என்றாலும், இந்தக் கவிதையில் அப்படிப் பொருள் கொள்ளலாமோ என்று எண்ணித் துணிய வேண்டும்.. இந்தப் பாட்டில் அவ்வாறு பொருள்கொள்ளுதல் நேரிது என்று எண்ணமுடியவில்லை.
'' கந்தமூலமே புசிக்க நேரினும்
கடமை தவறவே மாட்டான் தமிழன்'' 1
என்று கவிஞர் பாடியுள்ளார். இந்தப் பாடல் தொடங்குவது: இந்த உலகினில் இருக்கும் மாந்தரில் எழிலுடையோர் எங்கள் தமிழன் '' என்றபடியாம்.
இந்தப் பாடல், ஏழ்மையினால் கிழங்கு புசித்தலைக் குறிப்பதால், இதற்கு மேல்குறித்தபடி பொருண்மை காணுதல் தவறுதலாகத் தெரிகிறது.
கண்டம் என்பது துண்டு என்று பொருள்தருவதால், "முழுக்கிழங்கும் கிட்டாமல் துண்டுக் கிழங்கே கிட்டினாலும்" என்0று பொருள்கொள்ளவேண்டும்.
கண்டு என்ற சொல் நூல்கண்டு என்ற வழக்கிலும் உள்ளது. சேலையில் வண்டு கடித்து கண்டு கண்டாக உள்ளது என்று கேள்விப்பட்டுள்ளோம். கண்டுகண்டாகத் தடித்துவிட்டது என்ற வழக்கும் உள்ளது.
கண்ட > கந்த திரிபு. கண்டு> கண்+ து. கண்து அம் > கண்டம்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
பகிர்வுரிமை.
அடிக்குறிப்பு: கஞ்சன் என்ற திரைப்படத்தில் வந்த பாடல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக