மனம் என்ற சொல்லில் இல் என்ற உருபு வந்திணைந்தால், மனத்தில் என்று வரவேண்டும். இந்தக் குறளைப் பாருங்கள். தெய்வப் புலவர் திருவள்ளுவ நாயனார் இக்குறள் வெண்பாவை எவ்வாறு யாத்துள்ளார் என்று:-
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற
என்பது அது.
கண் என்பது உருபு. மனத்துக்கண் என்றால் மனத்தில். இது மனம்+ அத்து+ இல் என்பதுதான்.
அறம் என்பதும் உருபு ஏற்க, அறத்தில் என்று வரும். இது அறம்+ அத்து + இல் என்பதுதான். கண் என்பதை இணைப்பதாயின், முன் கூறியவாறே, அறத்துக்கண் என்று வரவேண்டும்.
அத்து என்பது சார்ந்தும் இயைந்தும் வரும் சொல். அதனால் சாரியை எனப்பட்டது. இது அது என்பது தகரம் இரட்டித்து வந்தது ஆகும். அதாவது தகர ஒற்று இரட்டித்தது. அ த்+த்+உ..
மனத்தில் என்ற சொல் பாடல்களில் இரட்டிக்காமலும் வரும். காண்க:
பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள,
உரலில் கட்டி, வாய்பொத்தி, கெஞ்சவைத்தாய் ---- கண்ணனை.
இங்கு மனதில் என்று வந்ததும் சரிதான். இப்படிக் குறுக்குவதற்கு கவிஞனுக்கு உரிமை உள்ளது. இதனைத் தொல்காப்பியமும் பிற இலக்கணங்களும் தந்துள்ளன. இது தொகுத்துக்கொள்ளும் உரிமை.,
பிர-மனும் இந்-திர-னும் மன-தில்-பொ றா-மை-கொள்-ள
இங்கு த் என்னும் வல்லொற்று நீங்கியவாறு காண்க.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக