எந்தச் சொல்லாய்வாளனும் இந்தச் சொல் இந்த அடிச்சொல்லிலிருந்துதான் வந்தது எனலாம். இதற்கு மாறுபாடாகப் பிற நிபுணர்களால் வெளியிடப் படும் கருத்துகளையும் சற்றே கவனித்துக்கொள்ள வேண்டும். அதுவே முறை. யாம் பிறவட்டுக் கருத்துகளை விளக்குவதில்லை எனிலும் அவற்றையும் அறிந்த பின்னரே ஈண்டு வரைகிறோம்.
நிபுணர் - ( நிற்பு + உணர் ). >> நிற்புணர் > நிபுணர்.
நிபுணர் என்பது றகர ஒற்று மறைந்த ஒரு கூட்டுச்சொல்.
நிபுணராவார் நிலை ( நிற்பு : நில் + பு) ) உணர் - உணர்ந்தவர்.
இதுபோல் அமைந்த இன்னொரு சொல்: விபுலம்.
விழு புலம் > விபுலம்.
இங்கு ழுகரம் மறைவு. இது மிக உயர்ந்த இடம் அல்லது தன்மையைக் குறிப்பது.
எ-டு: விபுலாநந்த அடிகள்.
எல்லாத் திரிபுகளையும் நீங்கிடச் செய்யின் இவ்வாறு காண்க.
விழு புல ஆ(க) நன் து (அ) அடிகள்.
ஆ எனற்பாலது ஆதல்/ ஆக்கம் குறிக்கும் ஒரு முன்னொட்டு.
காயம் = வானம். ( தொல்காப்பியச் சொல்)
காயம் > ஆகாயம்.
நல் > நன். ( லகர 0னகரத் திரிபு. இறுதி ஒற்று )
நன் + து > நந்து. ( நல் + து = நன்று என்பது செந்தமிழ் வடிவம்).
ஆ + நந்து + அம் = ஆனந்தம். அல்லது ஆநந்தம்.
சொற்கள் வார்த்து எடுக்கப்படுகின்றன என்ற கருத்தும் ஒப்புதற் குரியதே.
வினைச்சொல்: வார்த்தல்.
வார்+ தை ( விகுதி) > வார்த்தை.
இலக்கணத்தாலும் இலக்கியத்தாலும் வழக்காறுகளாலும் வார்த்து எடுக்கப்படுவது.
மற்றொரு முடிபு:
வாய் > வாய்த்தை > வார்த்தை. (திரிபு).
எனவே இருபிறப்பி என்று முடிக்க.
வாய் > வார்
இதில்:
வாய் ( நீட்சிக் கருத்து ) எ-டு: வாய்க்கால், கால்வாய்.
வார் இதுவுமது. ( நீட்சி). தோல்வார், இடைவார்.
நுண்மாண் நுழைபுலத்தால் அறிக.
புலன் : அறிதலுமாம். எ-டு: நுழைபுலம், நுழைபுலன்.
மீண்டும் காண்போம்.
மேலும் வாசிக்க:
https://sivamaalaa.blogspot.com/2018/03/aoo-aoaauu-vaarthai.html

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக