ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

"அபராதம்"


இப்போது  "அபராதம்"  என்பதைக்  கவனிப்போம்

அவம் என்பது  அவ > அப  என்று   நின்றது.  அவமாவது கெடுதல் பொருள் தருவதொரு சொல்.

இனி ராதம் எனற்பாலது.

இறுத்தல்  -  "காசு கட்டுதல் "  அல்லது  பணம் கட்டுதல்.

இறு +  அது + அம்  = இறதம்  >  றதம் >  ரதம் > ராதம் .

அது என்பது   சொல்லாக்க இடை நிலையாக  வருமென்பது   பருவதம் (< பரு ), ,   காவதம்  (<கா )  என்பனவற்றில் காண்க. ( இது என்பதும் கொள்க     சுரோணிதம்(<சுர ) கணிதம் (<கணி, கணித்தல் )   )

அப +  ராதம் = அபராதம்  (தண்டம் )  ஆகும். Having to pay a fine is bad for your purse. It is naturally "avam". That's why this word started with "apa-"

இஃது தமிழ் மூலங்களையுடைய ஒரு சொல்.

அவமாகப்  பணம் இறுத்தல் என்பது.

நன்கு   திரித்துப்    புனையப்பட்ட  சொல்.

அவி + அம்  = அவம்  -    முன் இடுகைகளில் காண்க

"அவ இறதம்"  எனில் அஃது ஒரு சொன்னீர்மைப் படாமை அறிக.  "அவவிறதம்"  எனில்  இன்னா ஓசை தரும் .  இவையெல்லாம்  நல்லிசைப்  புலவன்மார் புனைதக்க வல்ல.









சனி, 5 ஏப்ரல், 2014

சாவடி

இப்போது இந்தியத் தேர்தல் வெகு விரைவாக வந்துகொண்டிருக்கிறது. தேர்தல் சமயத்தில் பயன்படுத்தும் ஒரு சொல்லையாவது நாம் ஆராயவேண்டாமா?

அதற்காக நாம் இன்று நுணுகி நோக்கப்போவது  "சாவடி " என்னும் சொல்.  எங்ஙனம் அமைந்தது என்று அச்சமின்றி நோக்குவோம். காரணம் வைப்புத்தோகையை நாமொன்றும்   இழந்துவிட  மாட்டோம்.

சாவடி என்பது தலை போன சொல். அது  கல்வெட்டுக்களில் "உசாவடி "  என்று வந்துள்ளது.  உசாவுதலாவது  கேட்டறிதல்.  அடி என்பது  யாரையும் தாக்கச் சொல்வதன்று .   அடு +  இ =  அடி.  அடுத்துச் சென்று (கேட்டறி)  என்பதாம். அடுத்தல் -  அருகிற் செல்லுதல்.

இதை  முன் ஓர்  இணைய தளத்தில் ஆதாரத்துடன் எழுதியிருந்தேன்.  அது இப்போது கைவசம் இல்லை.  இருப்பினும் இதுதான் சொல்லவிழைந்தது ஆகும்.

சாவடி நல்ல தமிழ்ச் சொல்  ஆகும்.

சாவடி என்பது வேறு.  "சாகடி" என்பது வேறு.

சந்தசை a name for sanskrit

சமஸ்கிருதம் (இன்னொரு பெயர் சங்கதம்)  பல்வேறு வளர்ச்சிக்கட்டங்களைக்  கடந்து வந்துள்ளது.
அப்போது  ஒவ்வொரு கட்டத்திலும் அம்மொழிக்கு  ஒரு பெயர் அமைந்திருந்தது என்பதை மொழி வரலாறுகளை உசாவுவார் எளிதின் அறிந்துகொள்ள இய‌லும்.

ஒரு  கட்டத்தில் அது சந்தாசா  எனப்பட்டது.  .......... எனின்  சந்தமொழி என்று அர்த்தம். 

இச்சொல்  எங்ஙனம்  அமைந்தது?

சந்தம் என்பது  எளிதான சொல்தான்.  சந்த(ம்)   +   ஆசா.    ஆசா என்பதென்ன?

ஆசா  என்பது   அசை. 

அசை   என்பது வாயசைவில்   ஒலி  எழுதலைக் குறிக்கும்.


சந்த + அசை  >   சந்தசை   >   சந்தசா    >   சந்தாசா .


அசை  என்பது தமிழ்ச்சொல்

அசை  என்பது  யாப்பியலில் பயின்று  வழங்கும்  ஒரு சொல் .    சந்த  அசை  மொழி  என்பதும்  அம்மொழிக்குப் மிகப் பொருந்த்தமான வருணனை  அல்லது  பெயராகும்.  ஆதலின்  இப்பெயரை அமைக்கத் துணை நின்றோன்  ஒரு தமிழ்ப் புலவனாயிருந்திருக்க  வேண்டுமென்பது  சரியான   அணுமை  (inference)  என்க.