புதன், 8 ஏப்ரல், 2026

சொல்: கோதா, கோதாட்டு, ஹோதா

 இவற்றைக் கவனிப்போம்.

இடைக்காலத்தில் உருவான சொற்களில்,  வாய்தா,  சந்தா, சாதா ( ordinary) முதலியவும் பிறவும் உள்ளன.  அவற்றில் சிலவற்றைத் தனித்தனியாக விளக்கியுள்ளோம். பேதா என்ற சொல்லையும் மறந்துவிடலாகாது. இங்கு கோதா என்ற சொல்லை எடுத்துக்கொண்டுள்ளோம்.

கோதா என்பதில் கோத்தல் என்பது வினைச்சொல்.  தா என்பது தருதல் வினை. இவ்வாறு இருவினையொட்டுப் பெயர்களைப் பயன்படுத்தியோர்  இடைக்காலத்தோர் என்று நாம் அறிந்திருந்தாலும், இவர்கள் யாரென்று தெரியவில்லை.  அவர்கள் ஏதும் எழுதிவைக்கவில்லை யாதலின், இவர்களை அறியமுடியவில்லை. இஸ்லாமிய மக்களிட மிருந்து இவை வழக்குக்கு வந்திருக்கவேண்டும் என்று தெரிகிறது.  தமிழ் மூலங்களைப் பயன்படுத்தியோர், தமிழ் இஸ்லாமியராய் இருந்திருக்கவேண்டும்.  இவற்றுள் ஹோதா என்பது வேதகாலம் தொட்டு வழங்கியதால் இஸ்லாமுக்கு முந்தியதாகும்.

கோத்தல் என்ற வினையும் அதனோடு தா ( தருதல்) என்ற சொல்லும் இணைந்து, கோத்துத் தருதல் என்று பொருள்படுகிறது:  எனவே  அமைப்பு என்பது பொருள். இது பின்னர், ஹோதா என்றும் திரிந்துள்ளது.  கோத்துத் தரு(தல்) என்பது  கோத்துத்தரு> கோத்தரு> ஹோத்தரு> ஹோத்ரு என்று மாறியமைந்தது. இவ்வமைப்பு முதலில் தீயினை வணங்கும் வழிபாட்டு அமைப்புக்கு வழங்கியது என்பது வரலாறு ஆகும்.

அமைப்பு என்ற பொதுப்பொருளில், இது அமைத்தல்  அல்லது அமைப்பு என்றே பொருள்பெற்றது.

கோதாட்டு என்பது கோதா+ ஆட்டு என்பதுதான்.  இது பாவமன்னிப்பு சடங்குகளையும் அவ்வமைப்பையும் குறித்து வழங்கியுள்ளது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை



 



கருத்துகள் இல்லை: