வெள்ளி, 13 செப்டம்பர், 2019

அந்தோ என்ற சொல்.

இன்று  அந்தோ என்ற சொல்லை ஆய்வு செய்வோம் வருக.

அந்தோ என்பது தமிழில் பயின்று வழங்கும்  சொல்லாகும். இந்தப் படல் வரிகளைப் பாருங்கள்.

"அந்தோ என் ஆவியெல்லாம்
கொள்ளை கொண்டாரே
ஆறுமுக வடிவேலன் சிவபாலன்"

இன்னொரு பாடல்:

"சொப்பன வாழ்வில் மகிழ்ந்து ---  சுப்ரமண்ய
சுவாமி  உனைமறந்தார்  ------ அந்தோ!"

அந்தோ என்பதற்கு  ஐயோ  எனபதாகப் பொருள்  கூறுவதுண்டு.

ஐயோ அந்தோ அம்மோ அக்கோ அண்ணோ என்பவெல்லாம் மனம் மிக இரங்கி ஒலியெழுப்ப்புதலே.

In English "Alas"  is of the same kind of exclamation. Another:  OMG!

அம்  என்பது  அம்மா என்பதன்  முன் பகுதி.

தோ என்ற  விளிவடிவின் எழுவாய் வடிவம்  பழைய "தை"  என்பதாகும்.

இந்தச் சொல்லுக்கு  தந்தை என்பது பொருள்.

தம் + தை  =  தந்தை.
எம்+ தை =   எந்தை.
நும் + தை=   நுந்தை.

தம் + அப்பன் =  தமப்பன்  திரிபு:  தகப்பன்.
தம் +  ஆய்=  தாய். 

தந்தை  >  தந்தாய்!
தந்தை  >  தந்தோ.

தம். எம்.  நும்  இவற்றை விலக்கி உணர்க.

தை > தா!    இது விளிவடிவம்.

தை >  தோ!   இது ஓகாரம் வந்த விளி.


அம்+ தோ =  அந்தோ:   அம்மையே அப்பனே என்று இருவரையும் விளித்தவாறு.

அன் +  தோ  =  அந்தோ எனினுமாம்.    அன் என்பது அன்னை என்பதன் பகுதி.

தமிழ்தான். அறிக.
 

கருத்துகள் இல்லை: