இன்று சிலாகித்தல் என்ற சொல்லெழுந்த வகையை அறிந்துகொள்வோம். இஃது இன்னும் வழக்கில் உள்ள சொல்லாம்.
அறிதற்கு எளிமையானதே இது.
இதனைச் "சில ஆகுதல்" என்ற தொடர்கொண்டு அறிக.
இந்தச் சொல்லiைப் படைத்தவர், ஆகுதல் என்ற செந்தமிழ் வடிவினைக்
கையிலெடுத்து ஆகி என்று வினை எச்சமாக்குகிறார்.
அப்புறம் அதில் -தல் என்னும் தொழிற்பெயர் விகுதியை இணைக்கிறார்.
இணைக்க "ஆகித்தல்" என்ற வடிவம் கைவரப்பெறுகிறார்.
இது "ஓது" என்ற சொல்லை "ஓதி" என்று எச்சமாக்கி அப்புறம் -தல் விகுதி இணைத்து ஓதித்தல் என்று தொழிற் பெயர் ஆக்கியது போலுமே. இதை "ஆமோதித்தல்" என்பதில் வர அறிந்து மகிழ்வீர்.
அந்தக் காலத்தில் செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்துப் புலவோர் இது கண்டு மகிழார் எனினும் புதுமை விழைவார் யாதுதான் செய்வது. கூடுதலான எதிர்ப்பு வரின் பிறமொழி என்று மழுப்பிட வேண்டியதே.
எச்சத்தினின்று வினைபுனைதல் பாலி முதலிய பிற மொழிகளிற் காணக் கிடைப்பதே.
சில வழிகளில் புகழ்தல் என்பது சிலாகித்தல் என்பதான புதுப்புனைவுக்குப் பொருள் ஆயிற்று. புகழே ஆக்கம். மற்றென்ன உண்டு மானிடற்கு? இசைபட வாழ்தலே ஊதியமென்றார் வள்ளுவனார். சிலாகித்தலுமது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக