இதைச் சுருக்கமாகவே பார்த்துவிடுவோம்..
சன்+ தோ + ஷம் என்பது சந்தோஷம் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். உண்மையில், இது ''அன்பு தோய்ந்த அமைவு'' என்ற ஒரு வாக்கியத்தின் சுருக்கக் கருத்தே ஆகும். அன்பு என்ற சொல்லின் முதற்பகவு ஆகிய அன் என்பது, சன் என்று திரிந்தது. இது எப்படி என்றால், அமணர் என்ற சொல், சமணர் என்று திரிந்தது அல்லவா. அதுவே போலும் ஒரு திரிபுதான் இது. அன்> சன் என்பதற்குப் பின், தோய் என்பது தோய்தல் குறிக்கும் வினைச்சொல் ஆகும். இதில் இறுதி எழுத்தாகிய ய் தவிர, தோய் அப்படியே சந்தோஷம் என்ற சொல்லில் இருப்பதைக் காணலாம். தோய்தல் > தோய> தோஷ என்பது அங்குள்ளது காணலாம். அம் விகுதி அமைப்புக் குறிப்பது. அது அம் என்றே ஈற்றில் அடிச்சொல் போல் வந்து விகுதியாய் உள்ளது.
அன்பிலிருந்து விளைவதுதான் சந்தோஷம் என்பதை இச்சொல் சொல்லாமல் சொல்லிக்கொண்டிருப்பது இதன் சிறப்பு ஆகும்.
இவ்வாறு இச்சொல்லில் தமிழ் உதவி இருத்தலுக்கு நாம் மகிழ்வு கொள்வோம்.
இதை வேறுவகையிலும் பிரித்துச் சொல்வார்கள். ஆகவே இது இருபிறப்பிச் சொல் என்று கொள்க. எனினும் இதுவே இதன் உண்மை வடிவாக்கம் ஆகும்.
அறிக மகிழ்க்.
மெய்ப்பு பின்னர்.
பகிர்வுரிமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக