சாகசம் என்பது அருமையாய் அமைந்த சொல்.
உலகில் திறனுடையோர் பலவிதச் சாகசங்கள் செய்து புகழுறுவது உங்களுக்குத் தெரியும். ஆகவே சாகசம் என்பது யாது என்று விளக்கவேண்டா என்பது சரிதான். இருப்பினும் தெரியாத ஒரு சிலருக்காக ஓரிரண்டு கூறுவோம்.
காண்போர் இது துணிகரமான செய்கை என்பது; அல்லது இது வெறும் பாசாங்கு என்பது. இது காண உண்மையே போன்றது , கண்டேன் வியந்தேன் என்று போற்றுவது. இது செய்வோனைச் சாகசன் என்பது.
இத்தகு செயலை ஸாகஸம் என்றும் எழுதுவர், வடமொழி என்பர்.
சாவதுபோலப் பாசாங்கு பண்ணி (பசப்பி) காண்போரை அசத்தினால் அதுவே
சாகசம். அது சொல்லிலே இருக்கிறது.
சா ( சாகு) ஒரு வினைச்சொல்.
அசத்து ( அச) இன்னொரு வினைச்சொல்.
சாவது ( சாகுவது) போல் நடித்து அசத்திவிடுவது.
சாகு என்பதில் கு என்பது சாரியை.
அச என்பது அசத்து என்பதன் அடிச்சொல்.
சாகு + அச + அம் = சாகசம்.
நாளடைவில் சாகசங்கள் பெருக சொற்பொருளும் விரிதல் இயற்கை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக