புதன், 13 ஏப்ரல், 2016

நல்லிசைப் புலவர் கல்லாடனார்:


continue from  http://sivamaalaa.blogspot.sg/2016/04/blog-post_91.html


கல்லாடனார்:  அவர் ஒரு  நல்லிசைப் புலவர்.  சொல்லில் நாகரிகம் மிக்கவர் என்று நன்கு பாராட்டலாம்.  ஏன்?

"அத்தான் வருவாக" என்ற இடுகையில், தரப்பட்ட குறுந்தொகைப் பாடலில்  தொண்டைமான்கள் பரம்பரை என்பதை "தொண்டையர்" என்ற சொல்லால் புலவர் குறிப்பிடுகிறார். சொல்லானது பன்மையில் ஆளப்பட்டுள்ளது காணலாம்.

போரில் பல வெற்றிகள் ஈட்டிய அவர்களின் யானைகள் "அண்ணல் யானைகள் " ஆகின.  அண்ணல் உயர்ந்தோன் என்றும் பொருள்படும். இது
தொண்டைமான்களின் சிறப்பை யானகள் மேலேற்றிக் கூறுதல் ஆகும்.
அவை தின்பது பகைவரின் விளைச்சல்களை.

தொண்டைமான்கள் வீரர்கள். பகைவர் உணவை உண்ணார்.  உண்பவை
யானைகள். சொந்த உணவு இல்லாதவர்களா தொண்டைமான்கள்?.

புலவரின் பாடலில் இதுவும் ஒரு சிறப்பு ஆகும்.

Why words corrupt?


Continue from  விபுலம்  what is it?


http://sivamaalaa.blogspot.sg/2016/04/whats-it.html


இரண்டு மூன்று எழுத்துக்களை விலக்கிவிட்டு அமைக்கப்பட்ட சொற்களும் உள்ளன என்பதைச் சில ஆண்டுகட்கு முன்னரே எழுதியிருந்தேன். மறந்திருந்தால் ஓர் எடுத்துக்காட்டு:

விழு + வாழ் + அகம் . வி+வா+ கம். = விவாகம்.
அகத்து வாழ்வே விழுமியது, சிறந்தது; துறவு அன்று என்பது பொருள்.

விழு+வாழ்+ ஆகம் > வி +வா+ கம்  எனினும் அமையும். ஆகும் என்பதன் திரிபாய் அல்லது ஆகு+ அம் என்பதன் இணைப்பாய் வரும்.

இந்தியாவெங்கும் ஒரு காலத்துத் தமிழே வழங்கியது. சொற்கள் திரிந்து பாகதமாகி, உருக்குலைந்ததன் பயனாய் இங்ஙனம் மாறின என்பதே உண்மை. கருப்பின் கலப்பு இந்தியாவெங்கும் காணப்படுகிறது.  அது இடத்திற்கேறப அளவில் அழுத்தத்தில் வேறுபடலாம். நிறம் மயங்கிய காலை, சொற்கள் மயங்காவோ?
பொதுப்படைப்பாகிய சமஸ்கிருதத்தில் சொற்கள் சென்று சேர, அவற்றின்  தோற்றகம் எங்கு என்று அறிவது இதுகாலை குதிரைக்கொம்பாகிவிட்டதன்றோ?  அதன் முன் வழங்கிய பாகதங்கள் ஒழிந்தன அல்லது திரிந்தன.

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

விபுலம் what's it?

விபுலம் விபுலம் என்பது   ஒரு  கவின்குழைந்த  சொல்.

பார்க்கும்போதும்  கேட்கும் போதும்  தமிழா என்று எண்ணத் தோன்றுவது !

விரி என்பது தமிழ்ச்சொல்.

புலம்  என்பதும்  தமிழ்ச்சொல்.


விரி+ புலம் >  விரிபுலம்  >  ?

ரிகரத்தை  எடுத்துவிட்டால்  "விபுலம் !"

 தமிழ் வளர்த்த விபுலாநந்தரைத் தெரியுமா?  Swami VipulAnanthA!

இனிய பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளார். விபுலானந்த அடிகள்>

விரிபுலம் என்பது பூமியைக் குறித்தல் போலவே விபுலம் என்பதும் பூமியையும் குறிக்கும்.

பெருமை, விரிவு, அகலம் என்பது இந்த பிற்படைப்பின் இன்பொருள் .

தொடர்ந்து படிக்க:   http://sivamaalaa.blogspot.sg/2016/04/why-words-corrupt.html
why words corrupt?