திங்கள், 12 மே, 2014

ஆஞ்ச நேயர்

ஆஞ்ச நேயர் என்பது முன்னர் இராமர்பால்  "ஆழ்ந்த நேயம்" உடையவர் என்ற தொடரின் திரிபு என்று  கூறப்பட்டது.

ஆனால் "ஆழ்ந்த" எனற்பாலது "ஆஞ்ச" என்று திரிதற்குரிய சாய்நிலை குறைவு என்று தெரிகிறது.

இந்தத் திரிபுகளை நோக்குக.

பாய்ந்த  >  பாஞ்ச.
ஆய்ந்த >  ஆஞ்ச.    (ஆஞ்ச கீரை).
ஓய்ந்த >  ஓஞ்ச    (ஓஞ்ச வாய்).
காய்ந்த >  காஞ்ச    (காஞ்ச துணி)
தேய்ந்த > தேஞ்ச   (தேஞ்ச பல்லு).

ஆகவே, ஆய்ந்த நேயர் என்பதன் திரிபே "ஆஞ்ச  நேய" என்பது, மிகத் தெளிவாகின்றது.

இதன் பொருள்,  நண்பராக முன் வந்த  பலருள், ஆராய்ந்து எடுத்த நேசனே "ஆஞ்ச  நேயர் என்பது தெள்ளத் தெளிவாகின்றது.

மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பாத.............


மக்கள் கைபோற்றி மகிழாத,   ----
 மாநிலத்து நன்மையெனும்
மக்கள் வாய்போற்றி யுகக்காத -----
மதித்தவர்கள் எழுத்துமூலம்
மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பாத -----
 ஒருதலைவர் நேமித்தீரேல்
மக்கள் ஆர்த்தெழுந்து புரட்சியினால்
கவிழ்த்திடத்      தயங்காரென்றார்.

இவ்வாறு கூறினர் தாய்லாந்தில் தலைவர் சிலர். அது கவிதை வடிவில்.!

ஞாயிறு, 11 மே, 2014

vetrilai

வெற்றிலை என்பது வாயில் போட்டு மெல்லுவதற்குப் பயன்படும் ஓர்  இலைவகை. இது கொடியாகப் படர்கிறது.  இந்தக்  கொடியை வெற்றிலைக் கொடி என்றுதான் சொல்லக்கூடும். கொடி என்று பேசுகையில் ஏன் இலை வருகிறது?

 மா+இலை =  மாவிலை.

மரம் குறிக்கும்   போது மாவிலை மரம் என்று நாம்    சொல்வதில்லை. அப்படிச் சொன்னால்  அது மரபு வழு  (பிழை).

வெற்றிலைக் கொடிக்கு மட்டும் ஏன் இலையைச் சுட்டி அப்புறம் கொடியைக் குறிக்க வேண்டும்.?

உங்கள் கருத்துகளைக் கூறுங்கள். பின் எழுதுவேன்.