வியாழன், 31 ஆகஸ்ட், 2023

இமயம் வென்ற தமிழரசன் ( சொல்லமைப்புடன்)

 தமிழிலக்கியத்திற் புகழப்படும்  வேண்மாள் நல்லினி  என்பவள் ஒரு  குறுநில மன்னனின் மகள்.  இக் குறுநில  ஆட்சியாளர்கள்  "வேள்" எனற பட்டத்தினர் ஆதலின்,  வேளின் மகள்  "வேண்மாள்"  எனப்பட்டாள்.  வருமொழி  " மா  "  என்ற எழுத்தின்முன்  வேள் என்ற சொல்லின்  ஈற்று " ள் "  என்பது "ண்" என்று மாறும்.  இதைப்போலவே  கேள்+ மாள்"  என்பது  கேண்மாள் என்று திரியும்.

நல்லாள்  என்பதும்  நல்லினி என்பதும் ஒருபொருளனவே.  நல்லினி  ஒரு பெண்ணின்  ( இளவரசியின்)  பெயராக வருகிறது.   நல்+ இன் + இ = நல்லினி. பெண் குழந்தைக்கு இது நல்ல தமிழ்ப்பெயர்.

இமயவரம்பன் என்ற அரசன்,  வடதிசைச் சென்று போர்புரிந்து  வெற்றிகள் பெற்று  அப்பட்டப்பெயரைச் சூட்டிக் கொண்டான்.   இமயவரம்பன் என்பது ஒரு காரணப் பட்டப்பெயர்.  இமயமலைகளை எல்லையாகக் கொண்டு ஆண்ட பெருமைக்கு உரியோன் என்பது பொருள். தமிழ்  மலையாளமாக மாறாமுன் இவன் இருந்தான்.  இது  சங்ககாலம்.

அவன் வில் கொடி இலாஞ்சனையை  இமயத்தில் ஒரு  நீர்வீழ்ச்சி  உள்ள இடத்தினருகில் பொறித்தான்.  இவ்விடம் எங்கு என்று அறியப்படவில்லை.

இலாஞ்சனை என்ற சொல்:

இல்  -   இலக்கு,  குறி  அல்லது குறியீடு,

வேலை முடிந்தபின் ஒருவன்  எங்குச் செல்கிறானோ  அது  இல்>  இல் + கு >  இலக்கு.   அகரம் சாரியை. அல்லது இடைநிலை.  அ -  அங்கு.  கு-  சேர்விடம் என்று பொருள் விரிக்கலாம்.  இல் என்பது வீடு என்றும் பொருள்.  ஆனால் இலாஞ்சனை என்ற சொல்லில் இந்தப் பொருளில்லை.

ஆகும் ,  இது இடைக்குறைந்து  ஆம்  என்றாகும்.

தன்  -  தனது.  தன் -  சன்,    இங்கு சன் என்று திரிந்தது.  த என்பது ச ஆகும்.

இல் +  ஆம் + சன் + ஐ =  இலாஞ்சனை.

இவ்வாறு பல சொற்கள் திரிந்துள்ளன.  பழைய இடுகைகளிலிருந்து மேலும்  குறித்துக்கொள்க.

தம்தம் >  சம் தம் > சந்தம்.


சந்தம் >  சத்தம்  (  வலித்தல் விகாரம் ).

மெல்லெழுத்து வல்லெழுத்தானது.

மேலும் திரிந்து  அது சப்தம்  ஆனது.

இவன் ஆரியரை வணக்கினான்.  இவர்கள் பேரிசை  ஆரியர்கள்.  இந்த இசைவாணர்கள்  திரண்டு அவனை எதிர்த்தனர்.  அவர்களை அவன் முறியடித்தான்.   ஆர் இயர் என்றால்  வாத்தியம் வாசித்தவர்கள் மட்டுமல்லர், மரியாதைக் குரியவர்களாய் முன் இருந்தவர்கள். அவர்கள் எதிர்த்தனர்.  வெள்ளைக்காரன் புனைந்துரைத்த  ஆரியர்  அல்லர்.   Aryan Invasion Theory and  Aryan Migration Theory இரண்டும்  "தியரி"கள்  (  தெரிவியல்கள்)  தாம்.  அரசன் யவனர்களையும் பிடித்து ஒடுக்கினான்.  இந்த யவனர் அங்குப்  பணி புரிந்தவர்கள்.


பேரிசை மரபின் ஆரியர் வணக்கி
நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து
நெய்தலைப் பெய்து கைபிற் கொளீஇ

நெய்யைத் தலையில் பெய்து ( ஊற்றி ) அவ்விடத்தைக் கைப்பற்றினான். பண்டை உலகில் தண்டனை வகைகள் பலவிதமாய் இருந்தன,  Read history of punishments in the ancient world and Middle Ages

இப்பாடலை இங்குக் கண்டுகொள்க

: https://sivamaalaa.blogspot.com/2014/07/blog-post_99.html


அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின்

திங்கள், 28 ஆகஸ்ட், 2023

உலகினுக்கு "சந்திராயன்" தந்த இஸ்ரோ

 அறிஞர்பலர்  ஆங்குள்ளார்  ஆர்ந்துழைக்கும்

சிறியபாட்  டாளிபலர்  நிதிநிறுவாகப்

பெருந்தொழிலோ  ரிடையேழை  மக்கள்பல்லோர்

அறிவியலார் அவணுண்டோ என்பார்க்கெல்லாம்

அறியவைக்கும் பெருவியப்பாய் அமைந்ததொன்றே

அழகுநிலா வெற்றிகொண்ட சந்திராயன்தான்;

உரியமுறைச் செயல்திறனால் அமைத்தனுப்பி

உலகுபோற்ற நிலவாய்ந்தோர்  கழகமிசுரோ.


தாமரிதின்  முயன்றறிந்த  நுணுக்கம்தன்னைத்

தாரணிக்குத் தருதற்கும் தயங்கும்பல்லோர்

யாமெவணும் காண்கின்ற  உலகில்ஒப்பில்

சாதனையே  செய்கழகம் இசுரோவென்போம்;

தாம்தமித்துத் துணையணையா  அடைந்தமேன்மைத்

தனிச்செயலார் இசுரோவின் கலைமேற்கொண்டு,

தேமதுரம் உலகுக்குத் தரும்பரதம்தான்

தேசமெனத்  திகழ்தக்கத் தீதில்லாதார்.


அரும்பொருள்:

ஆங்குள்ளார்   -  அங்கே உள்ளார்

ஆர்ந்து உழைக்கும் - நிறைவாக உழைக்கும்

நிறுவாகம் - நிர்வாகம்  ( நிறுவு,  வினைச்சொல்)

இசுரோ- இந்தியாவின் விண்வெளி ஆய்வுக் கழகம்

யாமெவணும் -  யாம் எவணும் -  யாம் எங்கும்

அறிவியலார் -  விஞ்ஞானிகள்

நிலவாய்ந்தோர்  -  சந்திரனை ஆய்வு செய்த நிறைவு  அறிவினர்

தனிச்செயலார் -  தனியாகப் பாடுபட்டுச் செய்து  முடித்தோர்

துணை அணையா -  மனம் வலிமை குன்றிப் பிறரை  நாடாத

கலை - கல்வி, ஞானம்.

பரதம்  -  பாரதம்,  இந்தியா.

பரதத்து ஓங்கிய கோடாச் செங்கோல் சோழர்தங் குலக்கொடி
என்பது மணிமேகலை, பதிகத்திலுள்ள வரி.

தேமதுரம்  - தேன்போலும்  இனிய  

சொன்மூலம் அறிக.

திகழ்தக்க - திகழ்வதற்குத் தகுந்த 

மெய்ப்பு:  பின்னர்

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

கோலுதல், கோலிவருதல். அடிகோலுதல்.

கோலுதல் என்ற சொல்லையும் அதன் பல்வேறு பொருட்சாயல்களையும் அறிந்து இன்புறுவோம்.  

பண்டைக் காலங்களில் ஒருவன் ஒன்றை இன்னொருவனிட மிருந்து  வேண்டு மென்று எண்ணினால், அதைச் சுற்றுவட்டத்தி லிருந்துகொண்டு கேட்பான். கேட்பவன் சண்டைக்கு வருகிறானா அல்லது வேறு எதுவும் ஒரு காரணத்திற்காக வருகிறானா என்று தெரியாதநிலையில் இது முதன்மையான கேள்வியாகும்   இணங்கிவாழ்தல் முதலிய ஆகுநெறிகளைக் கண்டுகொண்டபின் இந்த நிலையில் தளர்வு ஏற்பட்டிருக்கும்.  ஆகவே கோலிநிற்றல், கோலிவர நிற்றல், அடிகோலுதல் முதலிய சொற்கள் அன்று தெரிவித்த பொருளும் இன்று நாமறியும் பொருளும் சற்று வேறுபடுமென்பது உணரத்தக்கது ஆகும்.  வாங்குதல் என்ற சொல்லும் வளைந்து நின்று பெறுதல் என்றுதான் பொருள்படும்.  அடிக்கவந்தவன் தான் நிமிர்வு காட்டுவான் என்பது அறிக.  இருநூற்றாண்டுகளின் முன் ஆய்வாளர்கள் இவ்வளவு ஆழமாகச் சொற்களை உணர்ந்துகொள்ள முற்படவில்லை. "  வாங்குவில் ( தடக்கை வானவர் மருமான்" ) என்ற இலக்கியத் தொடர்,  வளைந்த வில் என்று பொருள்படுவது காண்க.   வாங்கரிவாளென்ற சொல், வளைவான அரிவாள் என்று பொருள்தருவது,  இற்றைநாளில்  வாங்கு என்ற சொல்லிலிருந்து  வளைவுக்  கருத்து ஓரளவு அகன்றுவிட்டது.   ஆகாரம்  (ஆ)  என்பது ஏகாரமாகவும் திரியும், எடுத்துக்காட்டு:  வாங்குதல் -  வேங்குதல். வா என்னும் எழுத்தும் வளைந்தே உள்ளது.  இதற்குள் நாம் செல்லவில்லை.

அணையின் மூலமாக நீர்வரவு ஒழுங்குசெய்தலை  "அணைகோலுதல்"  என்ற வழக்கு உண்டென்று தெரிகிறது.  வெள்ளத்தை எதிர்ச்செறித்தல் என்பது ஏற்கத் தக்கது என்பர்.

அடிகோலுதல் -  அடிப்படைகளைத் தயார் செய்துகொண்டு ஒன்றைத் தொடங்குதலை அடிகோலுதல் எனலாம்.

நாலு திருடர்களும் கோலிவர நின்றார்கள் எனில்,  சூழ்ந்து நின்றார்கள் என்று பொருள்.

கோலுதல் என்பதே பின் கோருதல் என்று திரிந்தது. கோருதலாவது கேட்டுப்பெற முனைதல்.  எ-டு:  சம்பளப்பாக்கியைக் கோருதல்.  ஓர் ஆடவனின் நேசத்தை விழைதலையும்  " கோருதல்"  என்னலாம் என்பது,   " பாரினிலே என் கோரிக்கையே பலித்தது இந்நாளே"  என்ற  கவி இலட்சுமணதாசின் பாடலிலிருந்து தெரிகிறது.  கோருகை என்பது கோரிக்கை என்று  திரிந்தது. வேடத்தினால் மறைந்துகொண்டு ஆடுதலை  வேடிக்கை என்றனர்.  வேய் வேடு   என்பன தொடர்புடையன.  வேடுகட்டுதல்என்பது பானைவாய் கட்டுதல்.    மனிதன்  இவ்வாறு கட்டிக்கொள்ளுதல்  வேடம் ஆனது. பறவைகளைப் பிடிப்பவன் இவ்வாறு தன்னை மறைத்துக்கொண்டு பிடிப்பதால்  அவனும் வேடன் எனப்பட்டான்.  வேய் இடு அல்லது வேய் உடு என்பனவற்றின் திரிபு இவை.  நாயை வைத்து வேட்டையாடுகிறவன்  நாயிடு அல்லது நாயுடு என்று பிறர்கூறியதும்  காண்க. மாடு வளர்த்தல் போல் நாய் பழக்குதலும் வேட்டை யாடுதலும் செய்தோர்  முதலுடையவர்கள் ஆயினர்.  வேய் இடு திரிந்து அல்லது குறுகி வேடு  ஆகும்.  டு என்பது வினை ஆக்க விகுதி என்பது முன்னர்க் கூறப்பட்டது,   கோரி இருக்கை >  கோரிக்கை எனக் குறுகும்.  வேடு இடுகை > வேடிடுகை > வேடிக்கை.    வேடு இடுக்கை > வேடிக்கை என்று திரிதல் கூடும்,  அதாவது வேடு இடுக்கிக்கொள்ளுதல்.  இடுக்கு +  ஐ > இடுக்கை.

கோலி வருதல் என்பதோ இப்போது அருகியே வழங்குகிறது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின்.




சனி, 26 ஆகஸ்ட், 2023

தம்பற்றும் சம்பத்தும்

 தம்  பற்று என்பதே  பின்னர் திரிந்து சம்பத்து என்று மாறினது.   த என்ற எழுத்தும் அதன் வருக்கங்களும்  (  என்றால் சா, சி, சீ, சு என அந்த வரிசையின் இறுதி வரை )  ச என்றும் வருக்கங்களாகவும் திரியும்.   இது உண்மையில் ஒரு சிற்றூர்ச் சொல்.   "ஆவத்து சம்பத்து" என்பார்கள்.  ( அதாவது  ஆபற்றும் தம்பற்று தான்.)  பெருவாரியான கிராமத்துச் சொற்கள் சம்ஸ்கிருதமாயின.  கிராமம் என்ற சொல்லே கமம் என்பதன் திரிபு.   

கம்போங்  என்ற சொல்லில் கம் இருக்கிறது,  கம்போங் என்ற  சொல்லுக்குச் சிற்றூர் என்று பொருள்  ( மலாய்).   பானுவா அல்லது வானுவா என்பது சில  கடலோடிகள் மொழிகளில் வழங்கும்.  தானா என்பது வானுவா என்பதனுடன் தொடர்பினதா என்று யாம் ஆராயவில்லை. நிற்க.

இலக்கிய வழக்குப் பெறாத ஊர்வழக்குகளை ( கிராமத்துச் சொற்களை )  ஈர்த்துத் தன்னுள் வைத்துக் காப்பாற்றியதற்காக சமஸ்கிருதத்துக்கு நன்றி செலுத்துவோம்.  பூசாரிகளும் இச்சொற்களைப் பயன்படுத்தினர் என்பதுதான் அற்றை நிகழ்வாகும்.

ஆ பற்று என்பது  ஆநிரை பற்றுதலினால் ஏற்பட்ட சொல்.    எதிரிகள் வந்து ஆக்களைப் பற்றினால் போர் வரும் என்றும் அது பேரிடர் (  ஆபத்து , இற்றைநாள் பொருளில் )  என்றும் பொருள்.

வாழ்நாளில் நாம் பற்றிவைத்திருப்பனவே  சம்பத்து, ( கைப்பற்றுதல் என்பதில் பற்றுதல் என்பதன் பொருளை உன்னுக )  அதாவது இவையே  தம்பற்று அல்லது தம்பத்து அல்லது சம்பத்து.   தனி - சனி முதலிய தகர சகரத் திரிபுகளைக் கருத்தில் கொள்க.  தங்கு - சங்கு,  அம் விகுதி பெற்றுச் சங்கம்  ஆனது காண்க.  அரசனின் ஆதரவில் தங்கி அங்குக் கவி பாடிய இடமே சங்கம் ஆனது.  இன்னும் பல நம் பழைய இடுகைகளில் காண்க.

சமஸ்கிருதம் என்பது வெளியார் கொணர்ந்த மொழியன்று,  நம் பூசாரிகள் பயன்படுத்திய மொழி,  இம்மொழியில் இராமகாதை பாடிய புலவர் வால்மிகி ஓர் இந்தியப் புலவர்.  பாணினி பெயரின் அடிச்சொல் பாண் என்பது..  எல்லோரும் இந்தியரே. சமஸ்கிருதத்தில் வெளியார் சொல் இருத்தலால் வெளிநாட்டு மொழி ஆகிவிடாது.   ஆரியர் என்பது ஓர் இனப்பெயர் அன்று. அப்படி இட்லர் கருதி ,  யூதர் பலரைக் கொன்றதுதான் ஆரியப் படை எடுப்பு, ஆரியப் புலம்பெயர்வு ஆகிய தெரிவியல்களின் தொடர்பில் ஏற்பட்ட கோர நிகழ்வுகள். ஒரு தெரிவியலை ( தியரி)  வரலாறு என்பது முட்டாள்தனம்.  இதைப் பற்றி முன்னர் எழுதியவற்றை அறிக.

த என்பதும் வருக்கமும்  ச என்பதும் வருக்கமும் ஆகும் (திரியும்).  அவ்வாறே சம்பத்து என்ற சொல் சிற்றூர்களில் உண்டான சொல்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்



வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

வேதம் என்ற சொல்லின் தொடக்கம்.

 வேதம் என்ற சொல் தமிழில் வழக்குப் பெற்ற சொல்.  

வேதம் நான்கினும் மெய்ப்பொருள்  ஆவது

நாதன் நாமம் நமச்சி வாயவே

திருஞானசம்பந்தர்.

வேதம் நிறைந்த தமிழ்நாடு----  நல்ல

வீரம் செறிந்த தமிழ்நாடு.

பாரதியார்.

இவை நீங்கள் அறிந்த  சொல்லாட்சிகள்.  இவை போல்வன வழக்கு என்ப்படும்.  வழக்கு என்றால் இயல்பான சொற்பயன்பாடுகள்.  தொல்காப்பியம் இயற்றப்பட்ட காலத்து, மூன்று வேதங்களே இருந்தன என்றும் நாலாவது இன்னும் இயற்றப்படவில்லை என்றும் கூறுவதுண்டு (நச்சினார்க்கினியர்) . நாலை முன்வைத்து நூல்கள் எதையும் எண்ணுதல் முற்காலத்து முறை. எடுத்துக்காட்டு:  அகநானூறு, புறநானூறு, களவழிநாற்பது,  நாலடியார்.

 வேதம்:  இதற்குத்  தனித்தமிழில் சரியான சொல் எது என்றால்,  மறை என்று  சொன்னால்  அது ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இருக்கும்.   "நான்மறை"  ( நால் + மறை, இங்கு நிலைமொழி இறுதியில் -- ஈற்றில்  ஒற்று  வர,  வருமொழி மகரம்  இயல்பாய் நிற்க,  லகர ஒற்று  னகர ஒற்றாக மாறும் என்பது இலக்கணம்.)  மகரம் வர 0னகர மாகும் என்பது மட்டுமன்று,  ககரம் (க) வந்தாலும் லகர ஒற்று ( ஒற்று என்றால் மெய் எழுத்து ) 0னகர ஒற்றாகவே மாறும். இதற்கு எடுத்துக்காட்டு,  நால்+ கு =  நான்கு  என்பது காண்க.  எழுத்துமொழியில் வழங்கும் நான்கு ,   பேச்சுமொழியில் நாலு என்று வழங்குகிறது.

பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டினருள் தமிழறிந்தோர்,  "நாலு" என்பது கொச்சை என்றனர். கொச்சை என்றால் திருந்தாத பேச்சு,  இழிசொல் என்று பொருள் கூறுவர்.  நாலு என்பது திருந்த வேண்டியது  என்றோ,  இழிவு உடையது என்றோ யாம் நினைக்கவில்லை. சொல்லின் ஆய்வுக்கு இத்தகைய கருதுகோள் உதவுவதில்லை.  ஆய்வாளன் என்பவன், எல்லா வடிவங்களையும் கருத்தில் கொள்ளவேண்டும்.  நாலு  நான்கு என்பவற்றில் எது முதலாவது என்றும் முடிவு செய்யவேண்டும். நாலு என்பது எப்போது நடப்பில் வந்தது என்பதை அறியவேண்டும்.  நான்கு என்பது எப்போது வந்தது என்று அறியவேண்டும். அறிந்து முடிவு செய்யவேண்டும், ஆனால் அறிந்தவை அனைத்தும் வெளியில் சொல்லவேண்டும் என்று எதுவும் கட்டாயம் இல்லை, தேவை என்று கருதுவதை மட்டும் வெளியில்  கொணர்ந்தால் போதுமானதாகும். திருந்திய வடிவம் என்பது பின் வருவது,  திருந்தாத வடிவம் என்பது  முன் இருப்பது.  இன்னும் சொல்லப்போனால், ஒன்றைத் திருந்தாத வடிவம் என்பதே  சரியான குறிப்பு அன்று.  எது திருந்தியது  எது திருந்தாதது என்பது ஒருவனின் சொந்தக் கருத்து மட்டுமே.   இவற்றைப்  பேச்சுமொழிச் சொல், எழுத்துமொழிச் சொல் என்பது இன்னும் சரியான வருணனை ஆகும்.  நான்கு என்ற சொல் அமைந்த காலை,  முன்னிருந்தது நாலு என்ற வடிவம்தான். அது மக்கள் வடிவம் ஆகும்.  அதைத்தான் தொல்காப்பியம் வழக்கு என்று சொல்லும்.  அப்புறம் செய்யுள் என்பதில் எந்த வடிவம் உள்ளது என்று கண்டுகொண்டால்,  நான்கு என்பது இருந்திருக்கலாம்.   "நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி"  என்பது பழமொழி.   நாலு என்பது ஒப்புக்கொள்ளக்கூடியதும் முந்துவடிவமும் ஆகும்.  அடிச்சொல், இறுதி உகரம் நீக்க, நால் என்பதே.  மன்னராட்சி நீண்டகாலம் நடைபெற்றமையால், நாலு என்பது போலும் வடிவங்களை அப்போதிருந்த அரசவைக் கல்வியோர், ஏற்புடையனவல்ல என்று கருதியிருந்தனராய் முடிபுறுத்தல் உண்மைக்கு உடன்பாடு ஆகும்.  பலவும் அறிந்தவர் என்பதற்கு   " அவர் நாலும் அறிந்தவர்"  என்ற ஊரார் வாக்கியத்தில்,  நாலும் என்பது இப்பொருளதே.  நாலுமென்பது நாலடியாரைக் குறிக்குமென்பது இரண்டாவது பொருட்காணல் ஆகலாம்.  இலக்கியங்களை அறியாதார் பேச்சில்  இஃது பொருளாகமாட்டாமை உணர்க. பேசுவோர் என்ன சொல்கிறார் என்பதும் அறியவேண்டும்.

ஒரு சொல்லின் பொருளை அறிய முற்படுங்காலை,  எந்த மொழியில் வினைச்சொல் உளதோ, அந்தச் சொல் அம்மொழிக்கு உரியது என்று முடிவுசெயல் வேண்டுமென்பது மேலைநாட்டு ஆய்வாளர் கருத்தாகும்.இக்கருத்து ஏற்புடையது. பெரும்பால் சொற்கள் வினையில் தோன்றினவாயிருக்க, இது சிறப்பான முடிவாம்.  இதற்கு,  வினை எது, எங்கு உள்ளது என்பதை அறியவேண்டும்.  வேதம் என்பது  ஓர் அறிவுநூல்,  அறியார்க்கு அறியத்தக்கதை கொணர்ந்துதரும் நூல்.   அதைப் பாடியவர்களில் பலரும் உள்ளனர்.  பாடலின்பொருளை அறிந்தபின் இதைப் பாடியோன் வாயிற்பாடகனாய் இருத்தல் கூடும் என்று கூறுதலும் இன்ன பிற கூறுதலும் கூடும்.  ஒரு முனிவனாய் இருந்திருப்பான் என்று கூறுதலும் கூடும்.  இவற்றுள் பாடியவர் பிராமணரா,  அல்லரா என்று குறிப்பு எதுவும் அறியப்படவில்லை.  இப்போது நிலவும் எந்தச் சாதியும் அதில்  குறிக்கப்படவில்லை,  எடுத்துக்காட்டு : இருக்கு  ( ரிக்)  வேதம்.  வேதங்களைப் பிராமணர் உண்டாக்கினர் என்பதற்கு அதிலேதும் இசைந்த செய்தி இல்லை.

வேதம் வித் என்ற சொல்லினின்று வந்தது என்பர்.  வித்துதல் என்ற வினைச்சொல் தமிழ் ஆகும்.  இதன் வெட்டுண்ட வடிவமே வித்  (வித்து).  விதைத்தல் எனின், இந்நூல் மேற்கொண்ட   முயற்சி  அதுவே ஆகும்.   அறிவை விதைத்தல்.  ஆனால்  மறைமலைஅடிகளார்,  வேய்தல் என்ற சொல்லினின்று சொல் ஏற்பட்டது என்றார்.   வேய்+ து + அம்,  இதில் ய கர ஒற்று மறைய,  வே து அம் எனவாகி,  வேதமானது என்றார்.   இதுவும்  ஏற்புடைமை கொண்டதே ஆகும்.   இஃது ஓர் இருபிறப்பிச் சொல் என்று முடிவு செய்யலாம்.  இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடி உள்ள சொற்கள் பல.  Bards என்று குறிக்கப்பட்ட  சில வேதபாடகர்கள் உண்மையில் பாணர்களே.   பாணர்கள் இந்தியாவில் பல இடங்களிலும் இருந்தனர் என்பதற்குச் சான்றுகள் உளவென்று ஆய்வறிஞர் சிலர் கூறியுள்ளனர். இவர்கள் அரசர் தந்த பட்டங்கள் பெற்றுப் பல வேறு சாதிப்பெயரினராய் மாறிவிட்டனர். போர்களின் இயல்பான விளைவுகளில் இத்தகு குமுக மாற்றங்களும் அடங்கும்.  எதிரிப் படைஞர்களால் சிறுமைப்பட்ட பெண்கள் பெற்ற குழந்தைகள் வேறு குலப்பெயர்கள் தழுவுதல் உலக வரலாற்றில் இயல்பு ஆகும்.  புலம்பெயர்வும் இயல்பே  ஆகும். இற்றைச் சாதிப்பெயர்கள் பல வேதங்களில் இல்லை.

வைசியர் என்ற சொல்,  வாய்+ இச்சி + அர் > வாயிசியர் > வைசியர் என்றும் அமைக்கப்படுதற் குரியது. இச்சி இசி ஆனது தொகுத்தல் அல்லது இடைக்குறை. வைசியர் எனின் வயிற்றுணவு விரும்பி விளைச்சல்  பொருட்களை வாங்கி வணிகம் செய்தோர் என்பதாம்.   போதிய பூவைசியத்தின் பின்புதான் தனவைசியம் தோன்றக்கூடும்.  தாமும் உண்டு மற்றோருக்கும் உணவு வியனீகம் செய்தோர்.  ( வியன் - விரிவு. ஈகு - தருதல். அம் விகுதி).  வியனுலகு , குறள்:  விரிந்த உலகு ). distribution.

வாய் என்பது இடம் என்று பொருள்தரும்  ஆதலின்,  இடங்களைக் கையகப் படுத்துதல்  வணிகத்துக்கு இன்றியமையாதது  ஆகும்.  இது மேலும் பொருத்தமாகும்.  வைசியர் நிலமுடையோர்.

வயிறு என்ற சொல் வாயின் இறுதியில் இருப்பது என்ற சொற்பொருள் உடையது.  வாய்-  உணவுகொள்வழி, இறு - இறுதி என அறிக.  வாய் என்ற நெடின்முதல்,  வயி என்றானது கண்டுதெளிக.  இதுவேபோல் வாயிசியர் என்பது வைசியர் எனவாகும்.

 மக்களிடைப் பிரிவுகள் அமைத்தோர் அரசர்கள்.  இதன் நோக்கம்,  ஆள்தொழில் எளிதாக்கம் ஆகும்.

இவ்வாறு வேதம், வைசியம் ஆய சொற்களின் பிற பரிமாணங்கள் அறிக.


குறிப்புகள்

மேலும் அறிய:

1. இடைநின்ற யகர ஒற்று மறைதல்: 

https://sivamaalaa.blogspot.com/2017/03/blog-post_4.html

2  வேதவியாசன்

https://sivamaalaa.blogspot.com/2017/01/blog-post_7.html

3  வேதம்,  வேவு

https://sivamaalaa.blogspot.com/2016/04/blog-post_16.html


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

எந்த உத்தரவும் மேற்கொண்டு செய்யும் படை (கொந்தக்குலம்)

 பாண்டிய மன்னனின் ஆட்சியின்போது,  அவ்வப்போது ஏற்படும் சூழல்களுக்கு ஏற்ப,  படைஞர்களை  சிறப்பு வேலைகளில் ஈடுபடுத்த வேண்டிய தேவை, மன்னனுக்கு ஏற்பட்டது.  அப்போது போர் தொடுத்துமிருக்கலாம்,  போரில்லாத வேளையாகவும் இருக்கலாம்.  இப்படையினர் எந்த வேலையையும் ஏற்றுக்கொண்டு செவ்வனே செய்து முடித்தனர்.

இத்தகையோர், கொள்ளுந்தகைக் குலத்தோர் என்று குறிக்கப்பட்டனர். இவர்கள் ஓர் ஊரில் நிறுத்தப்பட்டனர்.

கொள்ளுந்தகைக் குலம் என்பது நாளடைவில் கொந்தக்குலம்  என்று திரிந்தது.

கொள்ளுதல் என்றது, எதுவானாலும்  ஏற்றுக்கொள்ளுதல் எனற்பொருட்டு.

கொள்ளுந்தகை >  கொந்தகை

கொ(ள்ளு)  ந்தகை > கொ(ளு)ந்தகை  > கொந்தகை.   இடைக்குறைச் சொல்.

இங்கு " ள்ளு" என்ற ஈரெழுத்துகள் மறைந்தன.

கொந்தக் குலம்

அறிக மகிழ்க,

மெய்ப்பு பின்னர்

மொழி என்ற பொருளுடைய இன்னொரு சொல்.

 வாணி  என்பதற்குப் பல பொருட்கள் உள்ளன.  அவற்றைக் கண்டுவிட்டு மேல் செல்லுவோம்:

1  அம்பு என்னும் பொருள்.  இஃது உண்மையில் பாணம் என்ற சொல்லுடன் தொடர்புடையது.   பாணம் -  வாணி என்று திரிவது  ஆகும்.   அம் விகுதி ஈற்றில் பெற்று முடியும் பாண் என்ற அடிச்சொல்,  வாண் என்றும் திரிதலுடையது ஆகும். வாணென்று திரிந்து அம் விகுதியைப் பெறாமல் இ என்னும் இறுதியைப் பெற்று வாணி என்று முடிகிறது,  இதற்கு ஒப்பு  நோக்க,  பகு -  வகு என்ற சொற்களைப் பாருங்கள்.  இன்னும் ஒரு   காட்டு வேண்டின்  பண்டி -  வண்டி என்பதும்  கொள்க. பண்டி எனற்பாலது பாண்டி என்றும் திரிந்து வண்டியையே குறிக்கும்  எனினும் இந்தச் சொல்வடிவம் இப்பொருளில் தற்காலத்து  எழுத்தாளர்களால் எழுதப்படுவது இல்லை.  இரண்டு ஈறுகளிலும அம், இ என்பன களைந்துவிட்டு, பாண் -  வாண்  என  அடிகளை மட்டும் ஒப்பு நோக்குக.


2  ஓமம் என்ற பொருள்.    இக்காலத்தில் இப்பொருளும் வழக்கில் இல்லை. இது யவணி என்ற சொல்லின் திரிபு என்பர்.


3  பாணி என்ற சொல்லும் திரிந்து வாணி என்றாகும்.  பாணி என்பது  நீரைக் குறிக்கும்.  நாம் புழங்கும் அல்லது மழையாகப் பெய்யும் நீர்,  பல்  துளிகள் ஆகும்.  பல்நீர் > பன்னீர்>  பனி >  பாணி என்னும் திரிபில் வருவது இச்சொல்.  பஃறுளி  என்னும் யாற்றுப் பெயரை  நினைவு கூர்க.  பாணி : இதுவும்   திரிசொல்.

4  வாணி என்பது கல்லுப்பையும் குறிக்கும்.

இறுதியாக,  வாணி என்பது  சொல், மொழி ,  பேச்சு என்ற மூன்றையும் குறிப்பதுடன்,  கலைமகள் என்றும் பொருள்தரக் கூடிய சொல் ஆகும்.  இப்பொருளில் இன்றும் இச்சொல்  வழங்கி வருகிறது.

இங்கு கூறப்பட்ட இறுதி மூன்று பொருளும்  வாய் என்பதிலிருந்து தோன்றியுள்ளது.   வாயில்  அல்லது அவண் உள்ள நாவில் நிற்பன இம்மூன்றும்..  வாய் +  நி >  வாணி என்று இச்சொல் மருவி அமைந்துள்ளது,  நி என்பது நிலை என்பதன் கடைக்குறையாகும்.   வாய்நி >  வாணி என்று உணர்க.  இது  பழம்நீ >  பழனி  என்பதுபோலும்  ஒரு திரிபு,

அறிக மகிழ்க

,மெய்ப்பு  பின்னர்.



புதன், 16 ஆகஸ்ட், 2023

ஆங்கிலக் கவிதைகளில் நாட்டம்



 சரண் ஆங்கிலக் கவி எழுதும் ஆர்வம் உடையவர்.  நம் வலைத்தளத்துக்கும் சில கவிதைகளை  அனுப்பியுள்ளார்.





செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

விஞ்சையர் நீங்கள் காணாமல் வாழ்கிறவர்கள். சேக்கிழார் பாட்டு.

விஞ்சையர்  என்பது பதினெட்டுக் கணங்களுள் அடங்குவோரைக் குறிப்பது என்பது நாம் மாணவர்களாய் இருக்கையில் அறிந்துகொண்டதாகும்.  மனிதர்களாய் வாழ்ந்தவர்களிற் சிலர் வாழ்வாங்கு வாழ்ந்து, பல்புகழும் பெற்று,  மக்களால் இன்னும் எண்ணிப் போற்றப்படுபவர்களாய் உள்ளனர், அவர்கள் வாய்மொழி வரலாறுகளில் அறியப்பட்டாலும்  நூல்களால் அறியப்பட்டாலும்  கணங்களேயாவர்.  சிறப்பான வேளைகளில் அவர்கள் வீணை இசைபோலும் மீட்ட,  பற்றன்  கேட்டு இன்புறுகிறான். கனவிலோ அல்லது  விழித்துக்கொண்டிருக்கும் போதோ இவ்விசை கேட்கிறது.  இது எப்படி என்று ஆராய்வது வீண்வேலை. இத்தகையவை மனவுணர்ச்சியின் பால் எழுவன ஆகும்.

கணம் ( பன்மை: கணங்கள்)  என்ற சொல்  கண் என்பதிலிருந்து வருகிறது. உணர்ச்சி இல்லாதவனுக்குத் தெரியாதது,  உணர்ச்சி அணைகடந்து நின்றவனுக்குத் தெரிகிறது. கண்+ அம் =  கணம்.  கண்ணம் என்று வந்து இடையில் ணகர ஒற்று மறைந்து இடைக்குறையானது என்று கூறினும் இலக்கணம் பொருந்துவதே. ணகர ஒற்று இரட்டிக்கவேண்டும் என்று கவலைகொள்ளும் இலக்கணப் புலமை மிக்கவருக்கு அது விடையாகலாம்.  கண் என்பது இடம் என்றும் பொருள்படுமாதலின்,  சிலவிடங்களில் தோன்றி மறைவதாக அறியப்பட்ட உருவங்கட்கும்  இது பெயராய் இருத்தல் கூடுமெனல் அறியற்பாலதாகும்.

கண் என்பது ஒரு வேற்றுமை உருபும் ஆகும்.  இதன் பொருள்   "இல்" (வேற்றுமை உருபு)    என்பதை ஒப்பதே.  வீட்டின்கண் பந்து விளையாடாதே  என்ற வாக்கியத்தில் கண் என்பது இடப்பொருளது,  " மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்"  என்று வரும் குறளில்  கண் என்ற சொல்,  உருபு,  இடப்பொருள் சுட்டியது.

இப்போது விஞ்சை என்னும் சொல்லின் தோற்றத்தை அறிவோம்.

செய் என்ற சொல் நிலத்தைக் குறிப்பது.  நன்செய், புன்செய் என்ற சொற்களில் இந்த வழக்குகளை அறிந்துகொள்ளலாம்.  இது நஞ்சை,  புஞ்சை என்றும் திரியும்,  பின்வரு இரு சொற்களும் பிசகுகள் அல்ல,  திரிபுகளே.  காவிரி ஆற்றால் தண்மை செய்யப்பட்ட தஞ்சை மாவட்டமும்  தண்செய்> ( தஞ்செய்)> தஞ்சை  என்றே  உருவானதாகும்.  

விண்ணில் நிலம் இருக்கிறதா?  நிலவிலிருந்து மண் கொண்டுவரப்பட்டு அதில் செடி முளைக்கவைத்திருக்கிறார்கள் என்பது தற்போதையச் செய்தி ஆகும்.  பூமிக்கு அப்பாலும் மண்ணும் இருக்கலாம்.  அதில் மேடு பள்ளங்களும் இருக்கலாம்.  ஆகவே,  விண்செய்>  விஞ்சை என்பதும் முறைப்படி அமைந்த திரிபுச்சொல்லே.  இறந்தவர்கள் மேலே சென்றுவிட்டதாகக் குறிப்பிடுவது எல்லா இனத்தவர்களிடமும்  ( சீனர், மலாயர், தமிழர், யப்பானியர், ஆங்கிலர் என எவரிடமும்) காணப்படுவதே.  விஞ்சையர் என்பது பெரும்பான்மையர் வழக்கில் தோன்றிய வழக்குச் சொல் ஆகும்.

விண்ணில் உள்ள கிரகங்களிலும் நிலம் அல்லது மண் இருக்கலாம்.  சந்திரனில் உண்டு . (தண்திறன்>  சந்திரன்,   இது தகர சகரத் திரிபு.)  [ தண்திரள் > சந்திரன் எனினுமாகும்].

சில சொற்கள் நம்பிக்கையின் காரணமாக ஏற்பட்டுள்ளன.  மனம் என்ற ஓர் உறுப்பு உடலில்  காணப்படவில்லை,  இருதயம் அல்லது இதயம் என்பது இரத்தத்தை  ( அரத்தத்தைக்) செயலாக்கம் புரியும் கருவியுறுப்பு,  மனவுணர்வினால் எவ்வுறுப்பும் பாதிப்பு (தாக்கம்)  அடையலாம் எனினும்  உணர்வு என்பது மூளையிலிருந்து வெளிப்படுவதாகக் கூறுகின்றனர்,  ஆயினும் மனம் என்பது மூளையன்று,   மூளையென்பது ஒரு குழைவுறுப்பு,  விஞ்சையர் என்பது மறைந்து நம்மால் தொழுதகு மேன்மக்கள் என்று அறியப்படுவோரைக் குறிக்கும் சொல்லாகும்,  விண்செய்+ அர் என்பது உயர்ந்த செயலுக்கு உரியோராய் இருந்து மறைந்தவர்கள் என்றும் சொல்லலாம்,

உலகின் பொருள்கள் மனிதனின் நம்பிக்கையினால் இருப்பன இல்லாதன என்று கொள்ள இயலாது,  விண்செய்யர்  அல்லது விஞ்சையர் - தமிழில் உள்ள சொல்.   திரிசொல்.  இலக்கணம் அவ்வளவே.

மேன்மை நான்மறை நாதமும் விஞ்சையர்

கான வீணையின் ஓசையும் காரெதிர்

தான மாக்கள் முழக்கமும் தாவில்சீர்

வான துந்துபி ஆர்ப்பும் மருங்கெலாம். 

----------சேக்கிழார் பெருமானின் 
12 நூற்றாண்டு   பாடல்

இயற்கை  நியதிகளைக் கடந்து நின்றவர்கள் என்றும் இச்சொல்லை விளக்கலாம்.  இதன் காரணம்,  விஞ்சு  என்றால் மிஞ்சு  என்று பொருள். இருசொற்களும் ஒன்றுக்கொன்று போலி.  இவற்றுள் மிஞ்சு என்பது முதலாக இருக்கக் கூடும்.  அதாவது அதிகமாக அல்லது கடந்து நிற்றல் என்பது பொருள்.  விஞ்சு >  விஞ்சு ஐ >  விஞ்சை,  தொழிற்பெயர்.    அர் -  அவர்கள்.  இறந்துவிட்டால் அன்னோரை நாம் பின்னர் காண்கிலம்.  அவர்கள் இல்லாமல் ஆகிவிட்டனர்..  உண்மையில் அவர்கள் நம் கண்களுக்குத் தெரியாத வேறொரு நிலையில்  நிலவுகின்றனர் என்பதும்  நாம் அவர்களைக் காண இயலாததற்குக் காரணம்,  அவர்களைக் காணும் ஆற்றல் நம் கண்களுக்கு இல்லையாய் விட்டது என்பதும்தாம்..   நம் கண்களுக்குத் தெரியாத எத்தனையோ எத்தனையோ உயிரினங்கள் உள்ளன.  கோவிட் கிருமி அல்லது நுண்மியை நம்மால் காணமுடிவதில்லை.  இப்போது அதைக் காணும் ஆற்றலுள்ள கருவியைக் கண்டுபிடித்த பின்புதானே அறிவியலார் கண்டுகொள்கின்றனர்.  அதுபோல் விஞ்சையரைக் காணும்  விஞ்சுவிழியைக் கண்டுபிடித்து அதைக்கொண்டு பார்த்தால்  ஒருவேளை முடியலாம்.  அவர்கள் வாழ்வது நாம் அறியாப் பரநிலையில்.  ஆகையால் விஞ்சையர் என்பது இதையும்கூட விளக்கித் தரும் ஓரழகிய தமிழ்ச்சொல் ஆகும்.   The Chariot of the Gods  என்னும் அழகிய ஆங்கில நூலை வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள். They are living in a different plane of existence.  That is the truth.

விஞ்சையர் என்பது விளக்கப்பட்டது மேல்

இப்போது பாடலின் அழகில் தொடர்ந்து  ஈடுபடுவோம்.

மேன்மை  நான்மறை நாதமும்  ----  மேலான  அல்லது   மிகச்சிறந்த நான்கு  மறைகளை  ஓதுவார்தம் நாவிலெழும்  இனிய   ஒலியுடன்,
கான வீணை ஓசையும் -  இசைதரும்  வீணையின் ஒலியும்,  கார் எதிர் தான மாக்கள் முழக்கமும்-  கார் காலத்தை எதிர்கொண்டு பின் விளைச்சல் கண்டு  தானம் அல்லது கொடைகள் செய்யும்  உழவப் பெருமக்களின்  எழுச்சி ஒலிகளும், தாவில்சீர் வான துந்துபி ஆர்ப்பும்   ----குற்றமற்ற  வானிலெழும்  பெருமதங்கத்தின் சத்தமும்   மருங்கெலாம் -  பக்கங்களில் எங்கும் கேட்கும்,.

----என்கின்றார் இவ் இறைநலப் பெருங்கவியரசு.


அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்.

சில புள்ளிகள் தாமே தோன்றுகின்றன.
இவை நீக்கப்பட்டன. மீண்டும் தோன்றக் கூடும்.
கவனமுடன் வாசிக்கவும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
,
இடுகை முற்றிய  பின்னர்,  என்-கின்ற  என்ற சொல் என்பது  எங்கின்ற என்று
மாறிவிடுகிறது.   

இனி என்-கின்ற  என்று  'தட்டெழுதினாலே'  முடியும்போல் தெரிகிறது!!

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

சொந்தம் என்பதன் அடிச்சொல் சொம் எவ்வாறு தோன்றியது.

 சுதந்திரம்  என்றால் சொந்தத் திறனால் இயங்குதல் என்பதே பொருள். இதனை 23.12.15ல் விளக்கியிருந்தோம்.  அப்போது சொம் என்ற அடிச்சொல்லை பின்னொரு கால்  விளக்குவதாக எழுதியிருந்தோம்.  முன் எழுதிய இடுகை இங்கு உள்ளது: 

https://sivamaalaa.blogspot.com/2015/12/blog-post_22.html   

உண்மையில்  உலகில் மனிதன் இருக்கிறான்,  அவனருகே ஒர் நிலமும் இருக்கிறது.  யாரும் இது எனது  என்று சொல்லாவிட்டால் அது யாருக்கும் சொந்தம் என்று சொல்ல இயலாமல் போய்விடும். ஒன்று அவன் சொல்லவேண்டும்;  இல்லையேல் வேறு யாராவது  சொல்லவேண்டும்.  இப்போதெல்லாம் இந்தச் சொல்லும் வேலையை நில இயக்ககம் அல்லது பதிவகம் சொல்கிறது. அதுவும் ஒரு சொல் அல்லது சொலவு ( சொல்லுதல் ) தான்.  Statements made in a document.. It is also like saying to another.

சொந்தம் என்ற சொல்லில் உள்ள சொ என்பது உண்மையில்  மகர ஒற்றுக் குறைந்த ஒரு சொல்லாகும்.  இதைக் கடைக்குறை என்பர்.  

சேனை என்ற சொல்லும்  சேர் என்பது கடைக்குறைந்து,  சே என்றாகி, (இ)ன்
+ஐ என்று  விகுதி பெற்று சொல்லானது.  தமிழன் பலகாலமாக சேனைகளை வைத்து நிறுவகித்தவன் ஆவான். சேனை என்று பொருள்படும் பல சொற்கள் தமிழில் உளவாதல் வியப்புக்குரியதன்று. ( இ )ன் என்பது இடைநிலை.. இன்னொரு சொல்:  சேர்மித்தல்== >சேமித்தல்.

சொ+ உம் என்பதே சொம் என்ற பழந்தமிழ்ச் சொல்லின் பிறப்புவிளக்கம்.  இச்சொல்  பழந்தமிழில் சொம் என்றே காணப்படுகிறது. இந்த நிலம் அல்லது பொருள் "உமது என்று சொல்கிறீர்" என்பதே அது. நீர் உமது என்று தம் பொருளையே சொல்லலாம்.  சொ(ல்) + (  உ) ம்  + தம்.  
  நிலம் உமது என்று தாமே சொல்கிறீர்.  வேறு யாரும் சொல்லவில்லை.  ஆகவே உமது என்று ஒத்துக்கொள்வோம்.   No contestants. So yours.

நிலகளரி அல்லது நிலப்பதிவகம் என்பது பிற்காலத்து ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட உடைமைவழக்குகள்  எழுந்து எல்லாமும்  நீதிமன்றக் கூடையில் தேங்கிவிடாமல் இருப்பதற்கான ஓர் எளிதான வழியமைப்பே  ஆகும்.  வேறு இணை அல்லது துணைக் காரணங்களும் இருக்கலாம் எனினும் அவை இங்கு வேண்டாதவை. உடைமை வழக்குகள் பல இவ்வாறு தீர்க்கப்படுகின்றன.

அரசன் செய்துவந்த வேலையை இன்றை அரசுகள் செய்கின்றன.

சொம் என்பதையும் சொம்தம் ( சொந்தம்) என்பதன் பொருளையும் இதன் மூலம் அறியலாம்.  பண்டைத் தமிழரின் சொல்லாக்க நெறியையும் அறியலாம்..  தமிழுக்கு முன் இருந்த மொழிகளிடம் இதற்கான சொல் இருந்திருந்தால், தமிழ் எளிதில் அதையே போற்றிக்கொண்டிருக்கலாம்.  முன் மொழிகள் திருந்தியவையாய் இல்லாமையால், தமிழ் பண்பட்ட இலக்கியத்துடனும் அதற்குரிய இலக்கணத்துடனும் தன்னை அமைத்துக்கொண்டு பயணித்தது என்பதறிக.  தமிழில் காணப்படும் சொற்கள் சில ஆப்ரிக்க மொழிகளிலும்  ஆஸ்த்ரேலியப் பழங்குடிகளிடமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது.

சொம் என்பதும் சொந்தம் என்ற சொல்லும் சொல் என்பதனுடன் தொடர்புடைய சொல். அதன் அமைப்பை  மேல் விளக்கியுள்ளோம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

Visitors please refrain from making changes or inserting dots into the text.

சனி, 12 ஆகஸ்ட், 2023

சுமங்கலிப் பூசை தயார்நிலை ( ஒரு பகுதி)

 








இன்னும் படங்கள் - பின் வெளியிடப்படும்


திறம் என்னும் பின்னொட்டு வருமிடங்கள்

 திறமென்பது ஒரு தனிச்சொல்  ஆகும்.  அதற்கென்று ஒரு பொருளிருக்கிறது.  ஆனால் அன்பு என்ற சொல்லில்  ~பு என்பது ஒரு தனிச்சொல்லாய் இல்லை, அதற்குக் காரணம் அதற்குத் தனிப்பொருளில்லை.

~பு என்பது நாம் கற்பனைசெய்யவியலாத மிகப்பழைய காலத்தில்,  மொழியில்,  பெரும்பாலும் ஓரெழுத்து ஒருசொல் முறையில் வழங்கிய காலத்தில்,  ( அப்போது எழுத்துகள் உண்டாகிவிட்டனவா என்பதும் ஆய்வுக்குரியது, இல்லை எனலே பொருந்துவது)  ஒரு பொருளுடைய சொல்லாய் வழங்கி இருக்கக்கூடும்.  இத்தகைய இருட்கால வரலாறுகளை அறிந்த யாரும் இன்றில்லை யாதலால்,  இது தெரியாது என்று தான் சொல்லவேண்டும். என்றாலும்  பின், புல் என்ற மெய்யொடும் கூடிய  உயிரும் - உயிர்மெய்யும் - இணைந்த சொற்கள் தமிழில் இன்றும் கிடைப்பன வாதலின்,  பு என்ற ஒரு சொல் இருந்திருக்கவேண்மென்றே தோன்றுகிறது.  அவ்வாறாயின் அஃது நாளடைவில் பொருளிழந்து ஒரு வெற்று விகுதியாகிவிட்டது என்று சொல்லுதல் ஏற்புடையதே. ஆனால்----

பண்டை அறிஞர்  நெடில் ஒலிகளைப் பெண்ணொலிகள் என்று பாகுபடுத்தினர். அதாவது பூ என்பது ஓரெழுத்தாயும் ஒரு பொருளைக் குறிப்பதாயு மிருத்தலால், அது பெண்ணொலி என்றனர்.  அது எழுத்தொலி மட்டுமின்றி, ஒரு பொருளையும் குறிக்கின்றது.  ஒன்று இன்னொன்றைப் பிறப்பித்தலான்,  அஃது பெண்ணொலி, அதைக் குறிப்பிக்கும் எழுத்து பெண்ணெழுத்து.  அது குறுகி, பு என்று வரின்,   அதனின்று பொருளொன்றும் தோன்றாமையின், அது ஆணெழுத்து ஆகும். புல் என்று ஒரு மெய்யணைந்தாலே  அது சொல்லாகிறது என்று அறிந்துகொள்ளவும்.  அது இனி புலால், புலை, புலி என்று நீண்டு பற்பலவாய் சொற்களாகிவிடும். 

பூ - பெண்ணெழுத்து,  பொருள்  பொதுவாகத் தோன்றுதல்.  பூ : பூ + (உ)ம் + இ = பூமி,   தோன்றுதலும் அதிலிருந்து நிலம் உருக்கொள்ளுதலும்..  பூத்து இங்கு நிலன் தோன்றியது..வானில் பூத்து என்று பொருள் முழுமை ஆகிறது.  பின் பு என்று குறுக,  ஒரு விகுதி இணைந்து, புவி ஆயிற்று.  புவி எனினும் அதுவேயாகும்.  இங்கு ஓர் உயிர்மெய்  (வி) இணைந்து சொல்லாம்.

ஆண் முதலில் உண்டானான் என்பது நடுவண்கீழை நாடுகளில் தோன்றிய கருத்தாக உள்ளது. இதற்குச் சான்று ஆதாம் ஏவாள் கதை.  அதாவது மக்கள் சிந்தித்தது அப்படி.  ஆனால் இந்திய நாட்டில் ஆதிபராசக்தி பற்றிய கதை இருப்பதால்,  பெண்ணே முதலில் தோன்றினாள் என்ப. அதுவும் அவள் சக்தி யாகவே உருக்கொண்டாள்.  சக்தி என்பது அருவம் ஆதலினால், அதைக்  குறியீடுகளால் காட்டுதல் இயலாது. அதனால் அது ஆதிபராசக்தி எனப்பட்டது.  பர சக்தி என்றால் அது தெய்வ சக்தி ஆகும். முதலில் தோன்றியதால்  ஆதி.  ஆதி என்னில் அது ஆக்கம் என்பது.  ஆக்கிய சக்தி.  சக்தி என்பதால் உருவமில்லை.   ஆதலின் குறில் நெடில் என்ற ஒலிகளில்,  நெடிலே தோற்றமாகும்.  குறில் தோற்றமென்று நீங்கள் வாதாடலாம்.

பெரும்பாலான மொழிகளில் நெடிலே சிறப்பாக ஒலிக்கிறது.  குறில்களை அவர்கள் உச்சரிக்கத் திணறுவர்.   கடா என்பதை காடா என்று சொல்லவே அவர்களுக்கு வாயும் நாக்கும் இயல்கின்றன.  இதிலிருந்து என்ன உண்மை தெரிகிறது என்பதை நீங்கள் சொல்லுங்கள். இத்துடன் இதை விடுக.

நீங்கள் கூர்ந்து  செவிமடுத்து நோக்கின்,  திறம் என்பதை ஒலிக்குங்கால்,  றகரத்தை நன்கு ஒலிக்கவருகிறது.  தரித்திரம் என்று சொல் ஒலிக்குங்கால்  இதிலுள்ள ரகரம்,  உண்மையில் றகரமே  ஆனாலும்,  ஒடுங்கியே ஒலிக்கிறது. வறுமையில் செம்மையாய் வாழவேணடுமென்று நம் முன்னோர் உரைத்துள்ளதனால், வறுமை என்பதும்  ஓர்   அணிகலனே என்று நம் முன்னோர் கருதினார்கள்.  பூணத் தகுந்தது வறுமையா என்று ஏழையின் பக்கமாய் நின்று ஒரு கவி கேட்டார்.  ஆம்,  அஃது உம் அணிகளில் ஒன்றாகிவிடுகிறது.  உரிய கவனத்துடன் வெளியில் தெரியாமல் அணிந்துகொண்டு போகவேண்டும்.  இஃது வறுமையிற் செம்மை. பசியின்போது ஒரு நண்பன் வரினும் அவனிடத்துத் தன் பசிபற்றிக் கூறலாகாது. ஆவிற்கு நீரெனினும் இரத்தல் ஆகாது என்பது தமிழன் பண்பாடு.  சாப்பிட்டேன் என்றுதான் சொல்லவேண்டும்.  இதைத்தான் அணிதல் என்று சொல்வர்.  வறுமையைத் தரிக்கிறோம்.  பசியைப் பொறுத்துக்கொள்கிறோம்.  இவை அணிகலன்கள்.    ஆகையினால் தரிக்கும் திறனே தரித்திரம்.   ற என்பது ர  ஆகிவிட்டது,  என்ன காரணத்தால் அது அழுத்தி உச்சரிக்கப்பட்வில்லை என்பதற்கு விளக்கம் ,  சொல் உங்களை மயக்காமல்,  அது தன் அழுத்தம் குன்றி,  திரம் என்றே ஆகும்.  திறம் என்பது ஒரு தனிச்சொல்லாக இல்லாமல் ஒரு பின்னொட்டாக வருமாயின்,  தன் அழுத்தம் இழந்தும் ரகரமாகும்.

தரித்ரம் என்று இன்னும் குறைத்தோருமுண்டு.  திரம் என்று முடியும் பல சொற்களுக்கும் இது பொருந்துவதாகும்.  ஒரு சொல்லாக்கத்தில் இணைந்தபின் அதன் றகரம்,  ரகர மாகிவிடும்.   எ-டு: பாத்திரம்,  பா என்பது பரவலான வாயைக் குறிக்கும்.  திறமாகப் பரவாலான வாயுடன் உருவாக்கப்பட்டது.  கண்களால் ஓரளவு பக்கவாட்டில் பார்க்க முடியுமென்றாலும்,   நேராகத் தோன்றும் பொருள்களைக் கண்கள் பார்க்கும்.  பின்னால் இருந்து வரும் வாசனையை மூக்கு அறியும்.  இத்தகைய ஆற்றல் கண்களுக்கு இல்லை.  அதனால் அவை நேர்த் திறத்தில் மட்டுமே காண்பவை.  " நேத்திரம்".  நேர் என்பதன் ஈற்று ரகரம்  குன்றிற்று..  திரிசொல்.  ஓர்  ர்  ஒழிந்தது. இன்னொரு ற என்பது ர ஆனது காண்க.

பின்னொட்டினை விகுதி எனலும் ஆகும்.இரண்டும் ஒரே  வேலையைத்தான் செய்கின்றன.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

மெய்ப்பு:: 130823 1006



வியாழன், 10 ஆகஸ்ட், 2023

After dinner gathering,

 


விருந்துக்குப் பின்


After a  dinner,  gathering.


புதன், 9 ஆகஸ்ட், 2023

சிங்கை தேசிய தினம்


தாழிசைப்  பாடல்.


ஆசியக் கண்டத்தின்  அதிபுதுமைச் சிறப்புடனே

தேசிய தினத்தைத் தெளிந்துகொண் டாடினையே

மாசறு  நன்னாளில் மாலைவளர் மதிபோலும்

ஆசுறவே  ஏங்கலற ,  அனைத்திலும்நீ ஓங்கிடுக,


கலைஅறி  வியலிலே காசறுவ ணிகத்தினிலே,

நிலைபெறச்சேர் நிதியமொடு நேரிலாத ஒற்றுமையில்

அலைவறியா ஒப்புமையில் அணிபெறவே இனும்பெருகி

உலைவறியாத் திசைநான்கும் தாங்கிவர ஓங்கிடுக..


கட்டிடத்தில் காவலிலே ஒட்டிவளர் உறவுகளில்

கொட்டுவள மழைடனே  கூடுகுடி  நீருடனே

எட்டெனவே எண்ணும்நல் திக்கினிலும் கொடிநாட்டி

மட்டிலாத மன்பதையாய் மாநிலத்தே  ஓங்கிடுக.



அரும்பொருள்:

காசற -  மாசிலாத

ஆசுற -  காவல் முன்னணியிலாகும்   வகையில்

தெளிந்து - எப்படி என்பதை அறிந்து

நிதியம்  சிங்கப்பூர் ஒதுக்கிவைத்துள்ள நாட்டு நிதி.

ஒப்புமை -  மக்களிடையே வேற்றுமை இன்மை

அலைவு  -  அதிர்வு, துன்பம்

இனும் -  இன்னும்  ( தொகுத்தல் விகாரம்)

உலைவு  -  நடுக்கம்

ஏங்கல் -  இல்லை எனும் ஏக்கம்

திக்கு - திசை

மட்டிலாத -  எல்லை குன்றாத

மன்பதை  -  சமுகம்

மாநிலம் - பூமி


அறிக மகிழ்க

மெய்ப்பு:  பின்


சனி, 5 ஆகஸ்ட், 2023

சேவைக்குழும்புகள் Resident Service Companies.

எழுசீர்  ஆசிரிய விருத்தம்.


சீர்சால் செயல்சேர் குழும்புகள் இல்லங்கள் வாழ்பவர் 

தம்மிடைத் தொண்டியற்றி

ஓர்மால் மனமே இலாதவர் பண்பின  ராகவே ஓங்குவர், 

மக்கள் பயன்பெறுவார் ;

நீர்மேல் வருடுநல்  தென்றலைப் போல்குளிர் செய்பண் 

புதவிகள் செய்வரன்னார்,

பார்ப்பீர் படந்தனை,  நன்மனத் தோடிணைப் புற்றுவாழ்த் 

தார்த்திட;  வாழ்கவாழ்க..



சொடுக்கிப் படத்தினைப் பாருங்கள்:

https://www.linkedin.com/posts/em-services-pte-ltd_activity-7093047898619199489-JW-L?utm_source=share&utm_medium=member_android

செயலவர்களின் தலைமை,  திருமதி சுனிதாவை படத்தில் காண்க.



பொருள்:

சேவைக்குழும்புகள்:   வீடமைப்புக் கழக இல்லங்களில் சேவைகள் செய்யும் குழும்புகள் (  கம்பெனிகள்).  இது செயல்சேர் குழும்புகள் எனப்பட்டது.  குழும்பு ="கம்பெனி."

ஓர் மால் மனமே இலாத -  ஒருவித மயக்கமும் கொண்ட மனமும் இல்லாத.  . மால் என்றால் இங்கு பணி செய்வோமா செய்யாது விடுவோமா என்ற இருமனம் இல்லாத.

பண்பினராகவே ஓங்குவர்  - நல்ல குணமுடையோராகவே சிறப்புகள் கொள்வர்.

நீர்மேல் வருடுநல்  தென்றலைப் போல்குளிர் செய்பண் புதவிகள் -   மனத்தைக் குளிர்வித்து மகிழ்வுறுத்தும் நல்ல உதவிகள்.

செய்வரன்னார்  ---  அவர்கள் செய்வர்.

நன்மனத் தோடிணைப் புற்றுவாழ்த் தார்த்திட;  வாழ்கவாழ்க..  ---- நல்ல மனத்தோடு  வாழ்த்துவீர் என்றபடி.  ஆர்த்திட - வாழ்த்தொலி எழுப்ப.

 அறிக மகிழ்க

மெய்ப்பு:  பின்

இந்த ஆசிரியப்பா வெண்டளையில் பெரிதும் இயலுமாறு மறு வடிவமைக்கப் பட்டது.   06082023  1736


வியாழன், 3 ஆகஸ்ட், 2023

Odyssey Poet : Saran.

 Odyssey


Here I stand looking over the edge

I see the face that carries this mind, wavering on the surface of these waters.

Reflections of a melted and disfigured face, I truly see myself and I jump.


Into the depths of the water to find,

What am I finding for?

Lost in the darkness of time,

I edge deeper and deeper as my lungs tighten

and I squeeze the last breath inside of me.


Sucked into a whirlpool, 

I spin and spin, 

Memories after memories,

Feelings after feelings,

People after people, 

Words and actions of my own.


I flutter into the wide spectrum that the water allows for, 

I struggle to hold on to all,

the deeper I go

more comes to me.


I float in the absence of myself,

Of my present.

A presence of nothingness and everything.


I untether myself from the disfigured illusion I have imagined,

And I put myself back together to the way it was,

the way it always supposed to be.


Nothing sinks me,

Nothing anchors me.


An awakening drags me out,

Out of the depths,

Out of the waters,

I fly out and on to the surface,

I stand and spread my wings in the sun and scream.


I am fxxxxxg alive.


BY POET SARAN.

அருகில் என்ற புரிந்துகொள்ளும் "அருகாமை"ச் சொல்

 இச்சொல்லைப் பற்றிக் கூறும் இடுகைகள் எதுவும் இங்கு பதிவிடப் படவில்லை.  ஆதலினால் இதை இன்று கவனித்தறிவோம்.

இச்சொல்லுக்கு உரிய வினைச்சொல்லான " அருகுதல்" என்பது  "அரிதாகக் காணப்படுவது"  என்றோ  "குறைவான தொகையில்......" என்றோ பொருள்கொள்ளப்படவேண்டிய  சொல்லாகும்.   இச்சொல்லை நோக்க,  அருகாமை என்பது  எதிர்மறையாக  " குறையாத தன்மை " உடையதாதல் என்று பொருள்படும் என்று கொள்ளத் தோன்றுகிறது.  ஆனால் இப்பொருளில் இது எங்கும் கையாளப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.  நீங்கள் இத்தகு பயன்பாட்டினைக் காணின்,  எந்த நூலில் எங்குக் கண்டீரென்பதைக் கருத்துரையாகப் பின்னூட்டம் செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.   அருகுதல் என்பதற்கு எதிராகப்  "பெருகுதல்"  என்ற சொல்லிருப்பதனால்,  அருகாமை என்ற சொல் அருகுதலுக்கு எதிர்ச்சொல்லாக வழக்குப்பெறவில்லை என்பது தெளிவு.  எதிர்ப்பொருளில் இதை வாக்கியத்தில் அமைத்து காட்டும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆயின், தமிழில் "அருகாண்மை"  என்றொரு சொல் வழக்கில் இருந்துள்ளது.  இஃது  அருகிலிருத்தலை ஆளுந்தன்மை என்று பொருள்படும். எதுவேனும் ஒன்று அருகிலிருத்தலால் அதை ஏற்றாளும் தன்மை என்று பொருள்கொள்ளுதலே சரியானதாகும்.  "பகைநாட்டின் படைவீடுகள் அருகாண்மையில் கட்டப்பெற்றிருப்பதால்  நம்   அச்சம் ஒரு கட்டுக்குள் இல்லாமலாகிவிட்டது"  என்ற வாக்கியத்தில் இது சரியாகப் பொருள்தரும். இதுபோல், இச்சொல் சரியாகப் பொருள்தரும் வாக்கியங்களை  நீங்களும் வரைந்து நோக்கலாம்.

அருகாண்மை என்பது இடைக்குறைந்து  அருகாமை என்று வரும்.  அப்போது அருகிலிருக்கும் தன்மையைக் குறிக்கவழங்கும். இங்கு இடைக்குறைதலாவது, ணகர ஒற்று மறைதல்.

கூட்டிக்கழித்து நோக்குங்கால், அருகாமை என்பது அருகில் என்ற பொருளில் வருவது ஏற்கத்தக்கதே.  அருகாண்மை என்பதன் சிறப்புப் பொருள் அருகாமையில் நாளடைவில் வீழ்ந்துவிட்டது என்பது வெள்ளிடைமலை.

அருகமை  என்பதே அருகாமை என்று நீண்டுவழங்குகிறது என்பதும் கொள்ளற்பாலதே.   அருகமை என்பதில் அமை என்பது அருகமைவு என்று பொருள்தரும் முதல்நிலைத் தொழிற்பெயர் என்லும் கோடற்குரித்தே.  அருகமைவு > அருகிலமைவு,  இல் உருபு தொக்கது. ஐந்தாம் வேற்றுமை உருபு.

ஒரு சிற்றூரான் "நீங்கள் தேடும் வாத்தியார் வீடு அருகாமையில்தான் இருக்கிறது, நடந்தே போய்விடலாம்"  என்னுங்கால்,   அருகாமை என்பது அருகில் என்றே பொருள்தரும். "குறையாமை" என்று பொருள்தராது. இதைச் சில வாத்தியார்கள் பொருள்தெளிவற்ற சொல் என்று கருதியது, இஃது இரட்டுறலாக வரக்கூடுமான சொல் என்று கருதியதுதான். பேச்சுவழக்கில் இது அருகில் என்ற பொருளில்தான் வருகிறது.  மற்று "குறையாமை" என்ற பொருள், இலக்கிய வழக்கில் மட்டுமே வரத்தக்கது என்பது மட்டுமன்று, அங்ஙனம்  ஆளப்பட்டிருப்பதற்கான இலக்கிய வழக்கு தேடினே கிட்டக்கூடும் என்பதும் உண்மையேயாகும்.    

இன்னொரு காட்டு:  இல்லவள் என்ற சொல்லுக்கு,  இல்லாதவள் என்று பொருளில்லை.  இல்லறத்தாள் என்பதுதான் பொருள்.  ஆயினும் இல் என்பது இல்லம் (வீடு) என்றும் இல்லை ( பேச்சில்: கிடையாது என்பர்)  என்றும் பொருள் உள்ளது.  இதுகொண்டு,  இல்லவள் என்பது தவறாய் அமைந்தது என்று விரித்தல் ஆகாது.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

இஃது மீள்பார்வை செய்யப்பட்டது: 04082023 0805