சனி, 2 ஆகஸ்ட், 2014

உங்கள் நாட்டுத் திறன்

அவர் வெளி நாட்டு வேலைக்காரர்.
இங்கு வந்து  குளம்பி (காபி)  போடுகிறார்!
தாகம் எடுத்த  அதனாலே,
நாமும் வங்கிக் குடிக்கிறோம்!
இங்கு வேலை செய்ததனால்
அவர் திறமும் (தரமும் )
இந்த நாட்டின் திறமோ? வெளி நாட்டுத் திறமோ?

அவர் நன்றாகக் குளம்பி போட்டால்
அந்தத் திறமை அவர்திறமை.
அவர் இருந்துவந்த நாட்டின்  திறமை.

ஒரு மருத்துவ  மனையில்
வெளி  நாட்டுத் தாதிமார்,
வெளி நாட்டு மருத்துவர்கள்!
அந்த மருத்துவ மனைத் தரம்
வெளி நாட்டுத் தரமா? உள் நாட்டுத் தரமா ?


இலவசம்

இலாகா என்ற சொல்லின் தொடர்பில் இலவசம் என்ற சொல்லையும் நினைவு கூர்வது  நலமென்று நினைக்கிறேன்.  இலவசம் என்னும் சொல்லினைப் பற்றி சில ஆண்டுகட்கு முன் எழுதியிருக்கிறேன்.

இலவசம் எனில் " இல்லாமல் வசமாவது".  -  என்ன இல்லாமல் ?  என்ற கேள்விக்கு "விலை இல்லாமல்",   "கட்டணம் இல்லாமல் "   "காசு இல்லாமல்" என்றே  எல்லாம் விரிக்கலாம்.  இது பொருள் கைமாற்றம் தொடர்பில் வரும் சொல் ஆதலால் வேறு ஏதும் இல்லாமல் என்று சொல்ல இயலாது.

வசம் என்பது வை என்ற சொல்லின் அடியாய்ப் பிறந்தது.

பை > பய் > பயல் > பயன் > பசன் >பசங்க
பை> பையல் > பையன் .

பையலோடிணங்கேல்  என்பது ஆத்திசூடி.

இந்த மாதிரி திரிபுதான் இது.

வை > வய் > வயம் > வசம்

ஓன்று (உங்கள் ) வசமிருக்கிறது என்றால்  அதை நீங்கள் வைத்திருக்கிறீர்கள்.

இல் >  இல்+வசம் >  இ (ல் +அ ) வசம் >  இலவசம்.

இடையில் ஒரு அகரம் தோன்றிவிட்டது.  சிலருக்கு அதனால்  மூளை  திசை மாறிவிடுகிறதோ?

இலாகா என்பதில் உள்ள இல் house குறிக்கும் .
இலவசம்   என்பதில் உள்ள இல் no, without  குறிக்கும்

வியாழன், 31 ஜூலை, 2014

சந்த மொழி. மந்திரமொழி

இலாகா என்பது  பின் நடைப் புனைவு என்றோம், இங்கே:
http://sivamaalaa.blogspot.com/2014/07/blog-post_31.html

மொழிப் பெயராகிய சமஸ்கிருதம் என்பது வேறு விதமாக .விளக்கப் பட்டுள்ளது. "நன்றாக அமைக்கப்பட்டது"   என்பதிலிருந்து வந்ததாகவும் பொருள் விளக்கப் பட்டது.

அதுமட்டுமின்றி சமை என்பதிலிருந்து வந்ததென்பதும் கூறப்பட்டது \\இவை எல்லாம் ஒரு புறம்  இருக்க,

சமஸ்கிருதம் ஓர்  சந்த மொழி;  அது  மந்திர  மொழி  என்பதை நாம் அறிவோம்.

ச -  சந்த மொழி.
ம -  மந்திரமொழி.

முதலிரண்டு  எழுத்துக்களுக்கும் இவையே  பொருள்; மொழிப் பெயரும் அப்படி  வந்தது தான்  என்று நினைக்க இடமுண்டு.

இதை எதிர்கால ஆய்வுக்கு விட்டுவிடுவோம்.