செவ்வாய், 23 செப்டம்பர், 2014

The original source of word "red"?

இப்போது சொற்கள் சிலவற்றைச் சிந்திப்போம்:

*(அர்) > அரத்தினம்>  ரத்தினம்> இரத்தினம்.
*(அர்) > அரத்தை.
*(அர்) > அரத்தம்>  ரத்தம். இரத்தம்.
*(அர்) > அரன்  (செம்மை, செந்நிறக் கடவுள், சிவ> சிவன்)
(அர்) > அரசநாபி  (red aconite)

மேற்குறித்தவை யாவும் செம்மைப் பொருள் உடையன.

(அர்) > (அரத்து ) > ரத் > red. (English)  (அர் + அத்து )   



அர் என்பது சிவப்பு  நிறம் குறிக்கும் ஒரு தமிழ் அடிச்சொல். 
------------------------------------------------------------------------------------
*This has been pointed out by other etymologists


அது > அத்து    .இது  என்பது இத்து என்று மலாய் மொழியில் திரியும்.
இது -  it.

The original source of  word "red"

Sanskrit rudhira.     எ ன்ற சொல் லும்   நன்கு ஆராய்தற்குரியது.


இதெல்லாம்  கடினமான  வேலைதான்.   ஒரு  அறுத்த விலங்கு  உருவிலிருந்து  வெளிப்படுவது    அரத்தம்.  இது  அறுத்தல் என்ற சொல்லுடன்  தொடர்பு உள்ளது,     விலங்கை  அறுத்தவுடன் வெளிப்படுவது  அரத்தம்.  அறு+ அத்து  + அம் .> அறத்தம் >  அரத்தம் > ரத்தம் >  இரத்தம்   ரகரம் றகரமாகவும்  பின்னது  முன்னதாகவும்  மாறும்  வசதி  உடையவை     அறுத்து   வெளிவருவது சிவப்பு நிறத்தது ஆதலின், அரத்தம் என்பதற்குச் சிவப்பு என்ற பொருளும் ஏற்பட்டது.

அப்படியானால் மறம் என்பதை ஏன் மரம் எனல் கூடாது? திட்டவட்டமான பொருள் திண்மை பெற்றபின்பு இவற்றை மாற்றி மாற்றி எழுதினால் பொருள் விளங்காமல் போய்விடும், மிகப் பழங்காலத்தில் இவை ஒன்றுக்கு மற்றொன்று வந்திருக்கலாம். அது அந்தக் காலத்துக்குச் சரி. சொல்லாய்வு என்பது பழயதை ஆய்வ்து என்று அறிதல்வேண்டும். கருப்பு கறுப்பு போன்றவை பாதிக்கப்படாமல் இன்றும் உலவுகின்றன, ற என்பதே இரு ர (ரர) இணைந்த எழுத்தென்பதைக் கவனிக்கவும்.
 .


ருத்திரா என்ற சமஸ்கிருதமும் "அறுத்திர்ரா" ( அறுத்திருடா) என்ற அறுப்புக்கொட்டகைச் சொல்லின் மருஉவே என்று உணர்க.

பாடாண் திணை 48 துறைகள்

பாடாண் திணை என்பதன் தன்மையை ஓரளவு அறிந்தோம். துறைகள் இத்திணையில்  பலவாகும்.

ஒன்றிரண்டைப் புரிந்துகொள்வோம்.

1. ஒரு புலவர் அரசன் பிறந்த நாளைப் பாடுகிறார். பாடாண் திணை.  ஆனால்  துறை யாது? இதன் துறை நாண்மங்கலம் என்பது.

2. ஓர் அரசன், புலவர்க்கு தானும் மகிழ்வு எய்திப் புலவரும் போற்றும் வண்ணம் பரிசில் அளிக்கின்றான். அதன்பின் புலவர் சின்னாட்கள் தங்கியிருக்கிறார்  நல்ல உரையாடலும் விருந்தும் நடக்கின்றது.  புலவருக்கு ஊர் ஞாபகம் வந்துவிடுகின்றது. விடை கொடுங்கள் என, அரசர் ஏன் இந்த விரைவு என்கிறார்.
மேலும் இரண்டுமூன்று நாடகள் ஓடவே, புலவர்:  நான் போகவே வேண்டும். இல்லையென்றால், என் உறவினர் என்னை  ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள். எதோ ஒருபகை நாட்டினுள் அடியெடுத்து வைத்தது போல ஆகிவிடும் என்கிறார்.
அப்புறம் மேளதாளத்துடன் ஊருக்குச் செல்ல இசைவு கிட்டுகின்றது.

ஒரு பாடல் இப்படி வருமானால், அது என்ன துறை. ?

அதுதான் "பரிசில் நிலை" என்னும் துறை.

இப்படி 48 துறைகள் உள்ளன. 

திங்கள், 22 செப்டம்பர், 2014

பாடாண் திணை

 (  இந்த இடுகை சில முறை கள்ள  நுழைவர்களால்  மற்றும்  மென்பொருள்களால் தாக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் எழுத்துக்களையே மாற்றியுள்ளனர் என்று அறிகிறோம்.  கவனமாக வாசிக்கவும்.  சில வாக்கியங்களும் அழிக்கப்பட்டிருக்கலாம்.)


வாகைத்திணை என்பது யாது என்று சிறிது கண்டோம். இப்போது பாடாண் திணை என்பது யாது என்று அறிதல் பொருத்தமானது.

முன்னர் நான் இங்கு விளக்கமெழுதிய சில பாடல்களுக்குத் திணை குறித்துள்ளேன். அவற்றுள் பாடாண் திணையுமொன்று.

பாடாண் என்பது பாடப்படுகின்ற ஆண்மகனது ஒழுகலாறு என்று சொல்லப்படும். பாடு + ஆண் என்பது பாடாண் ஆயிற்று.அன்மொழித் தொகை.

"ஒளியும் ஆற்றலும் ஓம்பா ஈகையும்
அளியும் என்றிவை ஆய்ந்து  உரைத்தன்று "

என்பது பாடாணுக்கு அளிக்கப்படும் விளக்கம்.

ஒளி ‍  -புகழ். ஆற்றல் ‍ ஒன்றை இயற்று திறன். ஓம்பா ஈகை ‍ எதையும் ஒளிக்காமல் அறம் செய்தல்.  அளி ‍: இரக்கம்.

பாடாண் திணையில் இவையும் இவை போல்வனவும்  பாடுபொருளாய் வருமென்று அறிக. இதில் துறைகள் பலவாகும்.

மறுபார்வை நாள்:  31.12.2017 

 தொடர்புடைய   மற்ற  இடுகைகள்:


















வளிநடந் தன்ன வாஅய்ச் செலல் இவுளியொடு கொடிநுடங்கு மிசைய தேரினர் எனாஅக், கடல்கண் டன்ன ஒண்படைத் தானையொடு மலைமாறு மலைக்குங் களிற்றினர் எனாஅ, உரும்உடன் றன்ன உட்குவரு முரசமொடு செருமேம் படூஉம் வென்றியர் எனாஅ, மண்கெழு தானை, ஒண்பூண் வேந்தர் வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே; எம்மால் வியக்கப் படூஉ மோரே, இடுமுள் படப்பை மறிமேய்ந்து ஒழிந்த குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு, புன்புல வரகின் சொன்றியொடு, பெறூஉம்,














































 
மறுபார்வை செய்யப்படும்.