சனி, 18 ஏப்ரல், 2026

சுத்தம் சொல்லாக்கம்

 பழங்காலத்தில் மனிதன் காடுகளிலும் வாழநேரிட்டது.  நகரங்கள் இன்னும் உருவாகிவிடவில்லை. அரசன்  என்ற ஆட்சியாளன் ஏற்பட்டுவிட்டானா என்றும் தெரியாத நிலை.  காட்டை அழிக்கக் கூடாது, காட்டில் போய் மரம்வெட்டினால் தண்டனை என்னும் சட்டம் எதுவும் இன்னும் உண்டாகிவிடவில்லை.

ஒரு மனிதனும் அவனுடன் ஒருவர் இருவர் இருந்த சிறு குடும்பமும்  காட்டின் சில மரங்களை வெட்டி அப்புறப் படுத்திவிட்டுக் கட்டிய வீட்டில் அவன் வாழ்ந்தான். மரங்களை இணைத்து வீடு கட்டிக்கொள்வதற்கு  ஆணி கூட இருந்திருக்காது.  ஏனென்றால் இரும்பை உருக்கி ஆணி செய்துகொள்ளும் திறன் அவனுக்கு ஏற்பட்டுவிடவில்லை. இரும்புக் காலம் இன்னும் வரவில்லை. 

அவன் என்ன உணர்ந்து கொண்டான் என்றால் அவன் வீடு கட்டி வாழ்ந்த இடம் கொஞ்ச நாட்களிலே  பலவித அழுக்கும் உள்ள இடமாகிவிட்டது.  சுற்றுமுற்றும் பார்த்தால் பசுமையான நீண்டு வளர்ந்த மரங்கள். பச்சை பசேலென்ற இலைகள். காய்கள் கனிகள் எல்லாம் இருந்தன.  பக்கங்களில் எல்லாம் தூய்மையாகவே  அழகு காட்டிய வண்ணம் இருந்தன.

இதுபோலவே, சுற்றுப்புறம் என்பது,  சுத்தமாகவே  இருந்தது.  அதனால் சுத்தம் என்ற சுற்றுப்புறத்தைக் குறிக்கவேண்டிய சொல்,  அமைப்புப் பொருள் மாறி தூய்மை என்ற பொருளை அணைத்துக்கொண்டும் இணைத்துக்கொண்டும் இலங்கியது.

சுத்தம் என்ற சொல்லுக்கு  அழுக்கின்மை என்று பொருள் உண்டாகி இன்றுவரை நின்று நிலவுகின்றது. சமஸ்கிருதம் என்பது சம ஒலியினதாகிய மொழியாதலின், அதிலும் இச்சொல் வழங்கியது.  இருமொழிகட்கும் உரிய சொல்லே இதுவாகும்.

பொருள் மாற்றம் அடைந்த சொல். தமிழிலிருந்து தோன்றிய சொல்தான். சுற்றம் என்பது உறவினரைக் குறிக்க, சுத்தம் என்பது தூய்மைப்பொருளைக் குறித்தது.  காட்டுவாணர் சொல்.  காட்டுவாழ்நர்> காட்டுவாணர்  என்பது திரிபு.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

பகிர்வுரிமை உடையது.



கருத்துகள் இல்லை: