அகந்தை என்பது தமிழ்ச்சொல் அன்று என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, நம் எண்ணக்கோட்டம் தவிர.
இதில் அகம்+ தை என்ற இரு பகவுகள் உள்ளன. அகம் என்பது உள் என்று பொருள் தருவது. தை என்பது ஒரு பெயராகவும் வினையாகவும் உள்ள சொல். தைத்தல் ஒரு வினை. தை என்ற மாதம், இயற்கை வளத்தில் நிலைகளுடன் மக்கள் வாழ்வு செய்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டுசென்று தைத்தல் அல்லது இணைத்தல் என்ற பொருளில் அமைந்த பெயராகும். தைத்தல் என்ற நூல்கொண்டு தைத்தல் மட்டுமன்று, தடவுதல் கூட ''தைத்தல்'' என்பதில் அடங்கும். தை+ இல்+ அம் > தை+ ல் + அம் > தைலம், அல்லது தையிலம்> தயிலம்> தைலம் என்றும் காட்டலாம்.. இது சிற்றூர்ச் சொல். தைவருதல் என்றால் தடவுதல். '' நரந்தம் நாறும் என் தலை தைவரு மன்னே'' என்று ஒளவையின் புறநானூற்றுப் பாட்டில் வருதல் கண்டு கொள்க.( புறம் 235)
தையல்காரன் என்ற சொல்லில் வரும் தை என்ற சொல்லையும் கவனிக்கவும். taugo என்ற செருமானிய மொழிச்சொல்லும் டை என்ற ஆங்கிலச்சொல்லும் அறியத் தக்கனவாகும். கழுத்துக்கட்டுக்கு ''டை'' என்பர். டையும் தையும் ஒன்றுதான்.
அகந்தை என்ற சொல்லில் தை என்பது ஒரு விகுதி என்று சொல்லலாம். தை என்ற விகுதிக்கு இணைப்பு என்ற பொருளும் காணற்குரியது ஆகும். தா+ இ என்ற இருபகவுகள் பழங்காலத்தில் இணைந்த ''தை'' என்றும் ஆயின என்பது அறிதற்குரியது. குழந்தையைத் தாய் தருகிறாள். தா என்ற சொல் தருவதைக் குறிப்பதுடன் தாய் என்பதற்கும் விளக்கத்தைத் தருகிறது. ய் ஏன் வந்தது? என்று கேட்டாலே சிந்திக்க இயக்கம் உண்டாகும்.
அகத்துடன் இணைந்தியங்கும் தம்ன்மை உடையது இறுமாப்பு. ஆகவே விகுதி அழகாக அமைந்துள்ளது.
ஒருபொருட் சொற்கள்
அகங்காரம்
இறுமாப்பு
தன்மதிப்புமிகை
உட்கரணம்
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
செருக்கு
இடும்பு
சமுன்னதி
சளுக்கு
கற்பம்
காட்டிகம்
தெறிப்பு
பெத்தரிக்கம்
தற்பெருமை
மமதை
மேட்டிமை
வாமிலம் (வாயினால் மிலைந்துகொள்ளுதல்)------ முதலியவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக