தம் பற்று என்பதே பின்னர் திரிந்து சம்பத்து என்று மாறினது. த என்ற எழுத்தும் அதன் வருக்கங்களும் ( என்றால் சா, சி, சீ, சு என அந்த வரிசையின் இறுதி வரை ) ச என்றும் வருக்கங்களாகவும் திரியும். இது உண்மையில் ஒரு சிற்றூர்ச் சொல். "ஆவத்து சம்பத்து" என்பார்கள். ( அதாவது ஆபற்றும் தம்பற்று தான்.) பெருவாரியான கிராமத்துச் சொற்கள் சம்ஸ்கிருதமாயின. கிராமம் என்ற சொல்லே கமம் என்பதன் திரிபு.
கம்போங் என்ற சொல்லில் கம் இருக்கிறது, கம்போங் என்ற சொல்லுக்குச் சிற்றூர் என்று பொருள் ( மலாய்). பானுவா அல்லது வானுவா என்பது சில கடலோடிகள் மொழிகளில் வழங்கும். தானா என்பது வானுவா என்பதனுடன் தொடர்பினதா என்று யாம் ஆராயவில்லை. நிற்க.
இலக்கிய வழக்குப் பெறாத ஊர்வழக்குகளை ( கிராமத்துச் சொற்களை ) ஈர்த்துத் தன்னுள் வைத்துக் காப்பாற்றியதற்காக சமஸ்கிருதத்துக்கு நன்றி செலுத்துவோம். பூசாரிகளும் இச்சொற்களைப் பயன்படுத்தினர் என்பதுதான் அற்றை நிகழ்வாகும்.
ஆ பற்று என்பது ஆநிரை பற்றுதலினால் ஏற்பட்ட சொல். எதிரிகள் வந்து ஆக்களைப் பற்றினால் போர் வரும் என்றும் அது பேரிடர் ( ஆபத்து , இற்றைநாள் பொருளில் ) என்றும் பொருள்.
வாழ்நாளில் நாம் பற்றிவைத்திருப்பனவே சம்பத்து, ( கைப்பற்றுதல் என்பதில் பற்றுதல் என்பதன் பொருளை உன்னுக ) அதாவது இவையே தம்பற்று அல்லது தம்பத்து அல்லது சம்பத்து. தனி - சனி முதலிய தகர சகரத் திரிபுகளைக் கருத்தில் கொள்க. தங்கு - சங்கு, அம் விகுதி பெற்றுச் சங்கம் ஆனது காண்க. அரசனின் ஆதரவில் தங்கி அங்குக் கவி பாடிய இடமே சங்கம் ஆனது. இன்னும் பல நம் பழைய இடுகைகளில் காண்க.
சமஸ்கிருதம் என்பது வெளியார் கொணர்ந்த மொழியன்று, நம் பூசாரிகள் பயன்படுத்திய மொழி, இம்மொழியில் இராமகாதை பாடிய புலவர் வால்மிகி ஓர் இந்தியப் புலவர். பாணினி பெயரின் அடிச்சொல் பாண் என்பது.. எல்லோரும் இந்தியரே. சமஸ்கிருதத்தில் வெளியார் சொல் இருத்தலால் வெளிநாட்டு மொழி ஆகிவிடாது. ஆரியர் என்பது ஓர் இனப்பெயர் அன்று. அப்படி இட்லர் கருதி , யூதர் பலரைக் கொன்றதுதான் ஆரியப் படை எடுப்பு, ஆரியப் புலம்பெயர்வு ஆகிய தெரிவியல்களின் தொடர்பில் ஏற்பட்ட கோர நிகழ்வுகள். ஒரு தெரிவியலை ( தியரி) வரலாறு என்பது முட்டாள்தனம். இதைப் பற்றி முன்னர் எழுதியவற்றை அறிக.
த என்பதும் வருக்கமும் ச என்பதும் வருக்கமும் ஆகும் (திரியும்). அவ்வாறே சம்பத்து என்ற சொல் சிற்றூர்களில் உண்டான சொல்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக